Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Thursday, October 22, 2026

டொரோண்டோ பெரும்பாகத்திலுள்ள நூலகங்களுக்கு உங்கள் நூல்களை விற்க விரும்புகின்றீர்களா?


டொரோண்டோ பெரும்பாகத்திலுள்ள நூலகங்களுக்கு உங்கள் நூல்களை விற்க விரும்புகின்றீர்களா? 

டொரோண்டோ நூலகத்தின் சேகரிப்புப் பிரிவுக்கு எழுத்தாளர்கள் நேரடியாக நூல்களை விற்பது பற்றி எழுதியிருந்தேன். உடனடியாக   மூத்த சேகரிப்பு நிபுணர் (Senior Collections Specialist)  நிக்கோல் கோக்கர் (Nicole Coker) பதில் அனுப்பியிருந்தார். மிகவும் பயனுள்ள பதில், உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். 

நூலகத்துக்கு விற்க விரும்பும் நூல்கள் பற்றிய விபரங்களை ,  எனக்கு வந்த ஆங்கில மின்னஞ்சலை இப்பதிவின் இறுதியில் தந்திருக்கின்றேன். பாவித்துப் பயன் பெறுங்கள்.

Tuesday, October 13, 2026

கிழக்கில் பறங்கியர்!


இலங்கையில் வாழும் பறங்கி இன மக்களைப்பற்றிய தவகரனின் இந்தக் காணொளி என் கவனத்தை ஈர்த்தது. காணொளி இன்னும் சிறப்பாக ஆய்வுக் கண்ணோட்டத்துடன் , முற்கூட்டியே நன்கு தயாரிக்கப்பட்ட வினாக்களுடன் எடுக்கப்பட்டிருந்தால் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்., இருந்தாலும் பறங்கியர் சமூகம் பற்றிய காணொளி என்னும் வகையில் இக்காணொளிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. இது போன்ற காணொளிகள் அதிக அளவில் வெளிவர வேண்டும். எம்முடன் வாழும் ஏனைய இன மக்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு, புரிந்து கொள்வதற்கு இவை மிகவும் உதவியாகவிருக்கும்.

பொதுவாகப் பறங்கியர் இலங்கையை ஆட்சி செய்த ஐரோப்பியருக்கும் (போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் & ஆங்கிலேயர்)  இலங்கையைச் சேர்ந்த மக்களுக்குமிடையில் ஏற்பட்ட கலப்புத்திருமணத்தின் விளைவாக உருவான சந்ததியினர். ஆங்கிலத்தில் Burger என்றழைக்கப்படுகின்றார்கள்.

Thursday, September 24, 2026

கனடாவில் தமிழ் முதியவர்கள்!


கனடாவில் வசிக்கும் முதியவர்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா நண்பர்களே! அவ்வப்போது முதியவர்கள் மாடியிலிருந்து பாய்ந்து தம்முயிரைப் போக்கும் செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். பிள்ளைகள் முதியவர்களின் ஓய்வூதியங்கள், சமூக உதவிக் கொடுப்பனவுகளைக் கையாடல் செய்வதாக அவ்வப்போது செய்திகளைக் கேள்விப்படுகின்றோம். முதியவர்கள் உழைத்து வாங்கிய வீடுகளிலிருந்து முதியவர்கள் இல்லங்களுக்கு வலிந்து அனுப்பப்படுவதாகம் கேள்விப்பட்டிருக்கின்றோம். முதியவர்கள் பலர் ஓய்வூதியம் பெற்ற நிலையிலும் தொடர்ந்தும் வேலை செய்து கொண்டிருப்பதையும் அறிந்திருக்கின்றோம்.  முதியவர்களைக் குழந்தைகள் தம் குழந்தைகளைப் பராமரிக்கும் வேலையைச் செய்யுமாறு வறுபுறுத்துவது பற்றியும் அறிந்திருக்கின்றோம்.

கனடிய அரசிடமிருந்து, டிரில்லியம் அறக்கட்டளையிலிருந்து இலட்சக்கணக்கில் நிதியுதவி பெறும் முதியவர்கள் நலன்களை மையமாக வைத்து இயங்கும் அமைப்புகள் இவ்விடயங்களிலும் கவனம் எடுத்து முதியவர்களுக்கு உதவியிருக்கின்றனவா?

டொராண்டோ புத்தக்கக் கண்காட்சி உரையாடல் ஒன்று எழுப்பிய பாலை பற்றிய சிந்தனைகள்...

அண்மையில் நடந்த டொரோண்டோப் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் டிசெதமிழனும் (இளங்கோ), தேவகாந்தனும் மிகவும் தீவிரமாக எதையோ விவாதித்துக்கொண்ட...