அண்மையில் நடந்த டொரோண்டோப் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் டிசெதமிழனும் (இளங்கோ), தேவகாந்தனும் மிகவும் தீவிரமாக எதையோ விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அருகில் நின்றபடியே அவர்கள்தம் உரையாடலை அவதானித்துக்கொண்டிருந்தேன்.
Thursday, October 29, 2026
Wednesday, October 28, 2026
Sunday, October 25, 2026
செம்மணிப் புதைகுழி: இடைக்கால அறிக்கை மீதான சந்தேகங்களும், சர்வதேச விசாரணையின் அவசியமும்!
பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் செம்மணிப் புதைகுழி பற்றிய இடைக்கால அறிக்கை இவ்விடயத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், திசை திருப்பும் வகையிலும் அமைந்திருப்பது வெளிப்படை. முதலில் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் எடுத்திருக்க வேண்டும்:
இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச, 1995–1996 இல் யாழ்ப்பாணம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கின்றார். இது முக்கியமான விடயம். இதனடிப்படையில்தான் செம்மணிப் புதைகுழி தோண்டப்படுதல் ஆரம்பமானது.
Thursday, October 22, 2026
டொரோண்டோ பெரும்பாகத்திலுள்ள நூலகங்களுக்கு உங்கள் நூல்களை விற்க விரும்புகின்றீர்களா?
டொரோண்டோ நூலகத்தின் சேகரிப்புப் பிரிவுக்கு எழுத்தாளர்கள் நேரடியாக நூல்களை விற்பது பற்றி எழுதியிருந்தேன். உடனடியாக மூத்த சேகரிப்பு நிபுணர் (Senior Collections Specialist) நிக்கோல் கோக்கர் (Nicole Coker) பதில் அனுப்பியிருந்தார். மிகவும் பயனுள்ள பதில், உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
நூலகத்துக்கு விற்க விரும்பும் நூல்கள் பற்றிய விபரங்களை , எனக்கு வந்த ஆங்கில மின்னஞ்சலை இப்பதிவின் இறுதியில் தந்திருக்கின்றேன். பாவித்துப் பயன் பெறுங்கள்.
Tuesday, October 20, 2026
வ.ந.கிரிதரனின் பாடல்: மண்ணும் விண்ணும்! வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடுவது SUNO 5.5.
வ.ந.கிரிதரனின் பாடல்: மண்ணும் விண்ணும்!
வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடுவது SUNO 5.5.
ஓவியம் - கூகுள் AI
மண்ணிலிருந்து விண்ணைப் பார்த்தவன்
விண்ணிலிருந்து மண்ணைப் பார்க்கின்றேன்.
விண்ணை அளந்து பார்க்க வேண்டும்
மண்ணை நோக்கி மகிழ வேண்டும்
என்றொரு ஆசை நெடுநாள் உண்டு
இன்று தீர்ந்தது மகிழ்ச்சியில் மிதக்கின்றேன்
ஜம்போ ஜெட்டில் பறக்க வேண்டும்.
ஜம்போ ஜெட்டை இயக்க வேண்டும்.
ஆசையைத் தீர்த்தது Artificial Intelligence.
ஆசை தீரவே பறக்கின்றேன் இன்று.
Monday, October 19, 2026
டொரோண்டோவில் , எழுத்தாளர் சுந்தர ராமசாமி!
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அல்லது எண்பதுகளின் இறுதியில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி டொரோண்டோ வந்திருந்தார். அவருடனான கலந்துரையாடலொன்றைத் தேடகம் அமைப்பினர் டொரோண்டோப் பல்கலைக்கழக மண்டபமொன்றில் ஏற்பாடு செய்திருந்தனர்.
எழுத்தாளர் குமார் மூர்த்தி தலைமையில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அக்கலந்துரையாடலில் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றி, அவரது 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலில் சு.ரா அவர்கள் தெரிவித்திருந்த கருத்தினையொட்டி நான் வினாத்தொடக்க, 'தேடகம்' சிவா அவர்கள் தொடர, வாதப்பிரதிவாதமொன்று வெடித்தது.
