Tuesday, October 20, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்: மண்ணும் விண்ணும்! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடுவது SUNO 5.5.


வ.ந.கிரிதரனின் பாடல்: மண்ணும் விண்ணும்!

வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடுவது SUNO 5.5.
ஓவியம் - கூகுள் AI

மண்ணிலிருந்து விண்ணைப் பார்த்தவன்
விண்ணிலிருந்து மண்ணைப் பார்க்கின்றேன்.

விண்ணை அளந்து பார்க்க வேண்டும்
மண்ணை நோக்கி மகிழ வேண்டும்
என்றொரு ஆசை நெடுநாள் உண்டு
இன்று தீர்ந்தது மகிழ்ச்சியில் மிதக்கின்றேன்

ஜம்போ ஜெட்டில் பறக்க வேண்டும்.
ஜம்போ ஜெட்டை இயக்க வேண்டும்.
ஆசையைத்  தீர்த்தது Artificial Intelligence.
ஆசை தீரவே பறக்கின்றேன் இன்று.

மண்ணிலிருந்து விண்ணைப் பார்த்தவன்
விண்ணிலிருந்து மண்ணைப் பார்க்கின்றேன்.

பறவையின் பார்வையை உணர்கின்றேன்.
பறவையின் உள்ளத்தை உணர்கின்றேன்.
நிலமகள் அழகைப் பார்க்கின்றேன்.
நினைத்து நினைத்து மகிழ்கின்றேன்.

மண்ணின் மேலே  பறக்கும்போது
எண்ணத்தில்தான் எத்தனை  விரிவு.
சிந்தனை விரிவு தருவதால்
செகத்தினைப் புரிந்து வியக்கின்றேன்.

மண்ணிலிருந்து விண்ணைப் பார்த்தவன்
விண்ணிலிருந்து மண்ணைப் பார்க்கின்றேன்.






No comments:

டொராண்டோ புத்தக்கக் கண்காட்சி உரையாடல் ஒன்று எழுப்பிய பாலை பற்றிய சிந்தனைகள்...

அண்மையில் நடந்த டொரோண்டோப் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் டிசெதமிழனும் (இளங்கோ), தேவகாந்தனும் மிகவும் தீவிரமாக எதையோ விவாதித்துக்கொண்ட...