Sunday, September 13, 2026

செம்மீன் பற்றி எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் கருத்தும் , என் எதிர்வின்


தகழி சிவசங்கரப் பிள்ளை

எனக்குப் பிடித்த 10 நாவல்கள் பற்றியொரு முகநூற் பதிவு இட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் Tamil Journalist நான் குறிப்பிடாத தகழியின் செம்மீன் நாவல் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதைக்கையிலெடுத்த எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி பின்வருமாறு ஒரு கருத்தினை இட்டிருந்தார்:

"Karunaharamoorthy Ponniah - தகழியாருக்குப் போதிய கடலனுபவங்கள் இல்லையென்று நினைக்கிறேன், இருந்தால் செம்மீன் (இறால்) ஆழ்கடலில் அதிகம் இருப்பதாக எழுதியிருக்கமாட்டார். இறால் ஆழங்குறைவான Lagoons / காயல்கள்/ கடலேரிகள்/ பரவைக்கடல்களில்த்தானே அதிகமாகக் கிடைக்கும்."

இதற்கு என் எதிர்வினை இதுதான்:

"நண்பரே, மிகவும் அவசரப்படுகின்றீர்கள். முட்டையில் மயிர் பிடுங்குதல் போல் ஏதாவது சிறு பிழையாவது தென்படாதா என்று பார்த்துக்கொண்டு நாவலைப் படித்தால், நாவலை உங்களால் சுவைக்க முடியாது போய்விடும். கடல் அனுபவம் தகழிக்கல்ல உங்களுக்குத்தான் இல்லையென்பதை இக்கூற்று எடுத்துக்காட்டுகிறது.

செம்மீன் நாவலில் அதிகம் பேசப்பட்டிருப்பது ஆழ்கடல் மீன் பிடித்தல் பற்றியே. சுறா மீன் பிடிப்பது பற்றிப் பல இடங்களில் வருகிறது. இறுதியில் கருத்தம்மாவின் கணவன் பழனியும் சுறா மீனைப் பிடிக்கின்றான். அதுவும் தூண்டிலை விழுங்கி இறந்த நிலையில்கரையொதுங்குகிறது.

நாவலில் சாகரப் பருவம் பற்றிப்பேசப்படுகின்றது. தென் மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலம். அக்காலகட்டத்தில் நிறைய சத்துள்ள பொருட்களை உள்ளடக்கிய நீர் கடலின் கடற்கரைப் பகுதிகளில் அதிகமாகும், அச்சமயங்களில் அப்பகுதியில் செம்மீன்கள் அதிகமாகும். அவை உண்ணும் சத்துள்ள உணவான கடற்தாவரங்களில் செழிக்கும் காலம் அது. சாகரப்பருவம் பற்றியும் ,செம்மீன் பிடித்தல் பற்றியும் அதிக இடங்களில் நாவல் விபரிக்கவில்லை. ஆழ்கடல் மீன் பிடிப்பு பற்றித்தான் அதிகம் விபரிக்கின்றது."

இது பற்றி உங்கள் புரிதல் என்ன? கருணாகரமூர்த்தியின் கருத்து , அது பற்றிய என் கருத்து பற்றிய உங்கள் கருத்தென்ன? பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!"





Saturday, September 12, 2026

எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் முதற் பத்து நாவல்கள்!




அவ்வப்போது சிந்திக்கும்போது உடனடியாக நினைவுக்கு வரும் 10 நாவல்களைக் கீழே தந்துள்ளேன். உங்களுக்குப் பிடித்த நாவல்களைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1.Crime and Punishment (குற்றமும் தண்டனையும்) - ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
2. Resurrection (புத்துயிர்ப்பு) - லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
3. கரமஷாவ் சகோதரர்கள் - ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
4. காலம் - எம்.டி.வாசுதேவன் நாயர்
5. மோகமுள் - தி.ஜானகிராமன்
6. The Old Man and The Sea (கடலும் கிழவனும்) - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே (Earnest Hemingway)
7. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
8. ஏணிப்படிகள் - தகழி சிவசங்கரன்பிள்ளை
9. நீலகண்ட பறவையைத்  தேடி - அதீன் பந்த்யோபாத்யாய 
10. The Metamorphosis (உருமாற்றம்) - ஃப்ரான்ஸ் காஃப்கா  (Franz Kafka)

தமிழரான கலைஞர் கருணாநிதியைத் தெலுங்கர் என்பது ஏன்?


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒரு வந்ததில் திமுக நன்மை அடைந்திருக்கின்றதே என்றுதான் கூற வேண்டும்.  இதுவரை காலமும் திமுக மேல் குறிப்பாகக் கலைஞர் மேல் புனையப்பட்டிருந்த பொய்களை ஒவ்வொன்றாக மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றார்கள்.  

முக்கியமான பொய் - தமிழர் தெலுங்கர் என்பது. அது எம்ஜிஆர் காலத்தில் அரசியல் காரணங்களால் முன் வைக்கப்பட்ட பொய். எம்ஜிஆரை மலையாளி என்று திமுகவினர் பிரச்சாரம் செய்ததால் எம்ஜிஆர் கையாண்ட எதிர் நடவடிக்கை. தமிழகத்தில் திமுகவை அழிக்காமல் எதுவும் செய்ய முடியாது என்றுணர்ந்த ஆரியத்தின் சூழ்ச்சிக்குப் பலியாகிய தமிழர்களில் சிலர் அதனைத் தம் அரசியல் நலன்களுக்காகப் பாவிக்கத்தொடங்கினார்கள். போலி சமுக., ஊடக ஆய்வாளர்கள் அதை உண்மைபோல் புதிய பொய்களைப் புனைந்தார்கள். 

Thursday, September 10, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்கள் - 'கடற்புள்ளே' (மூன்றாவது தொகுப்பு)


எனது 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில் வெளியான பாடல்களின் மூன்றாத் தொகுதி 'கடற்புள்ளே!' என்னும் தலைப்பில் கிண்டில் / அமேசன் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது.  அதற்கான இணைய இணைப்பு - https://www.amazon.com/dp/B0HJF1NLWB 

அமரர் கல்கி நினைவாக...

எழுத்தாளர் கல்கி 

தமிழின் காத்திரமான படைப்பாளிகள் பலரின் வாழ்க்கையில் நிச்சயம் கல்கியின் எழுத்துகளுக்கும் ஓரிடமுண்டு. அவற்றினூடு வளர்ந்தவர்கள் அவர்கள்.

கல்கியின் தெளிந்த ஆற்றொழுக்கு நடையும், கலந்திருக்கும் நகைச்சுவையும் நெஞ்சை வருடிச் செல்பவை. எங்களுக்கு முந்திய தலைமுறையைக் கவர்ந்த நாவல் எங்களைக் கவர்ந்தது. அதற்குப் பின் அடுத்தடுத்த தலைமுறையினரையும் கவர்ந்தது. என் குழந்தைகள் கூட மிகவும் விரும்பிப்பார்த்த திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 & பொன்னியின் செல்வன் 2. 

Sunday, September 6, 2026

ஆகஸ்ட் 2026இல் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள்!

ஆகஸ்ட் மாதம் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள், அவர்கள் பார்த்த பக்கங்கள் பற்றிய விபரங்கள் இவை!