Sunday, October 18, 2026
தேனிசைத்தென்றல் தேவா மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!
இந்த ஒரு பாட்டு போதும் இருப்புள்ளவரை இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவாவை நினைவு கூர்வதற்கு. https://www.youtube.com/watch?v=KXM7nVYIn9csu
'பொற்காலம்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இசை, பாடகரின் குரல், பாடல் வரிகள், நடிப்பு அனைத்துமே சிறப்பாக அமைந்த பாடல்களில் ஒன்று இந்தப்பாடல். ஒளிப்பதிவும் கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
Friday, October 16, 2026
ஒரு டொரோண்டோ நகரவாசியின் 'கோல்டென் மைல் மீளமைப்பு' (ReNew Golden Mile) திட்டம் பற்றிய அக்கறை! - வ.ந.கிரிதரன் -
டொரோண்டோ மாநகரசபை அண்மையில் ReNew Golden Mile திட்டம் பற்றிய சுற்றுச் சூழல் மதிப்பீட்டை முடித்திருந்தது. அது பற்றிப் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டிருந்தது. அது பற்றிய எனது ReNew Golden Mile திட்டம் பற்றிய அக்கறைக்குரிய கருத்துகள் இவை. இவை இத்திட்டம் பற்றி எண்ணியதும் எழுந்த எண்ணங்களின் தொகுப்பு.
நகர திட்டமிடலின் முக்கிய தத்துவம்
நவீன நகராட்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டின் அடிப்படை நோக்கம், தற்போது வாழும் நகர மக்களின் வாழ்க்கையை மேலும் மகிழ்ச்சியானதாகவும், மலிவானதாகவும், நிதி ரீதியாக நிலையானதாகவும் மாற்றுவதாக இருக்க வேண்டும். ஒரு நகரத்தின் வடிவமைப்பு மனித மகிழ்ச்சி, சமூக ஸ்திரத்தன்மை மற்றும் கட்டமைப்பு நல்வாழ்வைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டுமே தவிர, அது வெறும் கட்டுமான நிறுவனங்களின் லாபத்திற்காகவோ அல்லது நகராட்சி வரி வருவாயை அதிகரிப்பதற்காகவோ கட்டுப்பாடற்ற வணிக இயந்திரமாகவோ இருக்கக்கூடாது.
Tuesday, October 13, 2026
கிழக்கில் பறங்கியர்!
![]() |
இலங்கையில் வாழும் பறங்கி இன மக்களைப்பற்றிய தவகரனின் இந்தக் காணொளி என் கவனத்தை ஈர்த்தது. காணொளி இன்னும் சிறப்பாக ஆய்வுக் கண்ணோட்டத்துடன் , முற்கூட்டியே நன்கு தயாரிக்கப்பட்ட வினாக்களுடன் எடுக்கப்பட்டிருந்தால் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்., இருந்தாலும் பறங்கியர் சமூகம் பற்றிய காணொளி என்னும் வகையில் இக்காணொளிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. இது போன்ற காணொளிகள் அதிக அளவில் வெளிவர வேண்டும். எம்முடன் வாழும் ஏனைய இன மக்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு, புரிந்து கொள்வதற்கு இவை மிகவும் உதவியாகவிருக்கும்.
பொதுவாகப் பறங்கியர் இலங்கையை ஆட்சி செய்த ஐரோப்பியருக்கும் (போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் & ஆங்கிலேயர்) இலங்கையைச் சேர்ந்த மக்களுக்குமிடையில் ஏற்பட்ட கலப்புத்திருமணத்தின் விளைவாக உருவான சந்ததியினர். ஆங்கிலத்தில் Burger என்றழைக்கப்படுகின்றார்கள்.
