எம்ஜிஆர் & பத்மினி இருவரின் நடிப்பில் ஜொலிக்கும் இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படப்பாடல்களில் ஒன்று. முக்கிய காரணம் - எம்ஜிஆரின் நடனத்திறமை.
எம்ஜிஆர் மிகச்சிறந்த நர்த்தகர் என்பதை வெளிப்படுத்தும் பாடல் இது. பத்மினியைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். நாட்டியப்பேரொளி அவர். அவருடன் கூட எம்ஜிஆர் நடித்திருக்கும் இப்பாடலைப் பார்க்கும்போது அவரை விட அதிகமாக ஒளர்வது எம்ஜிஆர்தான் என்றுதான் நான் உணர்கின்றேன். காரணம் - பாடல் முழுவதும் வியாபித்துக்கிடக்கும் எம்ஜிஆரி உடல் அசைவுகள்.
குறிப்பாக பாடலின் ஆரம்பத்தில் 43 - 59 செக்கனில் எம்ஜிஆரின் உடல் அசைவுகளைக் கூர்ந்து பாருங்கள். தலைப்புறம் என்ன மாதிரி ஏனைய உடலின் பாகங்களிலிருந்து வேறுபட்டு ஆடுகின்றது. அசைகின்றது. அற்புதம்! தேர்ந்த நர்த்தகர் ஒருவரால் மட்டுமே இவ்விதமான உடல் அசைவுகளை வெளிப்படுத்த முடியும்.
இவ்விதமாகப் பாடல் முழுவதும் நடனத்திறமையை வெளிப்படுத்தும் உடல் அசைவுகள், முக அசைவுகள் பத்மினியை விட அதிகம் இருப்பதால்தான் எம்ஜிஆர் இப்பாடலில் பத்மினியை விடச் சிறிது அதிகமாக என்னைக் கவர்கின்றார்.
https://www.youtube.com/watch?v=-cyfzYIXK8g
படம் - மதுரை வீரன்
பாடகர்கள் - டி.எம்.எஸ் & ஜிக்கி
இசை; ஜி.ராமநாதன்
பாடலாசிரியர் - தஞ்சையா என்.ராமையாதாஸ்
டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி வழி வநகி
Pages
▼

No comments:
Post a Comment