Tuesday, June 30, 2026

பறத்தலை நிறுத்திய வானம்பாடி: கவிஞர் புவியரசு மறைந்தார்!

கவிஞர்  புவியரசு!

வானம்பாடி கவிதை இயக்கத்தின் பிதாமகன் என அழைக்கப்படுபவரும், கவிஞரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான கவிஞர் புவியரசு அவர்கள் தனது தொண்ணூற்றாறாவது வயதில் மறைந்த செய்தியினை அறிந்தேன். மூப்பின் காரணமாக மறைந்த மார்க்சியவாதியான கவிஞர் புவியரசுவின் மறைவு  தவிர்க்க முடியாதது என்றாலும் பேரிழப்பே. அவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

அவர் நினைவாக , முகநூலில் கலை,இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்கள் பகிர்ந்திருந்த கவியரசர் புவியரசு பற்றிய ஆவணத்திரைப்படத்துக்கான இணைய இணைப்பை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன் - https://youtu.be/voUc3CTs4lI

அத்துடன்  கவிஞர் புவியரசு பற்றிய விக்கிபீடியாக் குறிப்பையும், கவிஞரின் மொழிபெயர்ப்பில் வெளியான கரமசோவ் சகோதரர்கள் பற்றி நான் முன்பு எழுதியிருந்த குறிப்பினையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

வெகுசன இலக்கியம்: உமாசந்திரனின் முழுநிலா!


எழுத்தாளர் உமாசந்திரனின் முள்ளும் மலரும் நாவலைப் பலரும் அறிந்திருப்பர். அது கல்கி சஞ்சிகையின் வெள்ளி விழா நாவல் போட்டியில் முதற் பரிசு பெற்ற நாவல். அத்துடன் ரஜனிகாந்த் நடிப்பில், மகேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படமும் கூட.
அவரது இன்னுமொரு நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல். என் பால்யப் பருவத்து வாசிப்பில் அதற்கும் முக்கிய இடமுண்டு. அது ஆனந்த விகடனில் தொடராக வெளியான 'முழு நிலா' நாவல். ஓவியர் கோபுலுவின் மனத்தை ஈர்க்கும் ஓவியங்களுடன் வெளியான நாவல் , அது வெளிவந்த காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த தொடர்கதைகளில் ஒன்று.
அதில் வரும் உப்பிலி, நளினா, தாமு பாத்திரங்கள் மறக்க முடியாத பாத்திரங்கள்.

முழுநிலா நாவலின் சில பக்கங்களை இங்கு காண்கின்றீர்கள்.  

Friday, June 26, 2026

முகநூல் தர்க்கம்: வெகுசன இலக்கியம்!


அண்மையில் என் முகநூல் பக்கத்தில் வெகுசன இலக்கியம் பற்றி என் முகநூல் நண்பர்களுடன் நடந்த தர்க்கத்தின் தொகுப்பிது. வாசியுங்கள்! உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


வெகுசன இலக்கியம்!

மானுடரின் வாசிப்புப் படிக்கட்டுகளில் வெகுசன இலக்கியமும் முக்கியமானதொரு படிக்கட்டு. சிறுவர் இலக்கியம் எவ்விதம் முக்கியமோ அவ்விதமே வெகுசன இலக்கியமும் முக்கியம். தீவிர இலக்கியத்துக்கு ஒருவரைக் கொண்டு செல்வதற்கு , ஒருவருக்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அந்தப்பணியினை வெகுசன இலக்கியம் செய்கிறது. இக்குழுவில் நீங்கள் நீங்கள் வாசித்த வெகுசன படைப்புகள் பற்றி, அதாவது நாவல்கள், காமிக்ஸ், சிறுகதைகள், கவிதைகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், அபுனைவுகள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.

