Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Tuesday, August 11, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.


வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்! 
வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.  
டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி 

முகநூல் , இன்ஸ்டாகிராம், டிக்டொக் போராளிகள் இவர்
முகமற்றவர்கள்  முட்டி மோதுபவர்கள் இவர்

அவச்சொல் தவிர்ப்பீர்!
சமூக ஊடகப் போராளிகளே!
சரி பிழை சொல்வதற்குச்
சரியாக இருங்கள்!

நாகரிகம் நாணும் சொற்களால்
நாளும் அர்ச்சனை செய்பவர்கள்.
ஆய்வு என்று தருவதெல்லாம்
அரை வேக்காட்டுக் குப்பைகளே

Thursday, August 6, 2026

காலத்தால் அழியாத கருததாழம் மிக்க பாடல் - நான் ஏன் பிறந்தேன்? - கவிஞர் வாலி


எம்ஜிஆரின் ஆளுமை இன்றுவரை நிலை பெற்றிருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவரது படத்தில் இடம் பெறும் இதுபோன்ற கருத்தாழம் மிக்க,ஆரோக்கியமான உணர்வுகளைத் தூண்டும், வாழ்க்கைக்கு வழி காட்டும் பாடல்கள். எனக்கு மிகவும் பிடிக்கும்.
உளவியலின் படி மனத்தை ஒரு விடயத்தில் ஒன்ற வைப்பது மிகவும் சிரமம். ஆனால் இயற்கையை இரசிக்கும்போது, காதலுக்குரியவரை நினைக்கும்போது, பிடித்த சினிமாவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அந்த குரங்கு மனமானது ஓரளவு ஒரு விடயத்தில் குவிந்து விடுகின்றது. அச்சமயத்தில் கூறப்படும் விடயங்கள் பார்ப்பவரின் ஆழ்மனத்தில் சென்று படிந்து விடுகின்றன. அப்படிப் படிந்து விட்டால் பின்னர் அது அவரை வாழ்க்கையில் வழி நடத்திச் செல்லும். இவ்விதம் பதியப்படும் விடயங்கள் நேர்மறையானவையாக இருந்தால் அவை நேர்மறையா விளைவுகளைத்தரும். எதிர்மறையானவையாக இருந்தால் எதிர்மறை விளைவுகளைத்தரும். அதனால்தான் எம்ஜிஆர் தொடர்ச்சியாகத் தன் படங்களில் நல்ல கருத்துகள் அடங்கிய பாடல்களை இடம் பெறச் செய்தார்.
அமெரிக்க அதிபர் ஜோன் எஃப் கென்னடியின் புகழ்பெற்ற , 'நாடு என்ன செய்தது என்று கேட்காதே. நீ அதற்கு என்ன செய்தாய்' என்னும் உரையின் தாக்கத்தால் கவிஞர் வாலி எழுதிய பாடல்.
யாழ் ராணி திரையரங்கில் பார்த்த திரைப்படங்களில் ஒன்று.

Friday, July 31, 2026

வளை என்னும் சொல்லால் எம்மை வளைக்கும் கவியரசர்!


கவிஞர், இசையமைப்பாளர், பாடகர்கள் &  நடிகர்கள் அனைவரின் திறமையான அம்சங்களையெல்லாம் ஒன்று  திரட்டு உருவான பாடல்களில் இந்தப்பாடலும் ஒன்று. காதலர்கள்  இருவரின் காதல் உணர்வுகளை உற்சாகம் ததும்ப வெளிப்படுத்தும் இசை, நடிப்பு, குரல் , நடன வடிவமைப்பு , மொழியால் இப்பாடலைக் கேட்கும் எவரும் ஈர்க்கப்படுவர் என்பது திண்ணம். 

பாடகி ஜமுனாராணி மறைந்தார்! நினைவில் நிற்கும் பாடகி ஜமுனாராணியின் பாடல்கள்!