வருகை தந்தவர்கள் (Unique Visitors) - 528, 457
பார்த்த பக்கங்கள் - 1, 630, 623
ஹிட்ஸ் (Hits) - 2. 453, 389
Bandwidth - 105 .56 GB

பதிவுகள் இணைய இதழ் - www.pathivukal.com www.geotamil.com www.pathivugal.com


தெளிவாகப் பார்க்க, மேலுள்ள தகவல் படத்தை  ஒரு தடவை அழுத்தவும்.


கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'எழுத்தாளர் அரங்கம்' மெய்நிகர் வழி நிகழ்ச்சியில் எழுத்தாளர் தமிழ்நதி! - வ.ந.கி -


எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) 

எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) பங்கு பற்றிய  , கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நடந்த 'எழுத்தாளர் அரங்கம்' மெய்நிகர் வழி நிகழ்ச்சி!

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் இம்மாத எழுத்தாளர் அரங்கம் நிகழ்ச்சியில்  எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) பங்குபற்றினார்.  எழுத்தாளர் அகணி சுரேஷ் நெறிப்படுத்தினார்.  நிகழ்ச்சி முழுவதையும் உள்ளடக்கிய காணொளியை அகணி சுரேஷ் தன் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.  நான் சந்தர்ப்ப, சூழ்நிலை காரணமாக மேற்படி மெய்நிகர் வழி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபற்ற முடியவில்லை. அதை நிவர்த்தி செய்தது மேற்படி காணொளி.

Thursday, September 3, 2026

எழுத்தாளர் சோ.பத்மநாதன் அவர்களுக்குச் 'சாகித்திய ரத்னா' விருது!



இலங்கை அரசால் வழங்கப்படும்  அதியுயர் இலக்கிய விருது  'சாகித்திய ரத்னா' .  இம்முறை  அவ்விருது கவிதை, ,மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புச் செய்த எழுத்தாளரான    சோ.பத்மநாதன்  அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இவ்விருதை ஏற்கனவே எழுத்தாளர்கள் செங்கை ஆழியான், தெணியான், அன்னலட்சுமி இராஜதுரை (யாழ்நங்கை)  உட்படப் பலர் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  


தென்னிலங்கை எழுத்தாளர்களின், சர்வதேச எழுத்தாளர்களின கவிதைகளைத்   தமிழுக்குக் கொண்டு வந்தவர். அதே சமயம் தமிழ்ப்படைப்புகளையும் ஆங்கில மொழிக்குக் கொண்டு சென்றவர். பன்னாட்டு மக்கள் மத்தியில் புரிந்துணர்வை வளர்க்கப் பங்காற்றுபவை இவ்வகையான மொழிபெயர்ப்புகளே. 

வரலாறு பற்றி....


வரலாறு எவ்விதம் எழுதப்பட வேண்டும். பலர் கடந்த கால வரலாறுகளைத் தம் பார்வையில் , தாம் சார்ந்த அமைப்புகளின் அடிப்படையில், உணர்ச்சிகளின் அடிப்படையில் கூட்டிக்குறைத்து எழுதுகின்றார்கள். இது சரியா? வரலாறு உண்மைகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட வேண்டும், உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல.
வரலாறு என்பது கடந்த காலக்கண்ணாடி. அது உண்மையை உள்ளவாறு பிரதிபலிக்க வேண்டும். ஆனால் நாம் காண்பதென்ன? தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் பதியப்படும் நனவிடை தோய்தல்கள் வரலாறு என்னும் பெயரில் உலா வருகின்றன.
உணர்ச்சிகளின் அடிப்படையில் கூட்டிக் குறைத்து எழுதப்படும் வரலாற்றுப் பதிவுகள் வரலாற்றுப் பதிவுகளே அல்ல, வெறும் நனவிடை தோய்தல்களே. உண்மைகள், ஊகங்கள், அவை பற்றிய உணர்ச்சி மிக்க நனவிடை தோய்தல்களே.

Monday, August 31, 2026

நண்பர் எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினத்தின் பார்வையில் நான்!


நண்பரும், எழுத்தாளருமான கிறிஸ்டி நல்லரெத்தினம் (ஆஸ்திரேலியா) என் புகைப்படத்தை டிஜிட்டல் ஓவியமாக்கி அனுப்பியிருக்கின்றார். அவருக்கு என் நன்றி.

Thursday, August 27, 2026

எழுத்தாளர் வ.ந.கிரிதரன் படைப்புகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள்!


எனது நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரை பற்றி வெளியான திறனாய்வுக் கட்டுரைகள் இவை. இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


Novel: An Immigrant (English Translation)
The Dark Night of the Soul: A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan By Dr. R. Dharani - https://vngiritharan23.wordpress.com/2017/03/19/the-dark-night-of-the-soul-a-study-of-the-existential-crisis-of-the-sri-lankan-tamil-refugees-as-depicted-in-the-novel-an-immigrant-by-the-canadian-tamil-writer-v-n-giritharan/#more-343

Novel: An Immigrant (English Translation)
‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan By Dr. R. Dharani - https://vngiritharan23.wordpress.com/2013/03/29/an-immigrant-a-poignant-autobiographical-sketch-of-v-n-giritharan/

Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan By Dr. R. Dharani - https://vngiritharan23.wordpress.com/2013/03/29/canadian-tamil-literature-void-within-the-migration-of-an-albatross-into-an-unsolicited-province-a-study-on-the-writings-of-the-canadian-tamil-writer-v-n-giritharan/

The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora:A Reading of Selected Short Stories of V.N. Giridharan
By Dr.Gnanaseelan Jeyaseelan. - https://vngiritharan23.wordpress.com/2013/03/29/the-translocal-nationalism-of-the-sri-lankan-tamil-diasporaa-reading-of-selected-short-stories-of-v-n-giridharan/

‘SEEKING THE INVISIBLE HUMANNESS IN AN ALIEN LAND’ A review of the Diasporic issues as revealed through the selected Short stories of V.N. Giridharan By Dr. R. Dharani - https://vngiritharan23.wordpress.com/2013/03/29/canadian-tamil-literature-seeking-the-invisible-humanness-in-an-alien-land-a-review-of-the-diasporic-issues-as-revealed-through-the-selected-short-stories-of-v-n-giridharan/

Wednesday, August 26, 2026

பிரபஞ்ச மெய்யியலும் கவித்துவ இயற்பியலும்: வ.ந. கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' (2023) – ஒரு விமர்சனப் பகுப்பாய்வு! - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -


[பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான எனது கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' பற்றிச் சிறப்பானதொரு திறனாய்வுக் கட்டுரையினை எழுதியிருக்கின்றார் திறனாய்வாளர் ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) . கட்டுரையை முழுமையாக வாசித்தேன். சிறப்பான கட்டுரையைத் தந்ததற்காக மனம் நிறைந்த நன்றி. 

 உண்மையில் இத்தொகுப்பைச் சமகால விமர்சகர் எவரும் என் காலத்தில் சரியாக உள்வாங்கி விமர்சிப்பதற்குச் சாத்தியம் இல்லையென்றே எண்ணியிருந்தேன். யாரோ ஒருவர் எதிர்காலத்தில் இணையத்தில் கண்டெடுத்து விமர்சனத்துக்குள்ளாக்குவார் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் என் காலத்திலேயே ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) என்னும் விமர்சகர் தொகுப்பை இனங்கண்டு திறனாய்வு செய்திருக்கின்றார். என்னைப் பிரமிக்க வைத்த திறனாய்வு. சிறப்பான திறனாய்வைத் தந்ததற்காக மீண்டும் அவருக்கு என் நன்றி. 