Tamil Journalist:


இதுவுமொரு சிக்கலான விடயம்தான். வெகுசன இலக்கியம் வாசகனைத் தேடிச் சென்று மகிழ்விக்கிறது என்றால், தீவிர இலக்கியம் வாசகனைத் தன்பக்கம் இழுத்து அவனைச் சிந்திக்க வைக்குமென்கிற கணிப்பீடு என்பதெல்லாம் வெறும் அபத்தம் தோழரே

உடனே தமிழின் தீவிர இலக்கிய முன்னோடி புதுமைப்பித்தன் என்று ஆரம்பித்து உடனேயே தாங்கள் அறிந்த கசடுகளின் தலைவர்களை பட்டியலாக்கி மற்றவர்களை வணிக எழுத்தாளென்கிற மாய உலகம் இது..தீவிர இலக்கியம் மற்றும் வெகுசன இலக்கியம் ஆகிய இரண்டிற்குமான எல்லைக் கோடு மறைந்து, அனைத்துமே வணிகமயமாகிவிட்டது என்பதுதான் இங்கு நான் காண்கிற நிதர்சனம் தோழரே.

Navaratnam Giritharan:

Tamil Journalist ஒரு கேள்வி.. வாசிப்புப் படிக்கட்டில் சிறுவர் இலக்கியம் முக்கியமா இல்லையா? மேலும் எங்கும் 'வெகுசன இலக்கியம் வாசகனைத் தேடிச் சென்று மகிழ்விக்கிறது ' என்று என் பதிவில் கூறவில்லையே. வாசிப்புப் படிக்கட்டில் சிறுவர் இலக்கியம் போல் ஒரு காலகட்டத்தில் வெகுசன இலக்கியமும் ஒரு படிக்கட்டாக இருக்கிறது என்றுதான் கூறியிருக்கின்றேன். அப்படி இல்லையென்று நீங்கள் கூறினால் அது உங்கள் கருத்து. என் கருத்தல்ல.

Tamil Journalist:

இதில் நாம் உணர்ச்சிவசப்பட்டுச் சினப்பதற்கோ, கோபப்படுவதற்கோ எதுவுமில்லை தோழரே! ஏனெனில், இந்த இலக்கியங்களும், அவை பின்னி வைத்திருக்கிற 'இசங்களும்' நமக்கு அப்படித்தான் கற்பித்திருக்கின்றன; நம்மை அப்படித்தான் பழக்கியிருக்கின்றன.'

Tuesday, June 23, 2026

முகநூலில் எதிர்வினைகளினூடு ஒரு நேர்காணல்!


முகநூலில் மல்லிகை சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் செ.யோகராசா அன்று எழுதிய அ.ந.கந்தசாமியின் கவிதைப்பங்களிப்பு  பற்றி எழுதிய கட்டுரையைப் பதிவிட்டிருந்தேன். அதற்குத் தன் எதிர்வினையாற்றிய கலை, இலக்கிய விமர்சகர் அமரர் கே.எஸ்.சிவகுமாரனுடன் கருத்துகளைப்பரிமாறும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் கேள்விகள் சிலவற்றுக்கு அவரும் சளைக்காமல் பதிலளித்தார். முடிவில் பார்த்தபோது அதுவே சிறியதொரு நேர்காணலாக இருப்பதை அறிந்தேன். அதனைத்தொகுத்து இங்கு  பதிவு செய்கின்றேன். நண்பர்களே! நீங்கள் உங்கள் நட்பு வட்டத்திலுள்ள கலை, இலக்கிய , அரசியல் ஆளுமை எவருடனாவது இவ்விதமாகக் கேள்விகள் கேட்பதன் மூலம் நேர்காணலற்ற நேர்காணல்களைச் செய்ய முடியும்.

யார் சொன்னது முகநூல் ஆரோக்கியமற்றதென்று? இது முகநூலின் ஆரோக்கியமான விளைவுகளிலொன்று.  எழுத்தாளர் எம்.எஸ்.எம். இக்பால் பற்றி கே.எஸ்.எஸ் அவர்களும், எழுத்தாளர் ஜவாப் மரைக்கார் அவர்களும் பின்வருமாறு கருத்துகளை முன் வைத்தார்கள். 