தமிழ்த்திரையுலகு எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஆளுமைகளில் ஒருவர் பாடகி ஜமுனாராணி. கலைஞர்கள் இழப்பதில்லை,. அவர்கள்தம் படைப்புகள் மூலம் காலத்தில் நிலைத்து நிற்பார்கள். ஜமுனாராணியும் அவர்தம் பாடல்கள் மூலம் காலத்தில் அழியாது நிலைத்து நிற்பார்.

அவரை நினைத்ததும் என் நினைவுக்கு முதலில் வரும் பாடல்கள் இரண்டு. ஒன்று நெஞ்சினிலே நினைவு முகம் , மற்றது மாமா மாமா மாமா பாடல்களே, அவர் பாடிய பாடல்களுக்கான இணைப்புகளையும் அவர் நினைவாகப் பகிர்ந்துகொள்கின்றேன். [டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி]

மாமா மாமா மாமா - https://www.youtube.com/watch?v=oREibjUo8D0

என்னைக் கவர்ந்த ஏ.வி.எம்.ராஜன்!


அண்மையில் ஜூலை 26 அன்று தனது தொண்ணூறாவது பிறந்த நாளைக் கொண்டாடினார் நடிகரும் , போதகருமான ஏ.வி.எம்.ராஜன். எனக்குப் பிடித்த நடிகர்களில் இவருக்கும் முக்கியமானதோர் இடமுண்டு. எந்தப் பாத்திரமானாலுன் அலட்டிக்கொள்ளாமல் நடிப்பதில் வல்லவர்.

அமைதி தவழும், புன்னகையுடன் கூடிய இவரது முகம் இவரது முக்கிய பலமான அம்சங்களில் ஒன்று. திரையுலகில் நீடித்து நின்றிருக்க வேண்டிய ஒருவரை அதே திரையுலகம் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியது துரதிருஷ்ட்டமானது. ஆனால் அதற்காக இவர் தளர்ந்து போய் விடவில்லை. இருப்பைச் சவாலுடன் ஏற்று நடை போட்டவர்.

வாழ்வின் பல்வேறு பக்கங்களையும் வெளிப்படுத்தும் வேடங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும், குடும்பப்பாங்கான கதையம்சம் கொண்ட பல படங்களில் இவர் நடிப்பு நினைவில் நிற்கும் வகையில் அமைந்திருக்கும். [டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி]

என் அபிமானத்துக்குரிய நடிகர் ஏ.வி.எம் ராஜன் திரைப்படப்பாடல்கள் சிலவற்றில் எனக்குப் பிடித்த பாடல்கள் இவை.

நெஞ்சினிலே நினைவு முகம் - https://www.youtube.com/watch?v=b66g5A47PWw&list=PLHiu8RqwSsJR-N7gmGMY20AFwEwA6ig4Z&index=19
நாதஸ்வர ஓசையிலே - https://www.youtube.com/watch?v=EbATCXKrN94
பார்த்தேன் சிரித்தேன் - https://www.youtube.com/watch?v=aXtdRLIq99U...
மாலை நேரத்து மயக்கம் - https://www.youtube.com/watch?v=VmQBdMr5qOA

Tuesday, July 28, 2026

வ.ந.கிரிதரன் பாடல் - பொறுப்புணர்ந்து செயற்படுவீர்! வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5


வ.ந.கிரிதரன் பாடல் - பொறுப்புணர்ந்து செயற்படுவீர்! 
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி 

திரையில் விம்பங்கள் கண்டு புல்லரிக்கின்றீர்.
தரையில் கால்படாத  விம்பங்கள் அறிவீரா?

நிழலை நிஜமாக எண்ணி நடைபோடுகின்றீர்.
நிஜத்தை அறிவதற்கும் ஆர்வமில்லை உமக்கு.
பகுத்தறியும் பண்பற்றுத்  தூங்குகின்றீர் மானிடரே..
தொகுத் துணர்ந்து தெளிவதுதான் எப்போது?

திரையில் விம்பங்கள் கண்டு புல்லரிக்கின்றீர்.
தரையில் கால்படாத  விம்பங்கள் அறிவீரா?