 அண்மைக்காலமாகவே பதிவுகளில் அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. அவரது திறனாய்வுக் கட்டுரைகள் தனித்துவமானவை. ஆழமான கட்டுடைப்பைச் செய்பவை. அதற்காக அவர் உள்வாங்கும் உசாத்துணை நூல்கள் , முயற்சி, கடும் உழைப்பு உண்மையில் பாராட்டத்தக்கவை. தமிழ் இலக்கியத்துக்கு அவரது திறனாய்வுகள் வளம் சேர்ப்பவை. வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன்]

- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
பிரபஞ்ச மெய்யியலும் கவித்துவ இயற்பியலும்: வ.ந. கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' (2023) – ஒரு விமர்சனப் பகுப்பாய்வு!   - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

பொருளடக்கம்

பிரபஞ்ச மெய்யியலும் கவித்துவ இயற்பியலும்: கல்விப்புல அறிமுகம்

முன்னுரை: நவீனத் தமிழ் விண்வெளிக் கவிதையியலும் வ.ந. கிரிதரனும்

அத்தியாயம் 1: மீவியற்பியலும் (Metaphysics) குவாண்டம் கவிதையியலும் (Quantum Poetics)

1.1 17-ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிதையியல் பாரம்பரியமும் கிரிதரனின் கவிமொழியும்

1.2 காலவெளி (Spacetime), சார்பியல் மற்றும் ஒளிவேகம்: கவித்துவ உருவகங்கள்

1.3 "காலவெளி மீறிய கவிஞன்": குவாண்டம் நுரையும் நிகழ்காலத்தின் அசாத்தியமும்

அத்தியாயம் 2: இருத்தலியல் (Existentialism) மற்றும் ஒன்டோலாஜிக்கல் (Ontology) தேடல்

2.1 "இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி இருத்தற்கு": இருப்பின் புதிர்

2.2 நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்': காலத்தின் சவாலும் மானுட மனதின் அசையா உறுதியும்

2.3 'பேய்த்தேர்' மற்றும் 'எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு': அர்த்தமின்மையின் மத்தியில் அர்த்தம் தேடுதல்

அத்தியாயம் 3: சூழலியல் மரபும் புலம்பெயர் அகக் கனலும் (Ecological Poetics and Diaspora Realities)

3.1 "சொப்பன வாழ்வினில் மயங்கி": நகரமயமாதலும் இயற்கையின் சிதைவும்

3.2 'எழுக அதிமானுடா': நீட்ஷேயின் கோட்பாடும் மார்க்சிய வர்க்கப் போரின் எரிகனலும்

3.3 "துருவத்துக் கட்டடக் காட்டுக்கான்": புலம்பெயர் தேசத்துத் தனிமையும் தாய்மைப் பேரன்பும்

அத்தியாயம் 4: பாரதியியல் தொடர்ச்சியும் கண்ணம்மா என்னும் குவாண்டம் படிமமும் (The Bharathian Legacy & Quantum Kannamma)

4.1 மகாகவி பாரதியின் ஆன்மீகக் கவிதையியலின் நவீன இயற்பியல் நீட்சி

4.2 "நீ அலையா? நீ துகளா?": அலை-துகள் இருமைத்தன்மையும் காதலின் பரிமாணங்களும்

Tuesday, August 25, 2026

கவிதை: வீரியம் குன்றாத விண்மீன்கள்! - வ.ந.கிரிதரன் -



வேட்டைநாய்கள் காத்திருப்பதைப் போல் 
காத்திருப்பார்கள். 
காத்திருக்கும் காலத்தில் 
காலத்தை ஓட்டியது தவிர
வேறென்ன செய்தார்கள்?
விருது பற்றிய அறிவிப்பு 
வந்து விட்டால் போதும்
வீரம் மிகுந்து விடும்.
கர்ச்சனை செய்வார்கள்.
பாய்ந்து  
கொத்திக் குதறி எடுப்பார்கள்
விருதையும், 
விருது பெற்றவரையும்.
சில சமயங்களில் இவர்கள் 
மெளனித்திருப்பார்கள்.
மெளனத்திற்குக் காரணம் 
அச்சமயம் இவர்கள்தம்
நட்புக்குரியவர்களுக்கு 
விருதுகள் கிடைத்திருக்கும்.

வ.ந.கிரிதரன் பாடல்: சவால்கள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.


வ.ந.கிரிதரன் பாடல்: சவால்கள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி
சவால்கள் கண்டு துவண்டிட மாட்டோம். சவால்கள் கண்டு மருண்டிட மாட்டோம். சவால்கள் இல்லாத இருப்பும் உண்டோ? சவால்கள் எல்லாம் புதிர்களே எமக்கு. புதிர்களை அவிழ்ப்போம். பெருமிதம் அடைவோம். பெருமிதம் அடைந்தே இருப்பினை வெல்வோம். சூழல்கள் கணமும் சவால்களைத் தருமே. சூழும் சவால்களை எதிர்த்தே நிற்போம். உறுதி மிக்கது தப்பிப் பிழைக்குமாம். உணர்ந்து கொள்வோம். உறுதியை வளர்ப்போம்.

Monday, August 24, 2026

வேண்டாம் என்பதும் சரி வேண்டும் என்பதும் சரி ஒரே பொருள் தெரியுமா?



"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல" - குறள் -

தமிழில் மட்டுமல்ல மொழிகளில் இலக்கணம்  மீறிய சொற்கள் பல வழக்கில் உள்ளன. வழக்கில் உள்ளதால் அவற்றை இலக்கணம் உள்வாங்கியுமுள்ளது.  முன்றில் என்பது தவறானது. இல்முன் என்பதே சரி. அதற்காக அதைப்பாவிப்பதை யாரும் நிறுத்தவில்லை.  சொல்லுக்குச் சொல் இலக்கணப்பிழையைக் கண்டு பிடிக்க முயற்சி செய்வது பயனைத்தராது.  

ஶ்ரீ வேணுகோபாலனின் 'நீ நான் நிலா'


எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலனின் சிறுகதைகள், குறுநாவல்கள் பல அறுபதுகளில் வெளியான தமிழ் வெகுசன இதழ்களில் , அவற்றின் தீபாவளி மலர்களில் வெளிவந்த காலத்தில் நான் என் பால்யப்பருவத்து வாசிப்பை ஆரம்பித்திருந்தேன்.அதனால் அவர் என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

அவரை நான் விரும்பி வாசிக்கத்தொடங்கியது அவரது படைப்புகள் தினமணிக்கதிரில் வெளியானபோதுதான். தினமணிக்கதிர் அப்போது இலவச இணைப்பாக புனைவை அல்லது அல்புனைவை வெளியிட்டு வந்தது. அதிலொன்றுதான் நடுவழியில் என்னும் ஶ்ரீ வேணுகோபாலனின் நெடுங்கதை. அது முதலில் கல்கியில் வெளியான விபரம் அண்மையில்தான் தெரிந்தது.  அதன் பின் என்னைக் கவர்ந்த அவரது படைப்பு தினமணிக்கதிரில் தொடராக வெளியான 'நீ நான் நிலா' தொடர்கதை.

