Thursday, January 1, 2026
அறிமுகம்: 'வ.ந.கிரிதரனின் பாடல்கள் ' (V.N.Giritharan Songs) 'யு டியூப் சானல்'!
என்னுடைய V.N.Giritharan Songs ( வ.ந.கிரிதரன் பாடல்கள்) என்ற யூடியூப் சேனலில் , தளத்தின் வடிவமைப்புக்குரிய என் பாடல்களின் காணொளிகளை இணைத்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். என் பாடல் வரிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் இணைத்து உருவாக்கப்பட்ட பாடல்கள் இவை. அண்மையில் இணைக்கப்பட்ட பாடல்கள் சில வருமாறு:
1. என் குருமண் காடே!
2. காலவெளி நாம்
3. இன்று புதிதாய்ப் பிற்ந்தேன் நான்.
4. இயற்கையைப் பேணுவோம்!
5. மனத்தை மயக்கும் இந்த நிலா!
இவற்றுடன் மேலும் பல தமிழ்ப் பாடல்கள் , அவற்றுடன் ஆங்கிலப் பாடல்கள் சிலவும் உள்ளன. அவற்றைக் கேட்டுப்பாருங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி ஆதரவளியுங்கள். இதற்காக நீங்கள் பணமெதுவும் செலுத்த வேண்டியதில்லை. உங்களுடைய ஆதரவும் ஊக்கமும் மிகவும் அவசியம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், மேற்படி யூடியூப் சேனலுக்குச் சென்று, "Subscribe" பட்டனை அழுத்தி, பாடல்களுக்கான காணொளிகளைப் பார்த்து மகிழ்வதுடன், உங்கள் கருத்துக்களையும் தெரிவிப்பதுதான்.இவ்வருடம் மேலும் புதிய பாடல்களுக்கான காணொளிகள் பலவற்றை வெளியிடவுள்ளேன், அதற்கு உங்கள் ஆதரவும், ஆக்கபூர்வமான கருத்துகளும் நிச்சயம் உதவும். என் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' என்னும் YouTube சானலுக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1
Subscribe to:
Post Comments (Atom)
டொராண்டோ புத்தக்கக் கண்காட்சி உரையாடல் ஒன்று எழுப்பிய பாலை பற்றிய சிந்தனைகள்...
அண்மையில் நடந்த டொரோண்டோப் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் டிசெதமிழனும் (இளங்கோ), தேவகாந்தனும் மிகவும் தீவிரமாக எதையோ விவாதித்துக்கொண்ட...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
வ.ந.கிரிதரனின் பாடல்; உயரத்தில் தெரியும் இந்தநிலா. வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடியது SUNO 5.5 ஓவியம் - சாட்ஜிபிடி [வ.ந.கிரிதரன் 'ய...
No comments:
Post a Comment