(ரொக் இசை) வ.ந.கிரிதரன் பாடல்: விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி! வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5


(ரொக் இசை) வ.ந.கிரிதரன் பாடல்: விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி! வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி

விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
நம்பிக்கை உன்மேல் வைத்து நடைபோடு தம்பி!

திரையில் நடிப்பவர் நடிகர் உணர்வாய் தம்பி.
உரைத்திடும் எவையும் உண்மை அல்ல நடிப்பே.
உண்மை இது உணர்ந்து நடைபோடு தம்பி.
உயர்வு நிச்சயம் அடைந்திடுவாய் உணர்வாய் தம்பி.

Sunday, July 26, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி! வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5


வ.ந.கிரிதரன் பாடல்: விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி!
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி

விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
நம்பிக்கை உன்மேல் வைத்து நடைபோடு தம்பி!

திரையில் நடிப்பவர் நடிகர் உணர்வாய் தம்பி.
உரைத்திடும் எவையும் உண்மை அல்ல நடிப்பே.
உண்மை இது உணர்ந்து நடைபோடு தம்பி.
உயர்வு நிச்சயம் அடைந்திடுவாய் உணர்வாய் தம்பி.

விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
நம்பிக்கை உன்மேல் வைத்து நடைபோடு தம்பி!

Saturday, July 18, 2026

சோமசுந்தரப் புலவர் பாடல் - கத்தரி வெருளி


எம் பால்யப் பருவத்தில் சோமசுந்தரப்புலவரின் கத்தரி வெருளி,  இலவு காத்த கிளி, ஆடிப்பிறப்பு, வெண்ணிலா, பவளக்கொடி போன்ற பாலர் பாடல்களுடன் வளர்ந்தவர்கள் நாம்.  அப்போது நான் வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன்,. குருமண்காட்டிலிருந்து ஸ்டேசன் வீதி வழியாகப் பாடசாலை செல்வோம். ஸ்டேசன் வீதியில் ராமச்சந்திரன் டீச்சர் வீடு வரையில் , வீதியின் வலப்பக்கத்தில் வயல் பசுமையாக விரிந்திருந்தது. அதில் ஒரு கத்தரி வெருளி வைத்திருந்தார்கள். அதைப்பார்த்துத்தான் பாடசாலை செல்வோம். அதனால் அக்கத்தரி வெருளி எம் மனத்தில் நிலையாகப் பதிந்து விட்டது,. அதனால் அதனை நினைத்ததும் சோமசுந்தரப் புலவரின் கத்தரி வெருளி நினைவுக்கு வரும். அதுபோல் புலவரின் பாடலை நினைத்ததும் அந்தக் கத்தரி வெருளி நினைவுக்கு வரும்.

இன்னுமொரு விடயத்திலும் புலவரின் இந்தக் கத்தரி வெருளி பாடல் எனக்குப் பிடிக்கும், அதற்குக் காரணம் கத்தரி வெருளியூடு புலவர் கூறும் நீதி. பாடலின் இறுதியில் வரும் பின்வரும் வரிகள் இப்பாடலின் சிறப்பை மேலும் அதிகரிக்கும்:

"தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
          துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
          துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்

     சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
          தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
          தெரிய வந்ததுன் வஞ்சகம் .....

சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
          தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
          தேசத்திலே பலர் உண்டுகாண்

     அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
          அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்
          அறிவு படைத்தனன் இன்றுநான்"

உண்மைதான் கத்தரி வெருளி போன்ற போலி வேடக்காரர்தாம் எத்தனை பேர்! சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைகள்தான் எத்தனை பேர்! 

புலவர் கத்தரி வெருளியூடு பாலருக்கு மகிழ்ச்சியளிக்கும் பாடலைத் தந்தார். கூடவே சமுதாயத்தில் போலி வேடத்தில் மறைந்திருக்கும் போலி வேடதாரிகளையும் அம்பலப்படுத்தினார். நீதிக்கருத்தினை எவ்வளவு அற்புதமாகப் பாலர் பாடலில் கையாண்டுள்ளார் புலவர்! பிரச்சாரமற்ற கலைத்துவம் என்பது இதனைத்தான்!