நல்லூர் ராஜதானி! - கே. எஸ். சிவகுமாரன் -


[கலை, இலக்கிய விமர்கர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூல் பற்றி ஆங்கிலத்தில் விமர்சனக் கட்டுரையொன்றினை இலங்கையிலிருந்து வெளியாகும் டெய்லி நியூஸ் பத்திரிகையில் அவர் எழுதி வந்த பத்தியில் எழுதியிருக்கிறார். அது 28 ஏப்ரில் 2004 வெளியான டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியானது. பின்னர் அங்கு வெளியாகிய Friday என்னும் வாரப்பத்திரிகையிலும் நவம்பர் 7-15, 2007 அன்று வெளியான பதிப்பிலும் அக்கட்டுரை
வெளியாகியிருந்தது. அக்கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இக்கட்டுரை. ]

இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் தமிழரான வ.ந. கிரிதரன் தமிழ் மொழியில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவருடைய சில படைப்புகள் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, வெளிநாடுகளில் குடியேறிய முன்னாள் இலங்கையர்களின் வாழ்க்கை முறைகளை அவரது நூல்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலைப் பட்டம் பெற்ற அவர், மின்சார மற்றும் மின்னணுப் பொறியியல்,  தகவல் தொழில்  நுட்பவியலாளராகவும் தகுதி பெற்றவர். அறிவியல், வரலாறு மற்றும் சிறார் இலக்கியம் ஆகிய துறைகளிலும் அவருக்கு விரிவான ஆர்வம் உள்ளது. அதற்கு மேலாக, இணையவெளியிலும் அவர் பயனுள்ள பணியாற்றி வருகிறார்.

இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழர்களின் இலக்கிய மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளை முன்னிறுத்தும் தமிழ் இணையத்தளங்கள் பல இருந்தாலும், கிரிதரனின் 'பதிவுகள்' மின்னிதழ் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகைப் பற்றிய விரிவான செய்திகளையும் ஆய்வுகளையும் வழங்குவதில் தனித்துவம் பெற்றதாகும். அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் அது உள்ளடக்குகிறது.

Friday, June 19, 2026


[எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றிக் கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவின் கருத்துகளைக் கூறும்படி கேட்டேன். அதன் கருத்துகளைக் கீழே தந்திருக்கின்றேன். மிகச்சிறப்பான அதன் விமர்சனம் என்னைப் பிரமிக்க வைக்கின்றது. நன்றி கோடி ஜெமினி AI.]


"கனேடிய ஈழத்து எழுத்தாளரான வ.ந.கிரிதரன் (நவரத்தினம் கிரிதரன்) எழுதிய ‘குடிவரவாளன்’ (An Immigrant) நாவல், புலம் பெயர் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு மிக முக்கியமான ஆவணமாகும்.

முன்னர் ‘அமெரிக்கா 2’ மற்றும் ‘அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்’ என்ற தலைப்புகளில் இணைய இதழ்களில் தொடராக வெளியாகி, பின்னர் 'குடிவரவாளன்' என்ற பெயரில் நூலாகவும் மின்னூலாகவும் வெளியிடப்பட்டது.

இந்நாவலின் முக்கியக் கூறுகள் மற்றும் அதன் பின்னணி கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

1. சுயசரிதைத் தன்மை கொண்ட கதைக் களம் (Autobiographical Element)

இந்நாவல் எழுத்தாளரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது. 1983-இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களுக்குப் பிறகு, பல ஈழத்தமிழர்களைப் போல இவரும் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தார். கனடா நோக்கிப் பயணித்தபோது, பாஸ்டனில் இவர்களது பயணம் தடைப்பட்டு, அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோர நேரிட்டது. அப்போது நியூயார்க்கின் புரூக்ளின் தடுப்பு முகாமில் (Detention Camp) கழித்த மூன்று மாத அனுபவங்களையும், அதைத் தொடர்ந்து நியூயார்க் மாநகரில் ஒரு 'சட்டவிரோதக் குடிவரவாளனாக' வாழ நேர்ந்த சூழலையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே இந்நாவல்.

2. மையக் கதை மற்றும் நாயகன் இளங்கோ
நாவலின் நாயகனான இளங்கோ என்பவன், அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் சட்டப்பூர்வமான ஆவணங்கள் ஏதுமின்றி தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள எவ்விதம் போராடுகிறான் என்பதே கதை.

