'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Friday, February 19, 2021
கவிதை: கவிதை = அறிவுணர்வுப்புரிதல்கள் ->ஆழ்வுணர்வுக்கவி -> கவிதைகள்! - வ.ந.கிரிதரன் -
வருகின்றன.
சிலவேளைகளில் அவை கனவுகளா
நனவுகளா என்பதில் கூட
என்னால் வேறுபாடுகளைக் காண முடிவதில்லை.
முன்பெல்லாம் ஆழ்ந்துறங்கையில் வரும் கனவுகள்
இப்போதெல்லாம் அரைத்தூக்கத்திலும் வருகின்றன.
நம்பவே முடியவில்லை. நிஜமா? நிழலா? என்பதை.
ஆனால் கனவுகள் நனவுகள் அல்ல என்பதை
உணர்கையில் ஏற்படும் திருப்தி
இனியதோர் அனுபவம்.
அப்பாடா என்று எத்தகையதோர் நிம்மதி!
ஏன் கனவுகள் எம்மை ஆட்டிப்படைக்கின்றன?
என்று அவ்வப்போது எண்ணுவதுண்டு.
அறிவுணர்வின் புரிதல்கள்தமை
ஆழ்வுணர்வுக்கவி
வடித்திடும் கவிதைகளா?
அல்லது
அக்கதாசிரியர் வடித்திடும்
புனைவுக் காட்சிகளா?
கவிதை: பழைய புத்தகக்கடை அனுபவமொன்று! - வ.ந.கிரிதரன் -
பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது.
புதுக் கடைகளில் வாங்குவதை விடப்
பழைய புத்தகக் கடைகளில் வாங்குவதிலுள்ள
இன்பமே தனி.
பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல்
எல்லாவகைப் புத்தகங்களும்
புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை.
உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன்.
உங்களால் பழைய புத்தகக் கடைகளில்
வாங்குவதைப்போல்
புதுப்புத்தகக் கடைகளில்
பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில்
தொடராக வெளியான,
ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட
நூல்களை ஒருபோதுமே பெற முடியாது.
அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம்
இருக்கிறதே
அதுவொரு பெரும் சுகமென்பேன்.
அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால்
புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது.
கவிதை: நூலகம் நோக்கி! - வ.ந.கிரிதரன் -
என்பேன்.
என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில்,
என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில்,
என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில்,
நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன்.
அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும்
தருவதில்லை.
அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை.
பறவைகளைப் பற்றிய புரிதல்களை,
அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும்
அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து
பயணிப்பேன். அந்த உலகின் மிகச்சிறப்புகளிலொன்று காலக்கப்பல்.
அந்த உலகின் காலக்கப்பலைப்போல் இன்னுமொரு காலக்கப்பலை
நான் வெறெங்கும் கண்டதில்லை.
அந்தக் காலக்கப்பற் பயணத்துக்காகவே நான் அடிக்கடி அங்கு செல்வதுண்டு.
அந்தக்கப்பலிலேறி
ஆதியில் இங்கு ஆட்டம்போட்ட இராட்சதப்பறவைகள், மிருகங்களின் காலகட்டத்துக்கு
என்னால் மிகவும் இலகுவாகச் சென்று விட முடிகின்றது.
ஆனால் அக்காலக்கப்பல் என்னை அவற்றிடமிருந்து திறமையாக
பாதுகாக்கவும் செய்கின்றது.
என்னால் அம்மிருகங்கள்,பட்சிகளின் அபாயங்களைப்பற்றிய சிந்தனைகளை நீக்கி
அங்கு அக்கப்பலில் பயணிக்க முடிகின்றது.
கவிதை: எமக்கும் கீழே தட்டையர் கோடி! - வ.ந.கிரிதரன் -
தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால்
எனக்கு மிகவும் பிடித்த
பொழுதுபோக்கு.
பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில்
ஏற்படுத்திய வித்தியாசங்கள்
எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருக்கின்றன.
அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும்
எனக்கு உவப்பானதாகவே இருக்கின்றது.
தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு
முக்கிய காரணங்களிலொன்று
என்னவென்று நினைக்கின்றீர்கள்?
மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான்.
ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட
எல்லாவகையிலும் உயர்ந்தவன்.
என்னை மீறி அங்கு எவையுமேயில்லை.
புதிய கட்டமைப்பில் பதிவுகள் இணைய இதழ்!
விளம்பரதாரர்களுக்கு!
பதிவுகள் இணைய இதழை உலகின் பல நாடுகளிலிருந்தும் தமிழ் மக்கள் வாசிக்கின்றார்கள். குறிப்பாக இந்தியா, கனடா, வட அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய நாடுகள், இலங்கை, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், சீனா, பர்மா போன்ற நாடுகளுட்பட மேலும் பல நாடுகளிலிருந்தும் வாசிக்கின்றார்கள்.
பதிவுகள் இணைய இதழில் விளம்பரம் செய்வதன் மூலம் நீங்கள் மிகுந்த பயனை அடைய முடியும். குறிப்பாக 'ரியல் எஸ்டேட்', 'மோர்ட்கேஜ்', காப்புறுதி, பல்வகைச் சேவைகளை வழங்கும் தனிப்பட்டவர்கள் & நிறுவனங்கள் , பொருட்களை, சேவைகளை விற்பவர்கள் என அனைவரும் மிகுந்த பயனை அடைய முடியும். அதனால்தான் கூகுள் நிறுவனம் கூடத் தனது விளம்பரங்களைப் பதிவுகளில் வழங்குகின்றது.
"பதிவுகள்' இணைய இதழினைப் பின்வரும் இணைய முகவரிகளில் வாசிக்கலாம்:
வ.ந.கிரிதரன்: "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்".வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்
கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...
பிரபலமான பதிவுகள்
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...