Thursday, April 30, 2026

வ.ந.கிரிதரனின் பாடல் - 'உலகக் கவிஞன் கணியன் பூங்குன்றனார்'! வ.ந.கிரிதரனின் குரலில் 'உலகக் கவிஞன் கணியன் பூங்குன்றனார்' பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி!




வ.ந.கிரிதரனின் குரலில் 'உலகக் கவிஞன் கணியன் பூங்குன்றனார்' பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI   டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி


இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் கணியன் பூங்குன்றன்.

கணியன் பூங்குன்றனார் உலகக் கவிஞன்
நான் என்று அவன் கருதவில்லை.
நாம் என்றே அவன் சிந்தித்தான்.
குறுகிய சிந்தனைக் கவிஞன் அல்லன்.

இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்

காவிரிப்பூம்பட்டினம் போல் புகழ்பெற்ற துறைமுக நகரே யாழ்ப்பாணப்பட்டினம்! - வ.ந.கிரிதரன் -



[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of Indian Ocean Trade”), அதன் உள்ளடக்கத்தையும் கூகுள் நனொ பனானா மூலம் பெற்றுப் படித்தேன். இது வெளிப்படுத்தும் தகவல்களை இக்கட்டுரையில் பாவித்துள்ளேன். தகவற் பிழையெவையாவது தென்பட்டால் அறியத்தாருங்கள் ]


1. யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றறிஞர்களின் சந்தேகங்களும், புரிதல்களும்!

யாழ்ப்பாணம் தமிழர்களின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று. இருந்தாலும் இதன் சரித்திரம் பற்றிய கேள்விகளும்,, சந்தேகங்களும் இன்னும் வரலாற்று அறிஞர்களுக்கு உண்டு., யாழ்ப்பாணச் சரித்திரம் பற்றிய நூல்கள் பல வெளிவந்திருக்கின்றன.  இவற்றின் அடிப்படையில் பொதுவாக இந்நகர்பற்றிய வரலாற்றுத்  தகவல்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். இவை எனது நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவை:

Tuesday, April 28, 2026

அழியாத கோலங்கள்: ஜீவபூமி (ராணிமுத்து) நினைவுகள்!


மானுடரின் வாசிப்பு அனுபவங்கள் பல படிகளைக்கொண்டவை. சிறுவர் இலக்கியம், வெகுசன இலக்கியம் (சரித்திர , சமூக, மர்ம நாவல்கள், காமிக்ஸ்) தீவிர இலக்கியம் எனப் பல படிகளைக்கொண்ட அனுபவங்கள். அவ்வகையில் அனைத்து வகை இலக்கியப் படைப்புகளையும் , அவற்றின் முக்கியத்துவத்தையும் மதிப்பவன் நான்.

Monday, April 27, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்: காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.


வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
நாளின் பிறப்பை நமக்கெல்லாம் எடுத்துரைக்குமே

எங்கும் புத்துணர்ச்சி. எதிலும் புத்துணர்ச்சி.
பொங்கிப் பெருகும் புத்துணர்ச்சி எங்குமே.
காலையின் பண்பு புத்துணர்வு ஆகுமே.
நாளைத் தொடங்குவதற்கு நல்கும் செயலாகுமாம்.

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்குமே

Sunday, April 26, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்: வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு!


வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5   
டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.

சதுரங்கத்தில் வெற்றி பெறுவதற்கே
சிந்தித்து நகர்தல் முக்கியமே.
மண்ணில் வெற்றி பெறுவதற்கே.
எண்ணி நகர்தல்; அவசியமே.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமிங்கே விளையாட்டே.

சதுரங்கம் என்பதொரு போர்க்களமே.
அதுபோல் வாழ்வுமொரு போர்க்களமே.
போர்க்களத்தில் வெற்றி பெறுவதற்கே
பொறுமை மிகவும் அவசியமே.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமிங்கே விளையாட்டே.

பொறுத்தார்  பூமி ஆள்வார்.
போர்க்களத்தில் பொறுத்தார் வெற்றியடைவார்.
சதுரங்கத்தில் சாதனை படைப்பார்.
எதுவந்தபோதும் எழுந்து வெல்வர்.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.

Saturday, April 25, 2026

வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின் 'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'


வ.ந.கிரிதரனின் குரலில் பாரதியாரின்  'நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!'
இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI  டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி


நின்னைச் சரணடைந்தேன்,
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்

Friday, April 24, 2026

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு! (தகவல்: ஓராயம்)


கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24 அன்று 'டொரோண்டோ'வில் நடைபெறவுள்ளது. அது பற்றிய ஓராயம் அமைப்பின் அறிவித்தலை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

வ.ந.கிரிதரனின் குரலில் : "எம்ஜிஆர் படப் பாட்டென்றால்.. ".




வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஏன் என்று கூறுவேன்.
எடுத்துரைப்பேன் நான் கேளீர்.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

வாசிக்கும் வாய்ப்பற்ற மக்கள்
வசிக்கின்றார் கோடிக் கணக்கில்.
நூல் படிக்கும் வாய்ப்பற்றோர்
நூல் எம்ஜிஆர் பாடல்களே.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

நல்ல கருத்தை எடுத்துரைத்தால்
சொல்வதை மீண்டும் சொல்வதால்
நல்ல கருத்து நிலைக்கும்.
நிலைத்து நிற்கும் மூளையில்.

வ.ந.கிரிதரனின் குரலில் : "என் பிரியம் மிகு யாழ் மண்ணே! ".




வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில்  நிலைத்திருக்கும் பிரிய  யாழ்மண்ணே.

பிறந்து உருண்டு தவழ்ந்த மண்.
பருவக் கனவுகள் பூத்த  மண்.
போர்க்களங்கள் எத்தனை சந்தித்தாய் வரலாற்றில்.
பாரில் உயர்ந்து நிற்கின்றாய் யாழ்மண்ணே.

உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில்  நிலைத்திருக்கும் பிரிய  யாழ்மண்ணே.

Thursday, April 23, 2026

(ஏப்ரில் 23 உலகப் புத்தக தினம்) வ.ந.கிரிதரனின் குரலில் : "ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி வாழு என்று சொன்னால் வாழுவேன்".


வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்

வாசிக்கப் புத்தகம் இருந்து விட்டால்
வனமும் எனக்குச் சொர்க்க புரிதான்.
யோசிக்க வைப்பதும் புத்தகம் தான்.
யோசிப்பற்ற வாழ்வில் சுவை உண்டா?

ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்

புத்தகம் அற்ற உலகம்  எனக்கு
சித்தம் அற்ற வெறும் உடல்தான்.
இத்தரையில் இருப்பதற்கு புத்தகம் அவசியம்.
புத்தகம் அற்ற நிலம் பாழ்நிலமே.

ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்

Tuesday, April 21, 2026

வ.ந.கிரிதரனின் குரலில் : பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.


வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி

 




பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.
நங்கையிவள் நயனங்கள் நூறு கதை பேசும்.
நறுங்குவளை மனம்வெட்கி ஒளிந்தோட வைக்கும்.

பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.

பொங்குச் சுழித்தோடும் பேராற்றின் சிலிர்ப்பு
பூவையிவள் பேரழகில் ஏறிநிற்கும் மதர்ப்பு.
மார்புற நூலணைத்து மண்பார்த்துச் செல்வாள்.
யாரிவளோ  என்றே ஆடவர் மனமொடிய வைப்பாள்.

பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.

அதிகாலை எழில்பெறவே அழகுநடை பயில்வாள்.
அவள் பின்னே மோகித்து ஆடவரும் செல்வார்.
அவள் முகம் காணாவிடின்  மனமொடிந்து கிடப்பார்.
அகக்கண்ணில் அவளுருவம் நிறைந்தே நிலைமறப்பார்.

பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.

Monday, April 20, 2026

கலாமோகனின் 'துவாரம்' சிறுகதைத்தொகுப்புப் பற்றி....


நேற்று எழுத்தாளர் கற்சுறாவிடமிருந்து எழுத்தாளர் கலாமோகனின் 'துவாரம' சிறுகதைத்தொகுப்பினைப் பெற்றுக்கொண்டேன். அதனை வெளிப்படுத்தும் புகைப்படம்.

இது கற்சுறா தம்பதியினரின் (கற்சுறா & ஜெபா) 'மற்றது' பதிப்பகம் வெளியிட்ட கலாமோகனின் சிறுகதைகளின் தொகுப்பு -1. எதிர்காலத்தில் ஏனைய தொகுப்புகள் வெளியிடப்பட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

கலாமோகன் புகலிடத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவர். பன்முக, பன்மொழிப்படைப்பாளி (பிரெஞ்சு மொழியிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன)

'தாயகம்' (கனடா) வெளியானபோது அதில் கலாமோகன், ஜெயந்தீசன், நேசமித்திரன் என்னும் பெயர்களில் நிறைய பன்முகப்படைப்புகளை (சிறுகதை, கவிதைம், கட்டுரை & மொழிபெயர்ப்பு என) எழுதியவர்.