சுரண்டல்கள்: ஆவணங்கள் இல்லாத அகதி/குடிவரவாளன் என்பதால், வேலை கொடுப்பவர்கள் அவனை எவ்விதம் மிகக் குறைந்த ஊதியத்திற்கு அதிக வேலை வாங்கிப் பிழிந்தெடுக்கிறார்கள் என்பதை நாவல் அப்பட்டமாகப் பேசுகிறது.

ஏமாற்றுகள்: வேலை வாய்ப்பு முகவர்கள் இத்தகைய அகதிகளின் பலவீனமான நிலையைப் பயன்படுத்தி, வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணத்தைப் பறித்து எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 18, 2026

POTA கண்டு அஞ்சும் GOTA! (குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது - இலங்கையின் இன்றூள்ள அரசியல் சூழல் பற்றிய அவதானிப்பொன்று!)


முன்னாள் இலங்கையின் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் அறிமுகம் செய்யப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA -Prevention of Terrorism Act)  , அது அறிமுகமான காலத்திலிருந்து, ஆட்சி செய்த கடந்த கால அரசுகளால் மக்கள் மீதான அதிகாரத்தைத் தம் அதிகாரத்தைத்  தப்ப வைப்பதற்காகக் கடுமையாகப் பாவிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இலங்கை அரசுக்கெதிராக ஆயுதம் ஏந்திய சிங்கள, தமிழ்ப் போராளிகள் மீது அது பாய்ந்திருக்கின்றது. குறிப்பாகக்கடந்த கால இலங்கை அரசுகள் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டங்களைத் தம் நாட்டு மக்களின் போராட்டம் என்று கருதாமல்,தம் நாட்டுக்கு எதிரானவர்களின் போராட்டம் என்று இனரீதியாக முன்னெடுத்ததால் தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் கொடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள். முடிவு தொடர்ச்சியான இனக்கலவரங்கள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என அது எடுத்த உயிர்ப்பலி நாகரிக மனித இனமே நாணத்தக்கது. 

போர்ச்சூழல் நிலவிய காலகட்டத்தில்  மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்ங்கள் இலங்கை வரலாற்றில் களங்கம் மிக்க துயரக் காலகட்டம்.

Tuesday, June 16, 2026

முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் ஆங்கில மொழிபெயர்ப்பில் பெருந்தொற்றுக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'!


முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் மொழிபெயர்த்துத் தொகுத்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'. 'டிஸ்கவரி புக் பேலஸ்' பதிப்பக வெளியீடாக வெளிவந்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு. கொரோனா ஊரடங்குச் சூழல் அனுபவங்களைப் பதிவு செய்யும் 103 தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. நூலின் இறுதியில் கவிஞர்களின் புகைப்படங்களுடன் அவர்களைப்பற்றிய சுருக்கமான குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

இது கொரோனா பெருந்தொற்றுக்காலத்து அனுபவங்களைப் பதிவு செய்திருக்கும் தொகுப்பு என்னும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.

இதில் எனது கவிதையொன்றும் உள்ளது. அதன தலைப்பு ' A Walk Through Corona - Wrapped Night'

கொரோனா ஊரடகுச் சூழலால் 'டொரோண்டோ' வூட்பைன் குளக்கரையருகில் மனிதர்களின் நடமாட்டம் குறைந்த நிலையைப் பயன்படுத்தி, நரியொன்று தனக்கொரு வளையமைத்துக் குட்டிகளையீன்று வாழத்தொடங்கியதை இம்மாநகரத்து மக்கள் வியப்புடனும், அன்புடனும் பார்த்தார்கள். மான்கள் நகரின் மையத்தில் நடமாடின.

அதுவரை பதுங்கிக் கிடந்த மிருகங்களெல்லாம் நகரத்தின் மையத்துக்கே வரத்தொடங்கியிருந்தன. உலகின் பல பகுதிகளில் இவ்விதமான காட்சிகளைக் காண முடிந்தது. கொரோனா என்றால் எனக்கு அந்த நரிக்குடும்பமும் நினைவுக்கு வரும். அக்குடும்பம் ஓரடையாளம். இக்கவிதையிலும் அந்நரிக்குடும்பத்தைப் பதிவு செய்துள்ளேன்.

