Sunday, August 18, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: தமிழும் திராவிடமும்!



                                                            இசை & குரல்: AI SUNO

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=gz9j9nQQpJU

தேவநேயப் பாவாணரின் நூல்: திரவிடத்தாய்

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

திரவிடம் மூலம் தமிழம்
திராவிட  மூலம் திரவிடம்.
திராவிட மொழிகள் அனைத்தும்
தமிழ் மொழியின்  குழந்தைகளே.

தேவநேயப் பாவாணார் சொன்னார்.
திராவிட  மூலம் திரவிடமே.
திரவிடத்தின் மூலம் தமிழமே.
திராவிடத்தின் மூலம் தமிழே.

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

குழந்தைகள் கோபம் கொண்டாலும்
தாய் வன்மம் கொள்வதுண்டோ?
தன் குழந்தைகள் எதிர்ப்பினும்
தாய்த்  தமிழ் தளும்புவதில்லை.

தமிழன்னை பொறுமை மிக்கவள்.
தமிழன்னை கண்ணியம் காப்பவள்.
தமிழன்னை கடமையில் ஊறியவள்.
தமிழன்னை கட்டுப்பாடு உடையவள்.

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

தமிழ்க் குழந்தைகளே மோதாதீர்.
தாயின்  வழி செல்வீர்.
தமிழ் உங்கள் தாய்
திராவிட  மண்ணின்  குழந்தைகளே.

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

தமிழே திராவிடம் ஆகும்.
திராவிடமே திரவிடம் ஆகும்.
திரவிடமே தமிழம் ஆகும்.
தமிழே திராவிடம் ஆகும்.

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

தேவநேயப் பாவாணர் சொன்னது இதுதான்.
தமிழ் ஆய்வில் அறிஞர் அவர்
சொல்லியது இதனைத் தான்.
சொல்லியது இதனைத் தான்.



No comments:

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எ...