கவிதை; குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -


இந்தக் கவிதை ஆஸ்திரியாவிலிருந்து , ஆண்டுக்கு இரு தடவை வெளியாகும் பன்னாட்டிதழான W & W – Words and Worlds Magazine (Austria) இதழில் வெளியான ,எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் ஆங்கில மொழிபெயர்ப்பில் ,  வெளியான கவிதை.
W & W – Words and Worlds Magazine இதழுக்கான இணைய இணைப்பு - Surrendering Myself at the Hands of Winter!  [கவிதைக்கான டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி]

கவிதை;  குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -

குளிர்காலம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
கனடாவில் ஆண்டுகள் பலவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இன்னும் இந்தக் குளிர்காலம் மீதான

என் வெறுப்பு குறைந்தபாடாகவில்லை.
வழக்கம்போல் குளிர்காலம் பற்றிய நினைவுகள்
வந்தவுடன், கூடவே அதனுடன் இணைந்து
வரும் பனி, உறைபனி எல்லாமே நினைவுக்கு
வந்து விடுகின்றன.

இவற்றை இம்முறை எவ்விதம் சமாளிக்கப் போகின்றேன்
என்பது பற்றிய எண்ணங்களே
என் சிந்தையெங்கும் வியாபிக்கத்தொடங்குகின்றன.

நானும்தான் பல தடவைகள் முயற்சி செய்து பார்த்து விட்டேன்,
இம்முறையாவது குளிர்காலத்துடன் ஒரு
நட்பு ஒப்பந்தம் செய்து
நிம்மதியாக இருந்து விடுவோமேயென்று.
எண்ணங்கள் எல்லாமே
என்னைச் சுற்றிக் குளிர்காலம்
தன்கரங்களை விரிக்கும் அத்
தருணத்தில் ஓடியொளிந்து விடுகின்றன.

அடுத்தவருடமாவது
அதனுடன் ஓர் ஐக்கியம் ஏற்பட வேண்டும்.
ஏற்படுமா? என்னும் எண்ண்ங்கள் பெருக,
இம்முறை அதனுடன் நட்பு பாராட்டும்
எண்ணங்களைத் தவிர்த்து விடுகின்றேன்.
அதனுடான போருக்கு என்னைத்
தயார்படுத்திக்கொள்கின்றேன்.

பல தசாம்சங்களாக நான் டொரோண்டொவில்
வாழ்ந்து வருகின்றேன்.
குளிர்காலங்கள் வருகின்றன.
குளிர்காலங்கள் போகின்றன.

குளிர்காலம் பற்றிய என் மனச்சஞ்சலங்களும்
வருகின்றன.
போகின்றன.

நியதிகள் மாற்ற முடியாதவை என்று
அப்போதெல்லாம் என்னையே நான்
சமாதானப்படுத்திக்கொள்கின்றேன்.
இதைக் குளிர்காலத்துடனான என்
சரணாகதி என்று நீங்கள் கூறக்கூடும்.
அதை நான் மறுத்துரைக்கப்போவதில்லை. 

வாசிப்பும், யோசிப்பும்: நவீனக் கவிஞர்களும், மரபுக் கவிதையும்! - வ.ந.கிரிதரன் -


எந்தத்துறையில் படிப்பவர்களும் முதலில் அந்தந்தத் துறையின் ஆரம்ப வரலாற்றைப்படிப்பார்கள். பின்னரே அதன் தற்கால விடயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் நம் கவிஞர்களுக்கு மட்டும் இந்தக் கவலை இல்லை.

இவர்கள் கவிதையின் வரலாறு பற்றிக் கவலைப்படுவதில்லை. மரபுக்கவிதை பற்றி குறைந்தது அறிந்து கொள்வதற்கோ அல்லது புரிந்து கொள்வதற்கோ முயற்சி செய்வதில்லை.

மரபுச் சூத்திரங்களுக்குள் சிக்கிச் சுழல்வதற்கு நானும் விரும்புவதில்லை. நவீனத்துவம், பின் நவீனத்துவம் எல்லாம் மரபுகளை உடைத்தெறிந்தவை. 

ஆனால், அதற்காக நான் மரபுக்கவிதை பற்றி அறியத்  தேவையில்லை என்று அடம் பிடிப்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

அழியாத கோலம்: ராணிமுத்துப் பிரசுரமாக லக்ஷ்மியின் 'காஞ்சனையின் கனவு'!


அண்மையில் veryrare book முகநூற் பக்கத்தில்  ராணிமுத்து பிரசுரத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் வெளியான எழுத்தாளர் லக்ஷ்மியின் 'காஞ்சனையின் கனவு' நாவலின் பக்கங்களைப் பகிர்ந்திருந்தார். 

என் நினைவு குருவி உடனடியாகவே அக்காலகட்டத்துக்கே பறந்து சென்று விட்டது. எவ்விதப் பொறுப்புகளுமற்று , பெற்றோரின் அரவணைப்பில் இன்பமாக வாழ்ந்த பால்யப்பருவத்து நினைவுகள் எப்பொழுதும் மகிழ்ச்சி மிக்கவை.

