Monday, July 29, 2024

கார்ல் மார்க்ஸ் - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=CVBQ50q7zLE


சரித்திர வளர்ச்சியிலே
சமுதாய விதிகளைச்
சரியாக உய்த்துணர்ந்தவன்
மார்க்ஸ். கார்ல் மார்க்ஸ்.

ஏழ்மை இவன் தன்
எண்ணங்களை என்றுமே
சிதைத்திட இவன்
சிறிதும் இடம் கொடுத்ததில்லை.

முயற்சி ஊக்கத்தை
மூலதனம் ஆக்கினான்.
மூலதனம் படைத்தான்.
மூலதனம் படைத்தான்.

நேற்றைய மாற்றங்களை
எதிர்வு கூறியவன்.
இன்றைய மாற்றங்களை
இட்டு எச்சரிக்கை செய்தவன்.

உண்மைகளை நம்
மண்ணுலகின் நீண்ட பாதையிலே
மக்கள் மீண்டுமொரு தடவை
அறிந்து கொள்வர்.

சரித்திர வளர்ச்சியிலே
சமுதாய விதிகளைச்
சரியாக உய்த்துணர்ந்தவன்
மார்க்ஸ். கார்ல் மார்க்ஸ்.



No comments:

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எ...