அமரர் கே.எஸ்.சிவகுமாரனின் கடிதமொன்று!


என் மதிப்புக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன். அவர் பதிவுகள் இணைய இதழின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர். பதிவுகளில் தொடர்ச்சியாக அவரது கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.
அண்மையில் பழைய நூல்களைத் தேடிக்கொண்டிருக்கையில் அகப்பட்ட கடிதமிது. கே.எஸ்.எஸ் தன் கைப்பட எழுதிய கடிதங்களிலொன்று.
இன்று மின்னஞ்சல் யுகத்தில் வாழும் சூழலில் இவ்விதமான கடிதங்கள் பொக்கிசங்களே.





'நந்தலாலா இலக்கிய வட்டத்தின்' ஏற்பாட்டில் எல்.ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் அறிமுக நிகழ்வு!

பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி நூலுருப்பெற்ற , எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் அறிமுக நிகழ்வு , 'நந்தலாலா இலக்கிய வட்டத்தின்' ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் அரங்கில் நடைபெறவுள்ளது. அது பற்றிய அறிவித்தலிது. தகவல் தந்தவர் - எல்.ஜோதிகுமார். பகிர்ந்துகொள்கின்றேன்.


'கனவு' இதழின் 'இலங்கைச் சிறப்பிதழ்'!


எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வரும் இலக்கியச்  சிற்றிதழ் 'கனவு'. விளம்பரங்கள் அற்று வெளியாகும் இதழ் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'கனவு' இதழின் ஆகஸ்ட் 1991 இதழ் 'இலங்கைச் சிறப்பிதழ்' ஆக வெளியாகியுள்ளது. 

இதழ் சிறப்பாக வெளிவருவதற்கு எழுத்தாளர் மேமன்கவியின் பங்களிப்பு முக்கியமாக உதவியிருக்கின்றது என்பதை நூலின் உள்ளடக்கம் மூலம் அறிய முடிகின்றது. ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர் அருள் சுப்பிரமணியத்தின் 'கணிதவியலாளன்' சிறுகதை நூலின் முதலாவது ஆக்கமாக அமைந்திருக்கின்றது. எழுத்தாளர் ராஜ ஶ்ரீகாந்தனின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. அவ்வப்போது  தமிழ் இலக்கியச் சூழலுக்கு எழுத்தாளர் அருள் சுப்பிரமணியத்தை நினைவூட்டி வருபவர் மேமன்கவி. நிச்சயம் இச்சிறுகதையையின் பிரசுரத்துக்கு அவர் காரணமாக இருந்திருப்பார் என்பதை ஊகிக்க முடிகின்றது. நல்லதொரு தேர்வு.

Sunday, June 14, 2026

வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல்!


எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதல்பிரதி தமிழகத்தில் ஸ்நேகா (தமிழகம்) & மங்கை (கனடா)  வெளியீடாக 1996இல் வெளியானது. அண்மையில் திருத்தப்பட்ட இரண்டாவது பிரதி அமேசன் - கின்டில் மின்னூலாக வெளியானது.

நூலின் முதற் பிரதி நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதனை வாசிக்க - https://noolaham.net/project/20/1928/1928.pdf

Wednesday, June 10, 2026

'இமயம்' சாய்ந்தது: இயக்குநர் பாரதிராஜா மறைவு!

 - இயக்குநர் பாரதிராஜா -

இயக்குநராக, தயாரிப்பாளராக, திரைக்கதை  ஆசிரியராக, நடிகராக எனப் பன்முக ஆற்றல் பெற்ற கலைஞர் அவர்.