செயற்கை நுண்ணறிவு பற்றிய சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் கருத்துகள் பற்றி....


சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் யோகன் கண்ணமுத்து தன் முகநூற் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றித்தெரிவித்த கருத்துகளில் பின்வருமாறும் குறிப்பிட்டிருந்தார்:


"தலைப்பு- கருத்துகளைத் திரட்ட AI-யைப் பயன்படுத்தலாம்..... வரலாறு- அரசியல் கட்டுரையாக இருந்தால், கிடைக்கும் தகவல்களை சரிபார்க்க பயன்படுத்தலாம்."//

இவ்விடயத்தில் என் எதிர்வினை இது :

இவ்விடயங்களில் AI பல தவறான தகவல்களைத் தானே உருவாக்கி உண்மைபோல் தரும். நீங்கள் கண்டு பிடித்தால் தான் தவறு செய்ததை ஒப்புக்கொள்ளும். கண்டு பிடிக்காவிட்டால் அத்தவறுகள் உண்மைகளாக இணையத்தில் தொடரும். இது பாரதூரமான விடயம். AI தரும் எல்லாத் தகவல்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஏனைய சான்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்துவது அவசியம்.

Friday, August 21, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: உறவு! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.



வ.ந.கிரிதரன் பாடல்: உறவு! வ
.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி உறவுகள் அற்ற உலகில் அர்த்தமுண்டோ? உறவுகளே இருப்பின் ஆணி வேராம். உயிர் தந்த பெற்றவர் உறவு. உடன் பிறந்தவர் மத்தியில் உறவு. உடன் வரும் நண்பர்கள் உறவு. உள்ளங் கவர் காதல் உறவு. பொருள் மலிந்த உலகு இது. பொருளில் மறைந்து கிடப்பது சக்தி. பொருளில் உணர்வு வந்தது எப்படி? பொருளே சக்தியாம், பொருளே உணர்வாம். உறவுகள் அற்ற உலகில் அர்த்தமுண்டோ? உறவுகளே இருப்பின் ஆணி வேராம்.

தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு பற்றிய செய்தியாளர் சந்திப்பு! - வல்லிபுரம் சுகுந்தன் (செயலாளர்)< தொல்காப்பிய மன்றம் (கனடா) -


[தொல்காப்பிய மன்றம் (கனடா) செப்டம்பரில் கனடாவில் நடைபெறவுள்ள 'இரண்டாவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2026 சம்பந்தமாக, செய்தியாளர் சந்திப்பொன்றை ஆகஸ்ட் 24 அன்று நடத்தவுள்ளது. அது பற்றிய தகவலை மன்றத்தின் செயலாளர் வல்லிபுரம் சுகுந்தன் பகிர்ந்திருந்தார். அதனை நண்பர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.]

வணக்கம்! கனடாத் தொல்காப்பிய மன்றத்தினால் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 19, 20ஆம் தேதிகளில் 2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மார்க்கம் நகரின் பில் கோகர்த் மேல்நிலைப் பள்ளியில் (Bill Hogarth Secondary School) “தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க-கற்பிக்க கொண்டாட-பரவலாக்க வேண்டும்” என்னும் பொருண்மையில் நடாத்தப்படவுள்ளது.
இம் மாநாடு, ஆயிரம் பேர் ஒன்றுகூடும் நிகழ்வாகக் கனடாவில் இயங்கிவரும் 90க்கும் மேற்பட்ட தமிழ் மன்றங்கள், ஊர்ச் சங்கங்கள், கல்விக்கூடங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பெருமளவிலான நிதி மூலதனத்துடன் நடாத்தப்படவுள்ளது.

'காவியத்தலைவி ' காலத்தில் கரைந்தார்!


நடிகை செளகார் ஜானகியின் மறைவு பற்றிய தகவலை முகநூல் மூலம் அறிந்தேன். எனக்குப் பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். பாத்திரம் எதுவானாலும் அதனை ஏற்றுத் திறமையாகச் செய்வதில் வல்லவர். நடிகைகளில் துணிச்சலும், தன் திறமை மீதான செருக்கும், ஆங்கிலப் புலமையும் மிக்கவர். 

இவர் வாழ்க்கையே ஓர் எதிர்நீச்சல்தான். இளம் வயதில் கைக்குழந்தையுடன், மண முறிவு ஏற்பட்ட நிலையில், துணிச்சலுடன் வாழ்வை எதிர்நோக்கித் தன்னைத் தமிழ்த்திரையுலகில் நிலை நாட்டியவர்.  தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்தவர். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டாலும், தமிழ்த்திரையுலகில் மிகுந்த புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.

Tuesday, August 18, 2026

தமிழகமும் , ஊழலும்!


தமிழக வெற்றிக்கழகம் தமிழ் நாட்டில் ஊழலை ஒழித்து விட்டதாகக் கதைக்கின்றார்களே, அது உண்மையா?  ஆராய்ந்து பார்த்தால் ஓரளவு உண்மை உண்டு.ஓரளவு பொய் உணடு.அதெப்படி வடிவேலு பாணியில் பதிலளிக்கின்றேன் என்று பார்க்கின்றீர்களா? இதோ என் விளக்கத்தைத் தெளிவாகக் கூறுகின்றேன். புரிந்து கொள்வீர்கள். இதற்கு உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிலவும் ஊழல் பற்றிய  அறிவைப்பெற்றிருப்பது அவசியம்.

ஊழலை இரு விதங்களாகப் பிரித்துபார்க்கலாம்: ஒன்று அரச அலுவலங்களில் ,அதிகாரிகள் மட்டத்தில் நிலவும் ஊழல்,  இதனை கீழ்மட்ட ஊழல் அல்லது Petty Corruption என்று குறிப்பிடலாம். அடுத்தது மேல் மட்டங்களில் நடைபெறும் ஊழல். இதனை  Grand Corruption என்பர். பெருந்திட்டங்களை அமுல்படுத்துகையில் அமைச்சர்கள் போன்ற மேலமட்ட அரசியல்வாதிகள் குறிப்பாக அமைச்சர்கள் மத்தியில்  நிலவும் ஊழல். 

Monday, August 17, 2026

எழுத்தாளர் குரு அரவிந்தனின் 'கதிரவன் குடும்பம்' நல்லதொரு சிறுவர் நூல்!


குழந்தைகளுக்கான 'கதிரவன் குடும்பம்' நல்ல நூல்., இது போன்ற வானவியல் பற்றிய நூல்கள் குழந்தைகளுக்கு அவர்கள்தம் சிறந்த எதிர்காலத்துக்கு முக்கியம். ஆங்கிலத்திலும் , தமிழிலும் இந்நூல் அமைந்திருக்கின்றது. அது இந்நூலின் நல்லதோர் அம்சம்.

சிறுவர் இலக்கியம் மானுட சமுதாயத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது. குழந்தைகளே நாட்டின் எதிர்கால நாயகர்கள். அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதொரு படிக்கட்டு சிறுவர் இலக்கியம்.  

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'நூல்களின் சங்கமம்' புத்தகக்கண்காட்சியில்.....


