Tuesday, April 21, 2026

வ.ந.கிரிதரனின் குரலில் : பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.


வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி

 




பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.
நங்கையிவள் நயனங்கள் நூறு கதை பேசும்.
நறுங்குவளை மனம்வெட்கி ஒளிந்தோட வைக்கும்.

பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.

பொங்குச் சுழித்தோடும் பேராற்றின் சிலிர்ப்பு
பூவையிவள் பேரழகில் ஏறிநிற்கும் மதர்ப்பு.
மார்புற நூலணைத்து மண்பார்த்துச் செல்வாள்.
யாரிவளோ  என்றே ஆடவர் மனமொடிய வைப்பாள்.

பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.

அதிகாலை எழில்பெறவே அழகுநடை பயில்வாள்.
அவள் பின்னே மோகித்து ஆடவரும் செல்வார்.
அவள் முகம் காணாவிடின்  மனமொடிந்து கிடப்பார்.
அகக்கண்ணில் அவளுருவம் நிறைந்தே நிலைமறப்பார்.

பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.காதலெனும்  உணர்வு மட்டும்  இல்லையென்றால்
காளையர்  ஏன் நிலைகுலைந்து  கிடக்கின்றார்?
காதலால் பூவுலகை நிறைத்து வைப்பீர்!
ஆதலால் இன்பவூற்றைப் பெருக வைப்பீர்.

பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்.
புலவனையும் பித்தனாக மாற்றி வைக்கும்.

No comments:

ஒரு டொரோண்டோ நகரவாசியின் 'கோல்டென் மைல் மீளமைப்பு' (ReNew Golden Mile) திட்டம் பற்றிய அக்கறை! - வ.ந.கிரிதரன் -

டொரோண்டோ மாநகரசபை அண்மையில் ReNew Golden Mile திட்டம் பற்றிய சுற்றுச் சூழல் மதிப்பீட்டை முடித்திருந்தது. அது பற்றிப் பொதுமக்களின் கருத்துகளை...