Friday, July 17, 2026

சோமசுந்தரப் புலவர் பாடல்: ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5


சோமசுந்தரப் புலவர் பாடல்: ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி 

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

Wednesday, July 15, 2026

எம்ஜிஆரும், இரசிகர்களும்!


எம்ஜிஆரைப் பொறுத்தவரையில் தன் இரசிகர்களை மிகவும் மதிப்பார். இரசிகர்களின் வர்க்கப்பின்னணியையோ, சமூகப்பின்னணியையோ வைத்து அவர்களை அணுக மாட்டார். அவரைக்காண வரும் இரசிகர்களை அன்புடன் அரவணைத்து வரவேற்பார். முகம் சுளிக்க மாட்டார்.

ஒரு முறை 'இதயக்கனி' படப்பிடிப்பின்போது , நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அவரது இரசிகர்களான இளைஞர்கள் இருவர் அவரைப்பார்க்க வேண்டுமென்று நீந்தி வந்து அவரை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள். அவரை எவ்விதம் எம்ஜிஆர் வரவேற்றார் என்பதை இப்புகைப்படக் காட்சி காட்டுகின்றது. 

Saturday, July 11, 2026

எஸ்.ஜானகி - தன் கூவலை நிறுத்திய இசைக்குயில்!


அடுத்தடுத்துத் தமிழ்த்திரையுலகின் ஆளுமைகளை இழந்து கொண்டிருக்கின்றோம். இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜா என்று இன்று தென்னிந்தியாவின் இசையரசி என்றழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகியை இழந்திருக்கின்றோம். இவர்  பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பங்குபோட்டுக்கொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்.

இசை, நடிப்பு, எழுத்து, பாட்டு,  பேச்சு எனப் பல் துறைகளில் எம் இன்பதுன்பங்களில் பங்கு பற்றும் கலைஞர்கள் தம் கலைப்படைப்புகள் மூலம் எம் வாழ்வில் பின்னிப்பிணைந்தவர்கள். எம் இருப்பில் அவர்களுக்கு முக்கியமானதோர் இடமுண்டு. இவர்கள் மறைந்தாலும் இவர்கள் வழங்கிய கலைப்படைப்புகளுக்கு அழிவில்லை. அவை நிரந்தரமானவை. அவ்வகையில் தாம் சிறந்து விளங்கிய கலைகளூடு இவர்கள் மானுட சமுதாயத்தின் வரலாற்றில் தொடர்ந்தும் பயணிப்பார்கள்.

Friday, July 10, 2026

வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.


வ.ந.கிரிதரன் பாடல் - சக்தியும் , பொருளும்!
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி

சக்தியும் , பொருளும்!

கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!

பொருளென்று ஒன்றும் இல்லை என்றுகூறும்
பவுதிகத்தின் வழிநின்று பார்த்தால் கண்ணே!
அடிப்படைத் துணிக்கைகளும் சக்தியன்றோ கண்ணம்மா!
சக்தியின் நாட்டியமா நம்மிருப்பும் கண்ணம்மா!

கண்ணம்மா, என் கண்ணில் உன்தோற்றம்
எண்ணத்தின் விளைவா? இல்லையா கண்ணே!

Wednesday, July 8, 2026

வ.ந.கிரிதரன் பாடல் - கரியாலை நாகபடுவான் வாவி! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.


வ.ந.கிரிதரன் பாடல் - கரியாலை நாகபடுவான் வாவி
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி

காட்டின்  நடுவிலொரு சொர்க்கச் சாவி
கரியாலை நாகபடுவான் என்னும்  பெருவாவி.