நேற்று ஸ்கார்பரோவிலுள்ள தமிழிசைக் கலாமன்றத்தில் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'நூல்களின் சங்கமம்' புத்தகக்கண்காட்சி நடைபெற்றது. எழுத்தாளர்கள் பலரின் நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நடனக்கலைஞர்கள் தயாரித்தளித்த அவர்கள்தம் மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகள் பல நடைபெற்றன. வானொலி ஊடகக்கலைஞம், திருக்குறளில் மேதமை மிக்கவருமான ஜோதி ஜெயகுமாரின் நெறிப்படுத்தலில் மேடை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. பால்யப்பருவத்து மாணவர்கள் பலர் ,அழகான தமிழில் , சிறந்த பேச்சாளர்களைப்போல் ஏற்ற, இறக்கங்களுடன் தம் உரைகளை ஆற்றியது சிறப்பாக அமைந்திருந்தது. நடன நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய மாணவிகளுக்கு கலை, இலக்கிய உலகில் அறியப்பட்ட ஆளுமைகள் பலர் விருதுச்சான்றிதழ்களை வழங்கினார்கள்.

Saturday, August 15, 2026

டொரோண்டோ நண்பர்களின் கவனத்துக்கு - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின்'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு மேசை!


டொரோண்டோ நண்பர்களின் கவனத்துக்கு - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின்'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு மேசை! 

டொரோண்டோ  வாழ் நண்பர்களின்  கவனத்துக்கு! நாளை ஆகஸ்ட் 16, 2026 , ஞாயிற்றுக்கிழமை  கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும்  'நூல்களின் சங்கமம்' நூல் கண்காட்சி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.  முகவரி -  தமிழிசைக் கலாமன்றம்,  1120 Tapscott rd, Scarborough, ON M1X 1E8.  தொடர்புகளுக்கு - ரவி கனகசபை - 416 - 301 - 9027 / முனைவர் வாசுகி நகுலராஜா  - 647  208 4148

Thursday, August 13, 2026

தாமரைச்செல்வியின் 'சுமைகள்'


இன்று எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'சுமைகள்' நாவலின் புதிய பதிப்பு என்னை வந்தடைந்தது.  அதற்காக அவருக்கு என் நன்றி. எழுபதுகளின் இறுதியில் வாசித்த நாவல்களிலொன்று 'சுமைகள்'. அப்பொழுது வீரகேசரி பிரசுரமாக வெளியான நாவல்களில் பலவற்றை வாசித்திருக்கின்றேன். அ.பாலமனோகரனின் 'நிலக்கிளி', வ.ந.இராசரத்தினத்தின் 'கிரெளஞ்ச்ப் பறவைகள்', செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று' , கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை', தெளிவத்தை ஜோசப்பின் 'காலங்கள்  சாவதில்லை', சொக்கனின் 'செல்லும் வழி இருட்டு' , கதைக்கனிகள் சிறுகதைத்தொகுப்பு ஆகியவை அவற்றுள் அடங்கும். 

Tuesday, August 11, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.


வ.ந.கிரிதரன் பாடல்: சமூக,ஊடகப் போராளிகளே! ஒரு வேண்டுகோள்! 
வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.  
டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி 

முகநூல் , இன்ஸ்டாகிராம், டிக்டொக் போராளிகள் இவர்
முகமற்றவர்கள்  முட்டி மோதுபவர்கள் இவர்

அவச்சொல் தவிர்ப்பீர்!
சமூக ஊடகப் போராளிகளே!
சரி பிழை சொல்வதற்குச்
சரியாக இருங்கள்!

நாகரிகம் நாணும் சொற்களால்
நாளும் அர்ச்சனை செய்பவர்கள்.
ஆய்வு என்று தருவதெல்லாம்
அரை வேக்காட்டுக் குப்பைகளே

கட்டடக்கலைஞர் மயூரநாதன் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! - வ.ந.கிரிதரன் -

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன்

'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற் முடியாது போயிற்று.  அதன் ஓரளவு  முழுமையான  எழுத்து வடிவம் இது.]

கட்டடக்கலைஞர் மயூரநாதன் அவரது இந்த நூல் மூலம் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவராக முகிழ்த்திருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும்.

வரலாற்று முக்கியத்துவம்

இலங்கைத்  தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முககிய குறைபாடுகளில் ஒன்று  வரலாற்றுத் தெளிவின்மை.  இலங்கையின் தொன்மக் குடிகளாக இருந்தும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை கோலோச்சிய யாழ்ப்பாண இராச்சியம் பற்றி, அதன் மன்னர்களைப்பற்றி, இருந்த இராஜதானிகள் பற்றி ஆதாரபூர்வமான,  வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய வரலாறு  இல்லை என்றுதான் கூற வேண்டும்.  இலங்கைத் தமிழரின்  வரலாற்றைப் பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நூல். அது போல் கைலையாமாலை , வையாபாடல் போன்றவையும் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவையெல்லாமே கூறும் வரலாறு இவை எழுதப்பட்ட காலத்திற்கு முற்பட்டவை. எனவே பல கர்ணபரம்பரைக் கதைகள், கேள்வி ஞானத்தகவல்களை உள்ளடக்கியவை. இவற்றை வடி கட்டு , உண்மை பொய் அறிவதற்கு முதலியார் செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் முயற்சி செய்திருக்கின்றார்கள்.  அவற்றின் விளைவுகளே முதலியார் செ.இராசநாயகத்தின் யாழ்ப்பாணச் சரித்திரமும், சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனமும். மேலும் பலர் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதியிருந்தாலும், இவை முக்கியமானவை.

மேலும் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுவதில் இலங்கைத் தமிழர்  காட்டும் அசிரத்தை. இவ்விடயத்தில் எம்மவருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்று நூலாசிரியர் மயூரநாதன்  அண்மைய ஆதித்தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு அவர் கங்கா சத்திரம் இடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். கங்கா சத்திரம் இருந்ததால்தான் அப்பகுதி சத்திரத்துச் சந்தி என்று அழைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இச்சமயத்தில் எனக்கு ஒரு நினைவு தோன்றுகின்றது. எண்பதுகளில் யாழ் ஈழநாடு பத்திரிகையில் யாழ் நகரில் பழமையின் சின்னங்கள் பேணப்படுவதன் அவசியம் என்றொரு கட்டுரை எழுதினேன்.  எழுதிய பின்னரே யாழ் மாநகரசபை கங்கா சத்திரத்தை இடித்தது. இவ்விதமிருக்கின்றது எம்மவரின் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுதல் பற்றிய புரிதல். இந்நிலை மாற வேண்டும். இதற்கு நிச்சயம் இந்நூல் உதவி புரியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

Monday, August 10, 2026

கவிதை: எனக்கு அனுமதி கிடைக்குமா? (May I be allowed ) ஆங்கிலத்தில் - சஞ்சீ குணதிலக (Sanjee Goonetilake) - தமிழில் - கவிஞர் பா.அகிலன்




சிங்களக் கவிஞர் சஞ்சீ  குணதிலகவின் May I be allowed  என்னும் ஆங்கிலக் கவிதையை அவரே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை நண்பர் தனபாலசிங்கம் என்னுடன் பகிர்ந்திருந்தார்.  அதற்காக அவருக்கு நன்றி. மனித நேயம் உள்ள அனைவரையும் உலுக்க வைக்கும் செம்மணிப் புதைகுழி மனித எலும்புக்கூடுகள் இலங்கையின் கறை படிந்த பக்கங்களில் ஒன்று. உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகளுக்குக் கிடைத்தது போன்று இதற்கும் நீதி கிடைக்குமென்று எதிர்ப்பார்ப்போம். 

