Pages
▼
Friday, April 24, 2026
கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு! (தகவல்: ஓராயம்)
கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24 அன்று 'டொரோண்டோ'வில் நடைபெறவுள்ளது. அது பற்றிய ஓராயம் அமைப்பின் அறிவித்தலை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். தமிழர் வரலாற்று நூல்களில் இந்நூல் மிகவும் முக்கியத்துவம் மிக்கது. யாழ்ப்பாண நகரின் பெளதிகக் கட்டமைப்பு, கட்டடச்சூழல் போன்றவற்றின் அடிப்படையில் நகரின் வரலாற்றை அணுகுவது இந்நூலின் முக்கிய சிறப்பம்சம்.
இத்தகவலை உங்களுக்குத் தெரிந்தவர்களுடன், தெரிந்த அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்விதமான நூல்களுக்கு ஆதரவளிப்பது நம் கடமை. ஆதரவளிப்போம்! நூல் வெளியீட்டை வெற்றிகரமானதாக்குவோம்!

No comments:
Post a Comment