நாகராம் தமிழரெம் புனிதபூமி அன்றோ!
நம்தமிழர் வரலாற்றின் சின்னம் அன்றோ.
படுவம் என்றால்  பள்ளம், நீர்நிலை
படுவான் என்றாலும் பெருவாவி என்றும்
பொருள் உண்டு சங்கப் பாடலில்.
மேற்கு என்றும் மற்றோர் பொருளுமுண்டு.
பெருங்கற் பண்பாட்டுச் சின்னம் என்றே
பகர்ந்திடுவர் நாகபடுவான் வாவி தனையே.

Thursday, July 2, 2026

கருந்துளை (Black Hole) குறும்படம் பார்த்தேன்! என்னையும் அதற்குள் இழந்தேன்!



["THE BLACK HOLE" Short Film Pick Featured by NineJunctions Written & Directed by Philip Sansom & Olly Williams (Phil and Olly) ]

கருந்துளை (Black Hole) குறும்படம் பார்த்தேன்! என்னையும் அதற்குள் இழந்தேன்!
இந்தக் குறும்படத்தை முழுமையாகப் பார்க்கவும். அற்புதமான குறும்படம். கருந்துளை என்பது காலவெளியின் முடிவு. அதனுள் போகும் எவரும், எவையும் மீண்டும் இந்தப் பிரபஞ்சத்திற்குத் திரும்ப முடியாது என்பது அறிவியல் உண்மை.
இந்த உண்மையினை நாம் வாழும் காலவெளியில் வாழும் மானுடர் , அவர் உருவாக்கிய சமூக, பொருளாதார & அரசியல் அமைப்புக்குள் சிக்கி, அல்லற்படும் நிலை நிலையினை அன்றாடம் காண்கின்றோம் அல்லவா. அளவுக்கு மிஞ்சிய பேராசைக்குள் சிக்கி உழலும் பலரைக் காண்கின்றோம் அல்லவா.
இந்த மானுடரின் உளவியலையும், அறிவியல் உண்மையினையும் கலந்து , சிறப்பாக உருவாக்கப்பட்ட குறுந்திரைப்படம்தான் கருந்துளை. இவ்விதமான திரைப்படங்களை உருவாக்குவதற்கு படைப்பாற்றல் முக்கியம்.
இந்தக் குறுந்திரைப்படத்தின் படைப்பாற்றல் என்னைப் பிரமிக்க வைக்கின்றது.
இக்குறுந்திரைப்படத்தை முடிவு வரை பாருங்கள் - https://youtu.be/RSmjqss0XKQ?si=qUQuoT7Dv1QzOpGl

நான் உன்னிமேனனின் குரலுக்கு அடிமை!


நான் உன்னிமேனனின் குரலுக்கு அடிமை என்று கூறிக்கொள்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் எனக்கு இல்லை. 

இதயத்தை வருடிச் செல்லும் அவரது குரல் கேட்பவர்  மனத்தைச் சாந்தப்படுத்தும், இதமாக்கும் சக்தி மிக்கது.

'வருசமெல்லாம் வசந்தம்' என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை ஒரு தடவை கண்களை மூடிக்கொண்டு கேட்டுப்பாருங்கள்.  நான்  கூறுவதன் அர்த்தம் புரியும்.

நடிகர் மனோஜ்ஜின் ஒரேயொரு ஹிட் திரைப்படம் 'வருசமெல்லாம் வசந்தம்'.  அவர் இன்னும் நீண்ட  காலம் இருந்திருக்கலாம் என்று இப்பாடலைக் கேட்கும் சமயங்களில் எண்ணுவதுண்டு. அவரது அமைதியான நடிப்பும், அப்பாவித்தனமான சிரிப்பும் என்னைக் கவர்ந்தவை.

இசை - சிர்பி. பாடல் வரிகள் - ஆர்.ரவிசங்கர்.  பாடலாசிரியரும் அமரராகி விட்டார்.

இவ்விதமான பாடல்களை மேடைகளில் பாடகர் பாடுவதைக் கேட்பதை விரும்புபவன் நான். காரணம் பாடகரின் குரலை, பாவங்களை, இசைக்கலைஞர்களின் வாத்திய இசையாளுமையினை நேரில் பார்த்து இரசிக்கலாம் என்பதுதான்.