பள்ளிப் பையுடன் கொன்று புதைக்கப்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அவை.  அவை ஏற்படுத்திய உணர்வுகளைக் கவிதையாக்கியுள்ளார்  சஞ்சீ குணதிலக. அதனக் கவிஞர்  பா.அகிலன் தமிழாக்கம் செய்திருக்கின்றார். அதனையும் தனது பதிவுக்கான எதிர்வினைகளில் ஒன்றாகப்  பகிர்ந்திருந்தார் சஞ்சீ குணதிலக. அத்தமிழ் மொழிபெயர்ப்பையும், ஆங்கில மூலக் கவிதையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.  [டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி]

எனக்கு அனுமதி கிடைக்குமா? - சஞ்சீ குணதிலக 

பள்ளிப் பைகள் மற்றும் பொம்மைகளுடன்
 மண்ணில் புதைக்கப்பட்ட 
அந்தக் குழந்தைகளுக்காகத்
 தனிமையில் கண்ணீர் சிந்த 
எனக்கு அனுமதி கிடைக்குமா? 

அவர்களின் நினைவாகச்
 சடங்குகள் செய்ய 
எனக்கு அனுமதி கிடைக்குமா?

 அதன் மூலம், 
பொம்மைகளுடன் சேர்த்துத் 
தங்களை உயிருடன் புதைக்காத 
ஓரிடத்தில் 
அவர்கள் மறுபிறவி எடுக்கட்டும். 

அவர்களின் உறவினர்களுக்காகத் 
துயரப்பட 
எனக்கு அனுமதி கிடைக்குமா? 

அதன் மூலம், 
அவர்களின் ஆன்மாக்கள் 
ஏதேனும் ஒரு வகையில் 
அனுதாபத்தை உணரட்டும். 

அவர்களின் நினைவாகக் 
கவிதை எழுத 
எனக்கு அனுமதி கிடைக்குமா? 

அதன் மூலம், 
காற்றில் கலந்திருக்கும் 
அந்த ஆன்மாக்கள் 
என் துயரத்தை உணர்ந்து 
என்னை மன்னிக்கட்டும். 
மண்ணில் புதைக்கப்பட்ட 
அந்தக் குழந்தைகளைப் பற்றி 
உங்களைச் சிந்திக்க வைக்க 
எனக்கு அனுமதி கிடைக்குமா? 

அதன் மூலம், 
அந்த ஆன்மாக்களின் அருளால் 
நம் உறவினர்கள் அனைவரும் 
காப்பாற்றப்பட 
நாம் பிரார்த்திக்கலாம். 

இனம், பிறப்பு, சாதி மற்றும் 
பாலினம் ஆகியவற்றின் 
கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல்
 மற்ற மனிதர்கள் மீது
 உணர்வுபூர்வமான பற்று கொள்ள 
எனக்கு அனுமதி கிடைக்குமா? 

 9 ஆகஸ்ட் 2026.

Thursday, August 6, 2026

காலத்தால் அழியாத கருததாழம் மிக்க பாடல் - நான் ஏன் பிறந்தேன்? - கவிஞர் வாலி


எம்ஜிஆரின் ஆளுமை இன்றுவரை நிலை பெற்றிருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவரது படத்தில் இடம் பெறும் இதுபோன்ற கருத்தாழம் மிக்க,ஆரோக்கியமான உணர்வுகளைத் தூண்டும், வாழ்க்கைக்கு வழி காட்டும் பாடல்கள். எனக்கு மிகவும் பிடிக்கும்.
உளவியலின் படி மனத்தை ஒரு விடயத்தில் ஒன்ற வைப்பது மிகவும் சிரமம். ஆனால் இயற்கையை இரசிக்கும்போது, காதலுக்குரியவரை நினைக்கும்போது, பிடித்த சினிமாவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அந்த குரங்கு மனமானது ஓரளவு ஒரு விடயத்தில் குவிந்து விடுகின்றது. அச்சமயத்தில் கூறப்படும் விடயங்கள் பார்ப்பவரின் ஆழ்மனத்தில் சென்று படிந்து விடுகின்றன. அப்படிப் படிந்து விட்டால் பின்னர் அது அவரை வாழ்க்கையில் வழி நடத்திச் செல்லும். இவ்விதம் பதியப்படும் விடயங்கள் நேர்மறையானவையாக இருந்தால் அவை நேர்மறையா விளைவுகளைத்தரும். எதிர்மறையானவையாக இருந்தால் எதிர்மறை விளைவுகளைத்தரும். அதனால்தான் எம்ஜிஆர் தொடர்ச்சியாகத் தன் படங்களில் நல்ல கருத்துகள் அடங்கிய பாடல்களை இடம் பெறச் செய்தார்.
அமெரிக்க அதிபர் ஜோன் எஃப் கென்னடியின் புகழ்பெற்ற , 'நாடு என்ன செய்தது என்று கேட்காதே. நீ அதற்கு என்ன செய்தாய்' என்னும் உரையின் தாக்கத்தால் கவிஞர் வாலி எழுதிய பாடல்.
யாழ் ராணி திரையரங்கில் பார்த்த திரைப்படங்களில் ஒன்று.

Sunday, August 2, 2026

ஏ தாழ்ந்த தமிழகமே!


திமுகவின் மும்மூர்த்திகள்

திமுகவின் உதயத்தை  தமிழகத்தின் பொற்காலமாக நான் கருதுவேன். சமநீதி, சம உரிமை, பகுத்தறிவும், சுயமரியாதை இவற்றின் அடிப்படையில் , தமிழகத்தின் மக்களை எழுத்து, திரைப்படம், உரை மூலம் தட்டியெழுப்பியது திமுக. அறிஞர் அண்ணா தனது ஆங்கில, தமிழ்ப்புலமையினால் ஆணித்தரமான , தர்க்கச்சிறப்புள்ள உரைகளை ஆற்றினார். தனது எழுத்துகள் மூலம் மக்களை எழுச்சி கொள்ள வைத்தார். கலைஞர் கருணாநிதி தனது எழுத்தால், உரையால் மக்களைத் தட்டியெழுப்பினார். பராசக்தி போன்ற திரைப்படங்கள் ஆற்றிய சமுதாயப் பங்களிப்பை அவ்வளவு எளிதாக ஒதுக்கி விட முடியாது. அதே சமயம் எம்ஜிஆர் தனது திரைப்படங்கள் மூலம் திமுகவை மக்கள் மத்தியில் பதிய வைத்தார், அவர் படங்களில் இடம் பெறும் கறுப்பு சிவப்பு நிறங்கள், உதய சூரியன், அண்ணாவின் உருவப்பட்ம், திமுகவின் கொள்கையை வெளிப்படுத்தும் வசனங்கள் , பாடல்கள் , அத்துடன் தனது அரசியற் செயற்பாடுகள் மூலம் அவர் முக்கிய பங்காற்றினார். இவர்கள் மூவரையும் திமுகவின் மும்மூர்த்திகல் என்பேன். இவர்கள் அனைவரையும்  இவ்விதம் செயற்பட வைத்ததற்குக் காரணம் தந்தை பெரியாரின் சமூக, அரசியற் பங்களிப்பே என்பதையும் தவிர்க்க முடியாது.

