Sunday, May 3, 2026
வ.ந.கிரிதரன் பாடல் - நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன். வ.ந.கிரிதரன் குரலில் - நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன். பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 A
வ.ந.கிரிதரன் பாடல் - நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன். வ.ந.கிரிதரன் குரலில் - நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன். பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.
நீல நிறம், மெல்லிய நீல நிறம்
நெஞ்சுக்கு நெருக்கமானது. என்
நெஞ்சுக்கு நெருக்கமானது.
அடி, கண்ணம்மா அந்த நிறம்
அடியே உனக்குக் கூடப் பிடித்த நிறம்தான்.
அடிக்கடி நீ கூறுவாய்
அதுதான் உனக்கும் பிடித்த நிறமென்று.
இல்லையா கண்ணம்மா! நீயே கூறு!நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.
விரிந்து கிடக்கும் நீல வானம்
பரந்து கிடக்கும் நீலம் தெறிக்கும் கடல்
கண்களுக்கு இன்பமூட்டும் காட்சிகள்.
என்னையே மறந்து கிடப்பேன் அப்போது.
இன்னமும் நினைவில் நிற்கிறது இனியவளே
மென் நீல ஆடையில் நீ நடந்து வந்ததெல்லாம்.
இன்னமும் உனக்கும் நினைவிலிருக்கிறதாடி.
சொன்னால் என் நெஞ்சும் நிறையுமடி.
நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.
விரிந்திருக்கும் நீல வானின் அமைதியில் உன்
வதனத்தில் படந்திருக்கும் அழகினைக் காண்பேனடி.
பரந்திருக்கும் நீலக் கடலின் தெளிவில் உன்
இரக்கம் மிக்க தெளிந்த உள்ளம் தெரியுதடீ.
நீலம் படிந்து விரிந்திருக்கும் விண்ணில்
நிலவே ,உன் செறிந்த பரந்த அறிவை உணர்வேனடி.
நீல வான, நீலக் கடல் தரும் குளிர்ச்சியை,
கோலமயிலே உன் பார்வையில் உணர்வேனடீ.
நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.
வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - கூகுள் ந...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
No comments:
Post a Comment