Friday, May 22, 2026
பாரதியார் பாடல் : சரஸ்வதி காதல் வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.கூடப் பாடும் பெண் AIயின் புத்திரி.
- வ.ந.கிரிதரன் குரலில், இசைத்துப் பாடியது SUNO 5.5.கூடப் பாடும் பெண் AIயின் புத்திரி. டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி வழி வநகி -
பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன் அங்குப்
பள்ளிப் படிப்பினிலே -- மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் -- அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும் -- கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேனம்மா!
பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன்
ஆடிவரு கையிலே -- அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்; கையில்
ஏடு தரித்திருப்பாள், -- அதில்
இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
நாடி யருகணைந்தால், -- பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்; ?இன்று
கூடி மகிழ்வ மென்றால், -- விழிக்
கோணத்தி லேநகை காட்டிச்செல் வாளம்மா!
பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன் ஆற்றங் கரைதனிலே -- தனி்
யானதோர் மண்டப மீதினிலே, தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன், -- அங்குக்
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்; அதை
ஏற்று மனமகிழ்ந்தே அடி
என்னோ டிணங்கி மணம்புரிவாய்? என்று
போற்றிய போதினிலே, -- இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட் டாளம்மா!
பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன்
சித்தந் தளர்ந்ததுண்டோ? -- கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல் -- பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால் -- பிற
வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும் -- வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றிநின் றேனம்மா!
பிள்ளைப் பிராயத்திலே -- அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேன்
Subscribe to:
Post Comments (Atom)
டொராண்டோ புத்தக்கக் கண்காட்சி உரையாடல் ஒன்று எழுப்பிய பாலை பற்றிய சிந்தனைகள்...
அண்மையில் நடந்த டொரோண்டோப் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்கள் டிசெதமிழனும் (இளங்கோ), தேவகாந்தனும் மிகவும் தீவிரமாக எதையோ விவாதித்துக்கொண்ட...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
வ.ந.கிரிதரனின் பாடல்; உயரத்தில் தெரியும் இந்தநிலா. வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடியது SUNO 5.5 ஓவியம் - சாட்ஜிபிடி [வ.ந.கிரிதரன் 'ய...
No comments:
Post a Comment