வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்!
வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.
டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி
முகநூல் , இன்ஸ்டாகிராம், டிக்டொக் போராளிகள் இவர்
முகமற்றவர்கள் முட்டி மோதுபவர்கள் இவர்
அவச்சொல் தவிர்ப்பீர்!
சமூக ஊடகப் போராளிகளே!
சரி பிழை சொல்வதற்குச்
சரியாக இருங்கள்!
நாகரிகம் நாணும் சொற்களால்
நாளும் அர்ச்சனை செய்பவர்கள்.
ஆய்வு என்று தருவதெல்லாம்
முகநூல் , இன்ஸ்டாகிராம், டிக்டொக் போராளிகள் இவர்
முகமற்றவர்கள் முட்டி மோதுபவர்கள் இவர்
ஆபாசத்தைப் பார்ப்பதில் மகிழ்வார்.
ஆபாசத்தைக் கேட்பதில் மகிழ்வார்.
ஆபாசத்தைச் சொல்வதில் மகிழ்வார்.
ஆபாசமென்றும் பொங்கியும் எழுவார்.
சமூக , ஊடகப் போராளிகள் இவராம்.
சமூக, ஊடக ஆய்வாளர்கள் இவராம்.
நாகரிகக் கோமாளிகளே ஒதுங்குங்கள்.
நல்லது செய்யப் பழகுங்கள்.
முகநூல் , இன்ஸ்டாகிராம், டிக்டொக் போராளிகள் இவர்
முகமற்றவர்கள் முட்டி மோதுபவர்கள் இவர்
ஆல் போல் வளர்ந்திருப்பார்.
ஆய்வாளர்போல் செயற்படுவார்.
இவர் தரும் தொல்லையோ
தாங்க முடியாத தொல்லை.
நற்பண்புச் சொற்களை உதிர்ப்பீர்.
நயமாக உரைகளைத் தருவீர்.
நல்லவை நடப்பதற்கே செயற்படுவீர்.
அல்லவை என்றால் பொங்கிடுவீர்
முகநூல் , இன்ஸ்டாகிராம், டிக்டொக் போராளிகள் இவர்
முகமற்றவர்கள் முட்டி மோதுபவர்கள் இவர்
No comments:
Post a Comment