Saturday, April 25, 2026

வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'


வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின்  'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'
இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI  டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி


நின்னைச் சரணடைந்தேன்,
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்ன தகாதென்று..
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை  போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

துன்பம் இனி இல்லை, சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறன்கள் வளர்த்திட
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

நல்லது தீயது  நாமறியோ மன்னை
நல்லது நாட்டுக. தீமையை ஓட்டுக.
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.

வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்!  வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.   டிஜிட்டல் ஓவியம் - கூகுள் ந...