Pages

Friday, July 31, 2026

வளை என்னும் சொல்லால் எம்மை வளைக்கும் கவியரசர்!


கவிஞர், இசையமைப்பாளர், பாடகர்கள் &  நடிகர்கள் அனைவரின் திறமையான அம்சங்களையெல்லாம் ஒன்று  திரட்டு உருவான பாடல்களில் இந்தப்பாடலும் ஒன்று. காதலர்கள்  இருவரின் காதல் உணர்வுகளை உற்சாகம் ததும்ப வெளிப்படுத்தும் இசை, நடிப்பு, குரல் , நடன வடிவமைப்பு , மொழியால் இப்பாடலைக் கேட்கும் எவரும் ஈர்க்கப்படுவர் என்பது திண்ணம். 

ஜெயலலிதாவின் நர்த்தனச் சிறப்பையும், அதற்கு ஈடு கொடுக்கும் எம்ஜிஆரின் துள்ளல் நடிப்பையும் , துள்ளல் இசையையும் , வளை என்னும் சொல்லை வைத்து எம்மை வளைத்துப் பிடிக்கும் கவியரசரின் இலாகவத்தையும், அவவ்ரிகளில் வெளிப்படும் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடகர்களும்  கேட்பதில் இன்று வரை எனக்குச் சலிக்கவில்லை.  இன்னுமொன்று - வசீகரம் மிக்க நடிகர்கள் இருவரின் வசீகரத்தை  வெளிப்படுத்துவதிலும் பாடல் வெற்றி பெற்றுள்ளது. [டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா ]


படம் -புதிய பூமி
இசை - எம்.எஸ்.வி
பாடல்  வரிகள் - கவிஞர் கண்ணதாசன்
குரல் - டி.எம்.எஸ் & பி.சுசீலா
நடிப்பு - எம்ஜிஆர் & ஜெயலலிதா

ஆண்; 

சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு

பெண்;

வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
பூங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு
கேட்பதற்கு இனிமையான

ஆண்;

தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
சுகம் பட்டால் பட்டால் படியும்

பெண்;

கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணால் சொன்னால்
பக்கம் வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ

வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு

ஆண்;

என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
கேட்பதற்கு இனிமையான

பெண்:

வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறக்கும்
வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறக்கும்
நீ அவளை விட்டுப் போகும் வரை
அது இங்கே இங்கே இருக்கும்

ஆண்>

மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை
அசைத்தால் அசையாதோ
மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை
அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று
பெண்மை கெஞ்சும் வரை
சுவைத்தால் சுவைக்காதோ

பெண்;

வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொண்டாய் வளையிட்டு
பூங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப் போல் பூப் போல் தொட்டு

ஆண்:

சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக் கொண்டேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொண்டேன் வளையிட்டு

No comments:

Post a Comment