Saturday, August 1, 2026

பதிவுகள் இணைய இதழ்: 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'!


பதிவுகள் இணைய இதழ்: 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'!


எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், 2000ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்.காம்'. கதை, கட்டுரை, கவிதை, நாவல், ஆய்வு எனப் பல்வேறு பிரிவுகளில் ஆக்கங்களை இவ்விதழில் வாசிக்கலாம். பதிவுகள் இணைய இதழைப் பின்வரும் இணையத்தள முகவரிகளில் வாசிக்கலாம்:

1. http://www.geotamil.com
2. http://www.pathivukal.com
3. http://www.pathivugal.com

உங்கள் ஆக்கங்களையும், ஆக்கபூர்வமான கருத்துகளையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள்: ngiri2704@rogers.com / editor@pathivukal.com

Friday, July 31, 2026

வளை என்னும் சொல்லால் எம்மை வளைக்கும் கவியரசர்!


கவிஞர், இசையமைப்பாளர், பாடகர்கள் &  நடிகர்கள் அனைவரின் திறமையான அம்சங்களையெல்லாம் ஒன்று  திரட்டு உருவான பாடல்களில் இந்தப்பாடலும் ஒன்று. காதலர்கள்  இருவரின் காதல் உணர்வுகளை உற்சாகம் ததும்ப வெளிப்படுத்தும் இசை, நடிப்பு, குரல் , நடன வடிவமைப்பு , மொழியால் இப்பாடலைக் கேட்கும் எவரும் ஈர்க்கப்படுவர் என்பது திண்ணம். 

பாடகி ஜமுனாராணி மறைந்தார்! நினைவில் நிற்கும் பாடகி ஜமுனாராணியின் பாடல்கள்!


தமிழ்த்திரையுலகு எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஆளுமைகளில் ஒருவர் பாடகி ஜமுனாராணி. கலைஞர்கள் இழப்பதில்லை,. அவர்கள்தம் படைப்புகள் மூலம் காலத்தில் நிலைத்து நிற்பார்கள். ஜமுனாராணியும் அவர்தம் பாடல்கள் மூலம் காலத்தில் அழியாது நிலைத்து நிற்பார்.

அவரை நினைத்ததும் என் நினைவுக்கு முதலில் வரும் பாடல்கள் இரண்டு. ஒன்று நெஞ்சினிலே நினைவு முகம் , மற்றது மாமா மாமா மாமா பாடல்களே, அவர் பாடிய பாடல்களுக்கான இணைப்புகளையும் அவர் நினைவாகப் பகிர்ந்துகொள்கின்றேன். [டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி]

மாமா மாமா மாமா - https://www.youtube.com/watch?v=oREibjUo8D0

என்னைக் கவர்ந்த ஏ.வி.எம்.ராஜன்!


அண்மையில் ஜூலை 26 அன்று தனது தொண்ணூறாவது பிறந்த நாளைக் கொண்டாடினார் நடிகரும் , போதகருமான ஏ.வி.எம்.ராஜன். எனக்குப் பிடித்த நடிகர்களில் இவருக்கும் முக்கியமானதோர் இடமுண்டு. எந்தப் பாத்திரமானாலுன் அலட்டிக்கொள்ளாமல் நடிப்பதில் வல்லவர்.

அமைதி தவழும், புன்னகையுடன் கூடிய இவரது முகம் இவரது முக்கிய பலமான அம்சங்களில் ஒன்று. திரையுலகில் நீடித்து நின்றிருக்க வேண்டிய ஒருவரை அதே திரையுலகம் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளியது துரதிருஷ்ட்டமானது. ஆனால் அதற்காக இவர் தளர்ந்து போய் விடவில்லை. இருப்பைச் சவாலுடன் ஏற்று நடை போட்டவர்.

வாழ்வின் பல்வேறு பக்கங்களையும் வெளிப்படுத்தும் வேடங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும், குடும்பப்பாங்கான கதையம்சம் கொண்ட பல படங்களில் இவர் நடிப்பு நினைவில் நிற்கும் வகையில் அமைந்திருக்கும். [டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி]

என் அபிமானத்துக்குரிய நடிகர் ஏ.வி.எம் ராஜன் திரைப்படப்பாடல்கள் சிலவற்றில் எனக்குப் பிடித்த பாடல்கள் இவை.

நெஞ்சினிலே நினைவு முகம் - https://www.youtube.com/watch?v=b66g5A47PWw&list=PLHiu8RqwSsJR-N7gmGMY20AFwEwA6ig4Z&index=19
நாதஸ்வர ஓசையிலே - https://www.youtube.com/watch?v=EbATCXKrN94
பார்த்தேன் சிரித்தேன் - https://www.youtube.com/watch?v=aXtdRLIq99U...
மாலை நேரத்து மயக்கம் - https://www.youtube.com/watch?v=VmQBdMr5qOA

Thursday, July 30, 2026

பதிவுகள் இணைய இதழின் ஜூலை 2026 ,மாதப் புள்ளி விபரம்! பாவித்த மென்பொருள் - (cPanel) Awstats


cPanel - Awstats அறிக்கை காட்டும் இந்த புள்ளிவிவரங்கள்,  பதிவுகள் இணைய் இதழ் மிகப் பெரிய அளவில் வாசகர்களைக் கொண்ட ஒரு முன்னணி ஊடகமாக இயங்கி வருவதை உறுதிப்படுத்துகின்றன. 

ஒரே மாதத்தில் 3,38,000-க்கும் மேற்பட்ட தனித்துவமான வாசகர்கள் (Unique Visitors)  பதிவுகள் தளத்திற்கு வந்திருப்பதும்,  70 லட்சம் பக்கங்கள் (Page Views) வாசிக்கப்பட்டிருப்பதும், இணைய உலகத்தில்  பதிவுகள்  இதழுக்கு இருக்கும் மிகப்பெரிய செல்வாக்கைக் காட்டுகிறது.

Tuesday, July 28, 2026

வ.ந.கிரிதரன் பாடல் - பொறுப்புணர்ந்து செயற்படுவீர்! வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5


வ.ந.கிரிதரன் பாடல் - பொறுப்புணர்ந்து செயற்படுவீர்! 
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி 

திரையில் விம்பங்கள் கண்டு புல்லரிக்கின்றீர்.
தரையில் கால்படாத  விம்பங்கள் அறிவீரா?

நிழலை நிஜமாக எண்ணி நடைபோடுகின்றீர்.
நிஜத்தை அறிவதற்கும் ஆர்வமில்லை உமக்கு.
பகுத்தறியும் பண்பற்றுத்  தூங்குகின்றீர் மானிடரே..
தொகுத் துணர்ந்து தெளிவதுதான் எப்போது?

திரையில் விம்பங்கள் கண்டு புல்லரிக்கின்றீர்.
தரையில் கால்படாத  விம்பங்கள் அறிவீரா?

(ரொக் இசை) வ.ந.கிரிதரன் பாடல்: விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி! வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5


(ரொக் இசை) வ.ந.கிரிதரன் பாடல்: விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி! வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி

விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
நம்பிக்கை உன்மேல் வைத்து நடைபோடு தம்பி!