லக்ஷ்மி அம்மா, அப்பாவின் காலத்து எழுத்தாளர். மருத்துவர் . திரிபுரசுந்தரி என்பது அவர்தம் இயற்பெயர். அப்போது எழுத்திலிருந்து சிறிது ஒதுங்கி, தென்னாபிரிக்காவில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.  

கலாநிதி சிரினிமல் லக்துசிங்க (Dr. Sirinimal Lakdusinghe) மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -


என்னுடைய 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ' ஆய்வு நூல் எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்தவின் சிங்கள மொழிபெயர்ப்பில் ,. ஆகச பதிப்பக வெளியீடாக வெளியானது. அந்நூலுக்கு அணிந்துரை எழுதியவர் தொல்லியல் அறிஞரும், தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநருமான கலாநிதி சிரினிமல் லக்துசிங்க (Dr. Sirinimal Lakdusinghe)  அவர்கள். என்னை அவருக்குத்  தெரியாது. இருந்தாலும் என் நூலை வாசித்து அதற்கோர் அணிந்துரை எழுதியவர் அவர்.

Saturday, April 18, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்: இயற்கையைப் பேணுவோம். வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5


வ.ந.கிரிதரனின் பாடல்: இயற்கையைப் பேணுவோம். 

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

விரிந்து கிடக்கிறது இயற்கை எங்கும்.
விரியும் அழகில் என்னை மறக்கின்றேன்.
விரிவான் என்னை எப்பொழுதும் மயக்கும்.
வியக்க வைக்கும் பசுமைமிகு வயல்கள்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

என்னை மறப்பதில் புத்துணர்வு ஊறுமே.
தன்னை மறப்பதில் பெருகுவதும் இன்பமே.
இருப்பைக்  களிப்புடன் தொடர வைக்கும்
இயற்கையை எப்பொழுதும் விரும்புவேன் நான்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

Friday, April 17, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.


வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

என்று சொன்னான் மகாகவி பாரதி
நன்றாய் நாளைக் கழித்திட வேண்டி.
என்றும் இருப்பில் இன்பம் நாடி.
நன்று சொன்னான் என்று சொல்வேன்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

Thursday, April 16, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்: இரவு வானின் இரசிகன் நான்! வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5!


வ.ந.கிரிதரனின் பாடல்: இரவு வானின் இரசிகன் நான்!

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே

விரிந்திருக்கும் இரவு வானின் சுடர்கள்
வியப்பைத் தரும். சிந்திக்க வைக்கும்.
புரியாத இருப்பு பற்றி எண்ணுவேன்.
விரியும் சிந்தனையில் மூழ்கிக் கிடப்பேன்.

இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே

தெரியும் தொலைவுகள் பிரமிக்க வைக்கும்.
எரி நட்சத்திரங்கள் கிளர்ச்சி தரும்.
தொலைவுகளில் எத்தனை எத்தனை உலகங்களோ?
மலைப்பைத்  தரும் சிந்தனைகள் தொடரும்.

இரவு வானை இரசிப்பதில் எனக்கு
இன்பமே என்றும் பேர் இன்பமே

வ.ந.கிரிதரனின் பாடல் :வரலாறு! வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5!


வ.ந.கிரிதரனின் பாடல் :வரலாறு

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உழைக்கும் தொழிலாளர் வரலாறே வரலாறு.
உலகின் வரலாறு இவர்தம்  வரலாறே.
உழைப்பவர்  வேர்வையும் , உழைப்பும் இங்கு
உண்மையான வரலாற்றை எழுதி வைக்கும்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உண்மை வரலாற்றை அறிவது நம் கடமை.
மண்ணின் வரலாறு உழைப்பவரின் வரலாறே.
மன்னரின் வரலாறு  வரலாறு அல்ல.
உணர்வோம்.   உள்ளத்தில் அவரைப்  போற்றுவோம்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

Wednesday, April 15, 2026

பாடகரும் , தொழில் நுட்ப வளர்ச்சியும்!


தமிழ்த்திரைப்படங்களின் ஆரம்பக் காலகட்டத்தில்  பாடும் திறமை மிக்கவர்களே கதாநாயகர்களாக, கதாநாயகிகளாக நடிக்க முடியும் நிலை இருந்தது. அதனை மாற்றியது பின்னணிக் குரல் கொடுத்துப் பாடும்  'டப்பிங்' தொழில் நுட்பம்.  இன்று செயற்கைத் தொழில் நுட்பத்தின் வருகையுடன் இந்நிலையும் மாறுதலடைந்து வருகின்றது. இன்று செயற்கை நுண்ணறிவால் இசையமைத்துப் பாடவும் முடிகின்றது. ஒருவரின் குரலில் பாடும் திறமையும் அதற்குள்ளது. 