Monday, October 12, 2026
வ.ந.கிரிதரனின் தமிழ்ப் பாடல் வரிகள்: இருப்பு பற்றிய விசாரம்!
வ.ந.கிரிதரனின் தமிழ்ப் பாடல் வரிகள்: இருப்பு பற்றிய விசாரம்!
வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5.AI
ஓவியம் - செயற்கை நுண்ணறிவு
என்னை எப்போதும் அலைக்கழிக்கும் கேள்வி
என்னிருப்பின் அர்த்தம் என்ன என்பதுதான்.
இங்கு வந்து ஏன் பிறந்தோம்?
இதன் அர்த்தம்தான் என்ன? என்ன?
இதற்கு விடை கிடைக்கப் போவதில்லை.
இது நான் அறிந்த ஒன்றுதான்.
அர்த்தம் அற்ற இருப்பின் பின்னே
அர்த்தம் உண்டு என்பதை நம்புவேன்.
அதனால் எப்போதும் இருப்பினை நான்
அணுகுவேன் நேர்மறை ஆகவே, ஆமாம்.
Saturday, October 10, 2026
வ.ந.கிரிதரனின் பாடல்; உயரத்தில் தெரியும் இந்தநிலா.
வ.ந.கிரிதரனின் பாடல்; உயரத்தில் தெரியும் இந்தநிலா.
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடியது SUNO 5.5
ஓவியம் - சாட்ஜிபிடி
[வ.ந.கிரிதரன் 'யு டியூப் சானலு'டன் இணைந்து கொள்வீர். ஆதரவு வழங்குவீர்!
'பதிவுகள்' இணைய இதழ் : "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு, 2000ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' இணைய இதழ்.
சிறுகதை, கவிதை, நாவல், இலக்கியம், ஆய்வு, நூல் அறிமுகம், நிகழ்ச்சி, பயணங்கள், கலை போன்ற பல பிரிவுகளில் ஆக்கங்கள் வெளியாகின்றன.
தமிழைக் கணித்தமிழ் ஆக்கிய ஆரம்பக் கால இணைய இதழ்களில் 'பதிவுகள்' இணைய இதழும் ஒன்று.
'பதிவுகள்' இணைய இதழை geotamil.com, pathivukal.com ஆகிய இணையத்தள முகவரிகளில் வாசிக்கலாம்.
உங்கள் ஆக்கங்களை, ஆக்கபூர்வமான கருத்துகளை ngiri2704@rogers.com, girinav@gmail.com & editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.
Thursday, October 1, 2026
யாழ்ப்பாணம் போவோமா?
[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJTG1Dm
இணையத்தில் தேடியபோது யாழ்ப்பாண நகரதுக்கான பயணக்கையேடுகள் பல அமேசன் தளத்தில் காணக்கிடைத்தன.
இது இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை யாழ்ப்பாண நகரமும் ஈர்த்திருப்பதன் விளைவே. இது யாழ் மாவட்டத்தின் பொருளாதாரரீதியிலான வளர்ச்சிக்கு, இலங்கையின் வளர்ச்சிக்கு மிகுந்த பயனைத்தரக் கூடியது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையின் அதிகரிப்பை அங்கு வாழும் மக்கள் தம்மைப் பொருளியல்ரீதியில் நிலைநிறுத்திக்கொள்ளப் பாவிக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)
டொராண்டோ புத்தக்கக் கண்காட்சி உரையாடல் ஒன்று எழுப்பிய பாலை பற்றிய சிந்தனைகள்...
அண்மையில் நடந்த டொரோண்டோப் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் டிசெதமிழனும் (இளங்கோ), தேவகாந்தனும் மிகவும் தீவிரமாக எதையோ விவாதித்துக்கொண்ட...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
வ.ந.கிரிதரனின் பாடல்; உயரத்தில் தெரியும் இந்தநிலா. வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடியது SUNO 5.5 ஓவியம் - சாட்ஜிபிடி [வ.ந.கிரிதரன் 'ய...
.jpg)



