Monday, July 29, 2024

அறிந்தால் அறிவியடா என் பெரு வரையே - வ.ந.கிரிதரன்



- இசை & குரல்: AI SUNO -

இக்கவிதை பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதையான 'அறிந்தால் அறிவியடி அருவியே!' என்னும் கண்ணம்மாக் கவிதை இங்கு 'அறிந்தால் அறிவியடா என் பெரு வரையே' என்று கண்ணாக் கவிதையாக மாற்றம் பெற்றுள்ளது. . யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=dU8drlIPfLY

கண்ணா!
அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடா நம்காலவெளி.
ஆம்!

கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடா.

கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணா

கண்ணா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடா!
இருப்புப்பற்றி இங்கு நினைப்பதிலுண்ட
இன்பம் வேறொன்றுண்டோ கண்ணா

காலவெளியடா கண்ணா! நீ என்
காலவெளியடா கண்ணா!

எல்லைகடந்து சிறகடிக்க எப்போதும்
விரும்புதடா என் மனம் கண்ணா!

உன் மனமும் அப்படியா கண்ணா!

காலவெளி கடந்து சிறகடிக்க முடியுமெனின்
கண்ணா
அக்கனவுலகம் காணத்துடிக்குதென்
மனமே. கண்ணா என் மனமே!

ஒரு வினா! விடைபகிர் கண்ணா!

நீ அலையா கண்ணா!

நீ துகளா கண்ணா!

நீ அலையென்றால் காலவெளியும் அலையன்றோ!

நீ துகளென்றால் காலவெளியும் துகளன்றோ!

அலையா? துகளா ? கண்ணா
அறிந்தால் அறிவியடா என் பெரு வரையே.


No comments:

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எ...