நடிகர்களின் குரல்களிலேயே பாடும் நிலையினை இலகுவாக்கி விட்டது செயற்கை நுண்ணறிவுத்  தொழில் நுட்பம். மேலும் சிலரின் குரல் நன்றாகவிருக்கும். ஆனால் பாடும் திறமை இருக்காது. சிலருக்குப் பாடும் திறமை இருக்கும், ஆனால் அவர்கள்தம் குரல் சிறப்பாக இருக்காது. இந்நிலையில் சிறந்த குரல்களைத்  தேர்ந்தெடுத்து அவற்றைப் பாவித்துப் பாடல்களைப் பாட வைக்கும் நிலை உருவாகியுள்ளது.

Tuesday, April 14, 2026

வ.ந.கிரிதரனின் குரலில் - இசை & குரல் - SUNO AI. ஓவியம் - கூகுள் chatGPT


வ.ந.கிரிதரனின் பாடல் - இருப்பைப் புரிந்து கொள்ளல்!
எனது , வ.ந.கிரிதரனின் குரலில் -    இசை & குரல் - SUNO AI.   ஓவியம் - கூகுள் chatGPT


விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

இருக்கும் இருப்பைப் புரிந்து கொள்வது
இன்பம் மிக்கது. ஊக்கம் தருவது.
இருப்பை அறிவதும் அறியும் பொருட்டு
இருப்பது என்றால் அதுபோதும் எனக்கு.

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

இருப்பை அறிந்து கொள்வதற்கு நம்
இருப்பின் காலம் போதவே போதா.
இருந்தும் இருப்பை முழுவதும் அறிய
இருக்கும் வரையில் முயற்சி செய்வேன்.

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன். 

என்னை, உலகை, உயிரை அறிய
எவ்வழி என்றாலும் முயற்சி செய்வேன்.
அறிவியல் நூல்கள் அறிஞர் கருத்துகள்
அனைத்தையும் துணைக்கு அழைத்தே இருப்பேன்.

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

பிணக்கு! - வ.ந.கிரிதரன் -


அவ்வப்போது நான் CMR வானொலியின் இரவுத் தமிழ்ச் சேவையைக் கேட்பதுண்டு. குறிப்பாக ஒலிபரப்பாளர் செந்தில்நாதனின் 'சொல்லாடல்' நிகழ்ச்சியை, சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது கேட்பதுண்டு. இரவு 11 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரையில் நடைபெறும் நிகழ்ச்சி. ஆரம்பத்தில் ஒரு சொல்லைக் குறிப்பிடுவார்.  தொடர்ந்து வரும் நேயர்கள் கேட்கும் கேள்விகள், அவற்றுக்கான அவர்தம் எதிர்வினைகளின் அடிப்படையில் இறுதியில் நேயர்கள் பதிலைக் கண்டு பிடிப்பார்கள். சில சமயங்களில் மறக்க முடியாத சொற்களில் ஒன்றாக அச்சொல் அமைந்து விடும். அவ்விதமானதொரு சொல்லான கவரிமா (கவரிமான் என்று தவறாக அழைக்கப்படும் சொல்) பற்றிச் சொல்லாடலில் வந்ததுபற்றியொரு பதிவினை முன்னர் இட்டிருந்தேன். அதுபோல் இன்னுமொரு சொல்லும் மறக்க முடியாத வகையில் சொல்லாடலை நினைவில் நிறுத்தி விட்டது. அது பற்றிய பதிவு இது.

அது ஒரு வெள்ளி இரவு. நேரம் 11.52 . அடடா 'சொல்லாடல்' நடந்து கொண்டிருக்குமே  என்ற எண்ணம் தோன்றவே 101.3 FM அலைவரிசைக்குச் சென்றால் சொல்லாடல் நடந்து கொண்டிருந்தது. நேரம் 11.54. இன்னும் நேயர்களில் எவரும் விடையைக் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் நேயர்கள் சொல்லை நெருங்கி விட்டிருந்தார்கள் என்பதைச் செந்தில்நாதனின் எதிர்வினைகளிலிருந்து அறிய முடிந்தது. 

SURRENDERING MYSELF AT THE HANDS OF WINTER - V.N.Giritharan (குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -) | Rendered in English by Latha Ramakrishnan -


ஆஸ்திரியாவைத்  தளமாகக்கொண்டு வெளியாகும் சஞ்சிகை Words & World  இதன் இவ்வாண்டுக்கான முதலாவது இதழில்  எனது கவிதையான 'குளிர்காலத்துடனான என் சரணாகதி!' யின் தமிழ் வடிவமும், எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியாகியுள்ளன. அதற்கான இணைய இணைப்பு - 

குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -

குளிர்காலம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
கனடாவில் ஆண்டுகள் பலவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இன்னும் இந்தக் குளிர்காலம் மீதான

என் வெறுப்பு குறைந்தபாடாகவில்லை.
வழக்கம்போல் குளிர்காலம் பற்றிய நினைவுகள்
வந்தவுடன், கூடவே அதனுடன் இணைந்து
வரும் பனி, உறைபனி எல்லாமே நினைவுக்கு
வந்து விடுகின்றன.