திரையில் நடிப்பவர் நடிகர் உணர்வாய் தம்பி.
உரைத்திடும் எவையும் உண்மை அல்ல நடிப்பே.
உண்மை இது உணர்ந்து நடைபோடு தம்பி.
உயர்வு நிச்சயம் அடைந்திடுவாய் உணர்வாய் தம்பி.

வர்க்கவிடுதலையே வர்ண விடுதலை என்று நம்பியவர் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர்! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் அகஸ்தியர்

இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர் எழுத்தாளர் அகஸ்தியர்.  நாவல் , சிறுகதை, நாடகம், கட்டுரை, திறனாய்வு , நாட்டுக் கூத்து , மிருதங்க இசை எனப் பன்முகக் கலை, இலக்கிய  ஆளுமை மிக்க படைப்பாளி  அவர். அவர் தான் ஏற்றுக்கொண்ட  மார்க்சியச் சிந்தனையைத் தான் நம்பும் தத்துவமாக வரித்துக்கொண்டவர் அவர். அவர் படைத்தது மக்கள் இலக்கியம். சமூக, வர்க்கப்பிரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எழுந்த புரட்சிக் குரல் அவருடையது.  இவ்விடயத்தில் எவ்விதச் சமரசங்களும் அற்று ச் செயற்பட்டார்.  

ஆயுதங்களில் மிகச்சிறந்த ஆயுதம் எழுத்தாளரின் பேனா.  மக்களைச் சிந்திக்கவைக்க, எழுச்சி கொள்ள வைக்க அதனால்தான் முடியும். தாம் வாழும் சமுதாயத்தைச் சுட்டெரிக்கும் அநீதிகளுக்கெதிராக தம் எழுத்துகளைப் பாவிக்கும் எழுத்தாளர்கள் சமூக, அரசியற் போராளிகள். அவ்விதமான போராளிகளில் ஒருவர்தான் எழுத்தாளர் அகஸ்தியரும்.  தான் பிறந்த மண்ணில் நிலவிய வர்ண, வர்க்க வேறுபாடுகளால் பல்வகைகளிலும் துன்புறும் மக்கள் நிலைகண்டு அவர் பேசாமல், மெளனமாக இருக்கவில்லை. எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து  அந்திம காலம் வரையில் அவரது புரட்சிக் குரலை , எதிர்ப்புக் குரலை, எழச்சிக் குரலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தன அவரது எழுத்துகள். அநீதி கண்டு பொங்கியெழுந்த அவரது ஆரம்ப கால முயற்சிகள் கவிதைகளாகவே இருந்தன. 

Sunday, July 26, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி! வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5


வ.ந.கிரிதரன் பாடல்: விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி!
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி

விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
நம்பிக்கை உன்மேல் வைத்து நடைபோடு தம்பி!

திரையில் நடிப்பவர் நடிகர் உணர்வாய் தம்பி.
உரைத்திடும் எவையும் உண்மை அல்ல நடிப்பே.
உண்மை இது உணர்ந்து நடைபோடு தம்பி.
உயர்வு நிச்சயம் அடைந்திடுவாய் உணர்வாய் தம்பி.

விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
நம்பிக்கை உன்மேல் வைத்து நடைபோடு தம்பி!

Friday, July 24, 2026

கிடைக்கப் பெற்றேன்: எழுத்தாளர் நடேசனின் நான்கு நூல்கள்!


புகலிடத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் நடேசனின் பங்களிப்பு முக்கியமானது. நாவல், சிறுகதை, விமர்சனம், பயணக்கட்டுரை என இவரது பங்களிப்பு பன்முகத்தன்னை மிக்கது. எளிமையான சிறு வசனங்களால் ஆன செறிவான இவரது மொழி வாசிப்புக்கு இனிமையூட்டுவது. எழுத்து தவிர சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் இருப்பவர். பல்லாண்டுகளாக ஆஸ்திரேலியாவில் உதயம் என்னும் பத்திரிகையை நடத்தி வருபவர். 

பதிவுகள்  இணைய இதழில் இவரது பயணக்கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியாகின்றன. பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் வாய்க்காதவர்களுக்கு அந்நாடுகளுக்குச் சென்ற அனுபவங்களைத் தரும் கட்டுரைகள். இவரது, தமிழ் இலக்கியப் பரப்பில் பலர்தம் கவனத்துக்குள்ளாகிய 'அசோகனின் வைத்தியசாலை' நாவல் மற்றும் பயண நூலான 'நைல் நதிக்கரையில் ஆகியவை  பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளிவந்தவை என்பதும் , ' குறிப்பிடத்தக்கது.

இவரது 'நாலு கால் சுவடுகள்', 'பண்ணையில் ஒரு மிருகம்', 'தாத்தாவின் வீடு',  'வெளிகள் ஆயிரம்' நூல்கள் நேற்று எனக்குக் கிடைத்தன. அதற்காக நடேசனுக்கு நன்றி.

இனியுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்!


இலஙகை அழகான எழில் மிகு தீவு! பெளத்த, இந்து, முஸ்லிம், மலே எனப் பல்லின மக்களும் வாழும் இந்து சமுத்திரத்தின் சொர்க்கம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவு. கடல் வளம், நில வளம், இயற்கை வளம் மிக்கதொரு நாடு.
இந்த நாட்டுக்கு இனியொரு கறுப்பு ஜூலை வேண்டாம். முள்ளிவாய்க்கால் வேண்டாம். இதுவரை நடந்த துயரங்களால் துவண்டு போயிருக்கிறது நாடு. இவற்றிலிருந்து மீண்டு வருவது எதிர்கால வளத்துக்கு மிகவும் அவசியம்.
இதுவரை இனவாதத்தால் மூழ்கடித்த அரசியல்வாதிகள் மூலையில் கிடக்கும் சூழல். இன்றுள்ள அரசு, கடந்த கால அரசுகள் இதுவரை இந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாகச் சிறுபான்மையின மக்களுக்கு இழைத்த இனரீதியிலான அழிவுகளுக்கு, படுகொலைகளுக்கு மன்னிப்புக் கேட்பதன் மூலம் புதியதோர் அத்தியாயத்தைத் தொடங்கலாம்.
இதுவரை கால இனவாத அரசுகள் கடைப்பிடித்த கொள்கைகளை இனியும் கடைப்பிடிக்க மாட்டோம் எனப்பகிரங்கமாக உறுதி எடுப்பது அவசியம். காணி ஆக்கிரமிப்பு, அடக்குமுறைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று இன்றுள்ள அரசு உறுதி எடுக்கலாம். செம்மணிப் புதைகுழிகளுக்குள் புதைந்தவர்கள், முள்ளிவாய்க்காலில் மடிந்தவர்கள், இதுவரை காலமும் நாட்டில் ஏற்பட்ட இனவாத அடக்குமுறைகள், படுகொலைகள், உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய நீதி வழங்குவோம் உறுதி அளிக்கலாம் . இவற்றின் மூலம் நாட்டை நல்லதோர் எதிர்காலம் நோக்கித் திருப்பலாம்.

செம்மீன் பற்றி எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் கருத்தும் , என் எதிர்வின்

தகழி சிவசங்கரப் பிள்ளை எனக்குப் பிடித்த 10 நாவல்கள் பற்றியொரு முகநூற் பதிவு இட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் Tamil Journa...