Friday, December 19, 2025

முகநூலிலும் சம்பாதிக்கலாம்!


நண்பர்களே! இக்காணொளியை முழுவதுமாகப் பாருங்கள். இது உங்களுக்கு நிச்சயம் உதவக் கூடும். எனக்கு மிகவும் உதவியாகவுள்ளது. 

முகநூல் உண்மையில் பொருளாதாரரீதியிலும் உதவக்கூடியது என்பதை எடுத்துக்காட்டும் காணொளி இது.  பலருக்கு முகநூலின் ஆரோக்கியமான பயன்கள் தெரிவதில்லை.  முகமூடிகளில் வந்து ஒருவரையொருவர் தாக்குவதிலும் , ஒருவரின் புகழ்பெற்ற பதிவைக் களவாடித் தம் பெயரில் போடுவதிலும், ஒருவரைப்பற்றி அவதூறுகள் செய்வதிலும் இருக்கும் ஆர்வம் அதிகம். உண்மையில் முகநூலை ஆரோக்கியமாகப் பாவித்தால் , இதன் மூலம் நட்பைச் சம்பாதிக்கலாம், பணத்தையும் சம்பாதிக்கலாம். உங்கள் படைப்புகளையும் பலரிடத்தில் எடுத்துச் செல்லலாம். பொருட்களை விற்கலாம்.  வாங்கலாம். இப்படிக்கூறிக்கொண்டே போகலாம்.உண்மையில் முகநூலில் அதன் உறுப்பினர்கள் அவர்கள் பதிவிடும் ரீல்கள், பதிவுகள், படங்கள் மூலம் உழைப்பதற்கு வழிகள் உள்ளன. அதற்கு உதவுவதுதான் முகநூலின் MONETIZATION புறோகிறாம். நீங்கள் முகநூலில் தொடர்ச்சியாக, பயனுள்ள பதிவுகளை இட்டு வந்திருந்தால் முகநூலே உங்களை இந்தப் புறோகிறாமில் சேர்த்துக்கொள்ளும். அதற்காக அழைப்பு விடுக்கும். அதற்கு உங்கள் புறொஃபைலில்  நீங்கள் PROFESSIONAL MODEON செய்திருக்க வேண்டும். 

இந்தக் காணொளியில் இவர் முதலில் முகநூல் மூலம் உழைத்தது $137 அமெரிகக் டொலர்கள். சென்ற வருடம் உழைத்தது $200,000 அமெரிக்க டொலர்கள்.  இவர் முகநூலில் தான் எப்படி உழைத்தார் என்பதைப் படிப்படியாகக் கூறுகின்றார். இதன் மூலம் எதைச் செய்தால், எதைச் செய்யாது விட்டால் முகநூலில் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்துகொள்ளலாம். அவ்வகையில் பயனுள்ள காணொளி.

ஏற்கனவே முகநூலின் MONETIZATION  புறோகிறாமில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் அனைவருக்கும் உதவக்கூடிய காணொளி  இக்காணொளி - https://www.youtube.com/watch?v=pFtz-Wc8ZfU

No comments:

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எ...