Monday, April 13, 2026

எழுத்தாளர் த.சிவதாசனின் 'காலம் 63' கட்டுரை 'கனடா நாற்பது'வும், வரலாற்று இருட்டடிப்பும்! - வ.ந.கிரிதரன் -


கனடாத் தமிழ் எழுத்தாளர்களில் சிலர் ஆய்வாளர்கள் அவதாரம் எடுத்ததும் வரலாற்றை மூடி மறைக்கும் வேலையைச் செய்யத் தொடங்கி விடுவர். எழுத்தாளர் ரதன் மகரந்தன் என்னும் பெயரில் சுபமங்களா சஞ்சிகையில் 'கனடாவில் தமிழ்' என்னுமொரு கட்டுரையை எழுதியபோது அக்காலகட்டத்தில் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துக்கொண்டிருந்த பலரைத் தவிர்த்திருந்தார். அது பலத்த வாக்கு வாதங்களை ஏற்படுத்தியது. அதற்குப் பதிலாக எழுத்தாளர் ஒருவர் , ப.ஶ்ரீகாந்தனாக இருக்க வேண்டும், வாசகர் கடிதம் எழுதி அதனையும் சுபமங்களா  வெளியிட்டிருந்தது. 

Saturday, April 11, 2026

அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய குறிப்புகள்! - வ.ந,கிரிதரன் -


[காலம்' செல்வத்தின் ஏற்பாட்டில் இன்று டொரோண்டோ, கனடாவில் நடந்த 'வாழும் தமிழ் நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் ' 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றி ,நேரக்கட்டுப்பாடு காரணமாக நான் கூறவிருந்த் எல்லா விடயங்களையும் என்னால் கூற முடியவில்லை. அதனால் கூற விருந்த ஏனைய விடயங்களையும் ஓரளவு முழுமையாக்கி இப்பதிவில் தந்திருக்கின்றேன்.]


அறிவியல்  நூல்களின் அவசியம் ஏன்?  அறிவை மக்களைச் சென்றடைய, தவறான தகவல்களைத் தடுக்க,  அதாவது சரியான தகவல்களை அறிய, அறிவியல் சிந்தனையை வளர்க்க, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த, மூட நம்பிக்கைகளைக் குறைக்க, அரசின் முடிவுகள் சரியாக ,அறிவு பூர்வமாக அமைய, மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்த, சிந்தனையைத் தூண்ட, ஏன் என்று கேள்விகளைக்  கேட்கும் ஆற்றலை வளர்க்க,  அறிவியல் தொழில் நுட்பத்தை , அதன் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள  அறிவியல் கட்டுரைகள் , நூல்கள்  எழுதப்பட வேண்டும்.  அறிவு பகிரப்பட வேண்டும்.  அதனைச் சாத்தியமாக்குபவை அறிவியல் எழுத்துகள். 

எனக்கு அறிவியல் துறையில்  வானியல், வானியற்பியல்  மிகவும் பிடிக்கும். என் பால்ய பருவத்தில் , வவுனியாவில், வீட்டு முற்றத்தில் அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்கி, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானைப்பார்த்ததிலிருந்து என் ஆர்வம் தொடங்கியது என்பேன். அக்காலகட்டத்தில் கல்கியில் 'பொன்னியின் செல்வன்'  நாவலும் மீண்டும் தொடராக வெளியாகத்தொடங்கியிருந்தது. ஓவியர் வினுவின் அழகான ஓவியங்களுடன்  வெளியான  நாவலில் அப்போது அடிக்கடி வானில் தோன்றிக்கொண்டிருந்த தூமகேது பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்பொழுதுதான் அவ்விதம் குறிப்பிடப்பட்டிருப்பது வால்வெள்ளி  என்பதை அறிந்தேன். நாவல் நடைபெறும் காலத்தில் நடக்கப்போகும் துர்ச்சம்பவமொன்றினை எதிர்வு கூறுவதாகத் தூமகேது சித்திரிக்கப்பட்டிருக்கும். அதே காலகட்டத்தில் கல்கியில் வாண்டுமாமாவின் 'ஓநாய்க்கோட்டை' என்னும் சித்திரக்கதையொன்றும் வெளியாகிக்கொண்டிருந்தது.அதில் வரும் தூமகேது பாத்திரமும் பயங்கரமானதோர் ஆளுமையாகச் சித்திரிக்கப்பட்டிருந்த பாத்திரம். அதனால் தூமகேது என்னும் பெயரும் எம்மைப் பயப்படுத்துமொரு பெயராக அக்காலகட்டத்திலிருந்தது. அத்துடன் அக்காலகட்டத்தில் அடிவானில் தென்பட்டுக்கொண்டிருந்த வால்வெள்ளியும் நினைவுக்கு வருகின்றது. 

அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணன் 


அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூலின் 'என்னுரையில்' தன் சிறுவயதில் பூதக்கண்ணாடியுடன் அலைந்து திரிந்த  அனுபவத்தை விபரித்திருப்பார். அதை வாசித்தபோது எனக்குப் பழைய நினைவுகள் மீள் எழுந்தன. கலகி சஞ்சிகையின் அளவில் சிறுவர்களுக்கான  அறிவியல் புத்தகமொன்று 'நீங்களும் விஞ்ஞானியாகலாம்' என்னும் பெயரில் அல்லது அது போன்றதொரு பெயரில் வெளியாகியிருந்தது. யாழ்  பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்த நூல்களிலொன்று. பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவில் திரியும் சிறுவனொருவனின் சித்திரம் போன்ற சித்திரங்களுடன் வெளியாகியிருந்த அந்த நூலை அடிக்கடி எடுத்து வாசித்திருக்கின்றேன். மிகவும் எளிய தமிழ்லில் எழுதப்பட்டிருந்த நூலும், சித்திரங்களும் நெஞ்சில் கிளர்ச்சியை ஏற்படுத்தின.  அதனைக் கலைக்கதிர் நிறுவனம் வெளியிட்டிருக்கலாம். சரியாக நினைவிலில்லை. அதை வாசித்து விட்டு , வெங்கட்ரமணன் போல் நானும் பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவு முழுவதும், என்னை ஓர் அறிவியல் அறிஞராகக் கருதிக்கொண்டு அலைந்துதிரிந்தேன். 

Friday, April 10, 2026

எழுத்தாளர் கற்சுறாவின் 'நூலகம்' பற்றிய குற்றச்சாட்டுகள்...

எழுத்தாளர் கற்சுறா

அண்மையில் முகநூலில் எழுத்தாளர் கற்சுறா நூலகம் பற்றியும், 'நூலக' அறக்கட்டளையுடன் இணைந்து செயற்படும் சஜீவன் பற்றியும் , சஜீவனின் கிளப் ஹவுஸ்ஸில் நண்பர் பரதனுடன் நடந்த உரையாடல் பற்றியுமொரு பதிவிட்டிருந்தார். அதில் அவர் பின்வரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இதுவரை தானும், தன் நண்பர்களும் நூலகத்துக்கு அனுப்பிய பணத்தைத்  திருப்பி அனுப்பும்படியும், நூலகத்தில் உள்ள தனது நூல்கள், சஞ்சிகைகளை நீக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார். 

Monday, April 6, 2026

மகாகவி பாரதியார் பாடல் - 'கண்ணம்மா என் காதலி (2) '


மகாகவி பாரதியாரின் 'கண்ணம்மா என் காதலி (2) ' கவிதையைப் பாவித்து இப்பாடலை உருவாக்கியுள்ளேன். என் குரலில் இசையமைத்துப் பாடியிருப்பவர் செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5.5


மகாகவி பாரதியார் பாடல் - 'கண்ணம்மா என் காதலி (2) '

இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்


மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
‘வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்.

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்.

வ.ந.கிரிதரன் பாடல் : தலை குனிந்து செல்லும் பெண்ணே!


எனது பாடல் வரிகளுக்கு, என் குரலில் இசைமைத்துப் பாடியிருப்பது செயற்கை நுண்ணறிவு SUNO 5.5
 
வ.ந.கிரிதரன் பாடல் : தலை குனிந்து செல்லும் பெண்ணே!
இசை & வ.ந.கிரிதரனின் குரலில்: SUNO AI ஓவியம்: கூகுள் AI
ஆக்கியவர்: வ.ந.கிரிதரன்  
 
தலை குனிந்து செல்லும் பெண்ணே!
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன?
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன
நிலை குலைந்தா போவாய் கண்ணே!
 
கண்ணும் கண்ணும் பார்க்க வேண்டும்.
காதல் நதியெனப் பொங்க வேண்டும்.
எண்ணம் எல்லாம் நிறைய வேண்டும்.
மண்ணின் வாழ்வு சிறக்க வேண்டும்.
 
தலை குனிந்து செல்லும் பெண்ணே!
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன?

