Pages
▼
Monday, April 27, 2026
வ.ந.கிரிதரனின் பாடல்: காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
நாளின் பிறப்பை நமக்கெல்லாம் எடுத்துரைக்குமே
எங்கும் புத்துணர்ச்சி. எதிலும் புத்துணர்ச்சி.
பொங்கிப் பெருகும் புத்துணர்ச்சி எங்குமே.
காலையின் பண்பு புத்துணர்வு ஆகுமே.
நாளைத் தொடங்குவதற்கு நல்கும் செயலாகுமாம்.
காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்குமேகுருவிகள் வாழ்த்துப் பா இசைக்குமாம்.
குளங்களில் தாமரை இதழ் விரிக்குமாம்.
தண் கதிர் பரப்பும் கதிர்தனின்
தண் அணைப்பில் உலகம் விழிக்குமாம்.
காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்குமே.
இருள் நீங்கும் ஒளி பிறக்குமாம்
இருப்பில் இடர் நீங்குமாம்.
இடர் நீங்கிக் களி பிறக்குமாம்.
இதுதான் காலை கூறும் அறிவுரையாம்.
காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்குமே.
வாழ்க்கையில் சவால் கண்டு தளராதீர்.
வளம் வரும்., நலம் மிகுமே.
பகல் பிறப்பதும் அது போல்தானே.
பாரில் எங்கும் ஒளி பிறக்குமே.
காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்குமே.
No comments:
Post a Comment