ஒரு முறை நேர்காணலொன்றில் , இயக்குநர் விக்கிரமன் என்று நினைக்கின்றேன், கூறியிருந்தார் 'உன்னிமேனனின் பாடல்களைத்  தொலைதூரக் கார்ப்பயணங்களில் கேட்டுச் செல்வதாக. ஆம்! பயணங்களை இனிமையானதாக்கும் குரல் இனிமை உன்னி மேனனின் குரலினிமை என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.  இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொரு தடவையும் நான் பல தடவைகள் மீண்டும் மீண்டும் கேட்பதுண்டு. 

பாடலைக் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=AUu3BOFUsCQ

[டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா 2}

Wednesday, June 10, 2026

'இமயம்' சாய்ந்தது: இயக்குநர் பாரதிராஜா மறைவு!

 - இயக்குநர் பாரதிராஜா -

இயக்குநராக, தயாரிப்பாளராக, திரைக்கதை  ஆசிரியராக, நடிகராக எனப் பன்முக ஆற்றல் பெற்ற கலைஞர் அவர்.

நாடகத்தனமான வசனங்களும், 'செட்'டுகளும் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த்திரையுலகுக்கு  உயிர்த்துடிப்புடன் கூடிய   கிராமத்து மண்ணை அறிமுகப்படுத்திவர் 'இயக்குநர் இமயம்' என்று அறியப்பட்ட பாரதிராஜா. அண்மைக்காலமாக அவர் பற்றி வெளியான செய்திகளின் அடிப்படையில் அவர் விரைவில் மறைவார் என்னும் எண்ணம் தோன்றியிருந்த போதும், உண்மையில் அவர் மறைந்த செய்தி அதிர்ச்சியைத்தான் தந்தது. பேரிழப்புத்தான்.

இவரது திரைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்தவை: பதினாறு வயதினிலே, கிழக்கே  போகும் ரயில், முதல் மரியாதை, வேதம் புதிது, கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே, மண் வாசனை .  இ வை உடனே நினைத்ததும் நினைவுக்கு  வந்தவை. இப்படைப்புகள் பாரதிராஜாவின் புகழைக் கலையுலகில் நிறுத்தி வைக்கும். இவர்  இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரையும் நானும் பகிர்ந்து கொள்கின்றேன்.



Thursday, May 28, 2026

பாரதியார் பாடல் : நிலாவும் வான்மீனும் வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.


பாரதியார் பாடல் : நிலாவும் வான்மீனும்
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
டிஜிட்டல் ஓவியம் -  சாட்ஜிபிடி வழி வநகி


நிலாவும் வான்மீனும் காற்றும்
மனத்தை வாழ்த்துதல்

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி படைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ!

பாரதியார் பாடல் : காற்று வெளியிடைக் கண்ணம்மா வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.


பாரதியார் பாடல் : காற்று வெளியிடைக் கண்ணம்மா 
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
டிஜிட்டல் ஓவியம் -  சாட்ஜிபிடி வழி வநகி


காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்

பாரதியார் பாடல்: 'நடிப்பு சுதேசிகள்' வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


பாரதியார் பாடல்:  'நடிப்பு சுதேசிகள்'
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.
டிஜிட்டல் ஓவியம் -  சாட் ஜிபிடி வழி வநகி


    நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
    வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
    வாய்ச் சொல்லில் வீரரடி.

    கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
    நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
    நாளில் மறப்பா ரடீ

        அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
    உச்சத்திற் கொண்டா ரடீ - கிளியே
    ஊமைச் சனங்க ளடீ!

    ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
    மாக்களுக் கோர் கணமும் - கிளியே
    வாழத் தகுதி யுண்டோ ?

   நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
    வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
    வாய்ச் சொல்லில் வீரரடி.

வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.

வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்!  வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.   டிஜிட்டல் ஓவியம் - கூகுள் ந...