அறிவியல் நூல்களும், அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய வெளியீட்டு அறிவிப்பும் பற்றி... வ.ந.கிரிதரன் -


அறிவியல்  நூல்களின் அவசியம் ஏன்?  அறிவை மக்களைச் சென்றடைய, தவறான தகவல்களைத் தடுக்க,  அதாவது சரியான தகவல்களை அறிய, அறிவியல் சிந்தனையை வளர்க்க, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த, மூட நம்பிக்கைகளைக் குறைக்க, அரசின் முடிவுகள் சரியாக ,அறிவு பூர்வமாக அமைய, மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்த, அறிவியல் கட்டுரைகள் , நூல்கள் பொதுமக்களுக்காக எழுதப்பட வேண்டும், ஏனெனில்: அறிவு பகிரப்பட வேண்டும். உண்மை பரவ வேண்டும். சிந்தனை வளர வேண்டும்.

'வாழும் தமிழ்' என்னும் சொற்றொடர் பற்றி.... - வ.ந.கிரிதரன் -


 

எழுத்தாளர் ஜெயமோகன் அண்மையில் நியூயோர்க் மாநகரில் நடைபெற்ற 'வாழும் தமிழ்' நிகழ்வில் ஆற்றிய ஆங்கில உரையினையும், அதன் கூகுள் தமிழாக்கத்தையும் தனது வலைப்பதிவில் பகிர்ந்திருந்தார். அதில் அவர் 'வாழும் தமிழ்' என்னும் சொற்றொடர் பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தார்:

"அக்காலத்தில் காலம் செல்வம், ‘வாழும் தமிழ்’ என்ற பெயரில் ஓர் இலக்கிய நிகழ்வை, அதாவது ஒரு புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அவரது அனுமதியுடன் இந்த விழாவின் பெயரை நாங்கள் அவரிடமிருந்து பெற்றோம். இந்த நிகழ்வு அவரது கனவுகளின் வளர்ச்சிநிலை. ‘வாழும் தமிழ்’ என்ற சொல்லை உருவாக்கிய செல்வத்தின் மனநிலையை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். இவ்வுலகின் எந்தவொரு சிறந்த மொழியையும் போலவே, தமிழும் இங்கு என்றென்றும் வாழப்போகிறது. நாம் அதை வாழவைக்கவில்லை. அப்படியென்றால், ‘வாழும் தமிழ்’ என்ற சொல்லின் பொருள் என்ன? செல்வம் அக்காலத்தில் ஒரு அகதியாக இருந்தார்; இலங்கையிலிருந்து பாரிஸுக்கும், பின்னர் டொராண்டோவுக்கும் குடிபெயர்ந்தார். தனிப்பட்ட முறையில் அவருக்கு அந்தச் சொல்லின் பொருள் என்ன? அது அவருக்கு ஒரு மந்திரமாக இருந்தது; முப்பது ஆண்டுகளாக அதைத் தன் நெஞ்சில் சுமந்து, தன் வாழ்நாள் முழுவதையும் அதற்காகவே செலவிட்டார்."

கி.வா.ஜகந்நாதன் 

Friday, April 3, 2026

மகாகவி பாரதியார் பாடல் - பாரத சமுதாயம்


மகாகவி பாரதியாரின் 'பாரத சமுதாயம்' கவிதையில் எனக்குப் பிடித்த வரிகளைக்கொண்டு இப்பாடலை உருவாக்கியுள்ளேன். என் குரலில் இசையமைத்துப் பாடியிருப்பவர் செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5.5

மகாகவி பாரதியார்  பாடல் - பாரத சமுதாயம்

இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI  ஓவியம்:  கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன் 

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ ?

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில்
வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மிலந்த
வாழ்க்கை இனியுண்டோ ?

Thursday, April 2, 2026

மகாகவி பாரதியார் பாடல் - எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே!


எனக்குப் பிடித்த மகாகவி  பாரதியாரின் இன்னுமொரு பாடலிது. எனது குரலைப் பாவித்து , இசையமைத்துப் பாடியிருக்கின்றார் செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5.5..

மகாகவி பாரதியார்  பாடல் - எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே
இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI  ஓவியம்:  கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன் 


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

Wednesday, April 1, 2026

மகாகவி பாரதியார் பாடல் - 'நான்'


எனக்குப் பிடித்த மகாகவி  பாரதியாரின் இன்னுமொரு பாடலிது. எனது குரலைப் பாவித்து , இசையமைத்துப் பாடியிருக்கின்றார் செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5.5. என்னுடன் கூடப் பாடும் பெண் பாடகி 'கணனிச்செல்வி' செயற்கை நுண்ணறிவின் குழந்தை.

மகாகவி பாரதியார்  பாடல் - 'நான்'   
இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI  ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன் 


வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானிழல் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியிலுள்ள உயிரெலாம் நான்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எ...