நாடகத்தனமான வசனங்களும், 'செட்'டுகளும் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த்திரையுலகுக்கு  உயிர்த்துடிப்புடன் கூடிய   கிராமத்து மண்ணை அறிமுகப்படுத்திவர் 'இயக்குநர் இமயம்' என்று அறியப்பட்ட பாரதிராஜா. அண்மைக்காலமாக அவர் பற்றி வெளியான செய்திகளின் அடிப்படையில் அவர் விரைவில் மறைவார் என்னும் எண்ணம் தோன்றியிருந்த போதும், உண்மையில் அவர் மறைந்த செய்தி அதிர்ச்சியைத்தான் தந்தது. பேரிழப்புத்தான்.

இவரது திரைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்தவை: பதினாறு வயதினிலே, கிழக்கே  போகும் ரயில், முதல் மரியாதை, வேதம் புதிது, கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே, மண் வாசனை .  இ வை உடனே நினைத்ததும் நினைவுக்கு  வந்தவை. இப்படைப்புகள் பாரதிராஜாவின் புகழைக் கலையுலகில் நிறுத்தி வைக்கும். இவர்  இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரையும் நானும் பகிர்ந்து கொள்கின்றேன்.



Tuesday, June 9, 2026

கலாமோகனின் 'காதல் கதைகளும், சில காதலிகளும்' சிறுகதை பற்றி.....

 எழுத்தாளர் க.கலாமோகன் 

கடந்தவாரம் ஸ்கார்பரோவில் நடைபெற்ற 'துவாரம்'  சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டில் உரையாற்றியவர்கள் தொகுப்பிலுள்ள 'காதல் கதைகளும், சில காதலிகளும்' சிறுகதை ப்ற்றிக் கூறிய கருத்துகளைக் கேட்டபோது  அவர்களில் எவருமே அக்கதையைச் சரியான கோணத்தில் புரிந்து கொண்டார்களா என்றொரு கேள்வி என் மனத்தில் எழந்தது. 

அந்தக் கதை காதல் கதைகள் எழுதும் வயோதிப் எழுத்தாளர் ஒருவர் பற்றிய கதை சொல்லியின் விபரிப்பு. அதன்படி அக்கதை பற்றி உரையாடியவர்கள் அவ்வயோதிப எழுத்தாளின் பல்வேறு காதலிகளைப்பற்றியும், இவ்விதமான சமூகப் பிறழ்வுகள் அன்றாடம் நடப்பவைதாம் என்றும், ஆனால் அவை பொதுவாகச் சமூகம் அறியாதவகையில் மறைக்கப்பட்டு விடுகின்றன என்றும் குறிப்பிட்டார்கள். ஆனால் உண்மையில் அந்தக் கதை என்ன கூறுகின்றது? அவ்வெழுத்தாளரின் காதலிகளைப் பற்றி யார் கூறுகின்றார்கள்? அவற்றில் உள்ள உண்மைத் தன்மை என்ன? இவை போன்ற விபரங்களை அவர்கள் அச்சிறுகதையூடு  ஆராய்ந்தார்களா? இவை பற்றிய கட்டுடைப்புகளே இச்சிறு பதிவு.

Sunday, June 7, 2026

''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' - எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஷ்!


''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' என்று குறிப்பிட்டு,  என் பால்யப் பருவத்து நண்பரும், ஶ்ரீராம் விக்னேஷ் என்னும் பெயரில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்டவருமான நண்பர் வவுனியா விக்கி இவ்வழகிய மேகங்களில் தாலாட்டில் மெய்ம்மறந்திருக்கும் மேற்குத்  தொடர்ச்சி மலையினை தன் அலைபேசிக் கமராவுக்குள் அகப்படுத்தி  அனுப்பியிருந்தார்.

நெஞ்சைக் கொள்ளும் இயற்கையின் வனப்பில் நானும் மெய்ம்மறந்தேன். விக்கி சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட.  அதனை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் இவை. 

எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஷ் (வவுனியா விக்கி) -


இன்று நண்பருக்குப் பிறந்தநாளும் கூட. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விக்கி. இயற்கையின் தாலாட்டில் , மேகங்களின் அரவணைப்பில் தன்னை மெய்ம்மறந்து கிடக்கும் மலைத்தொடரின் அழகில் எம்மையும் மெய்ம்மறக்க வைத்ததற்கு நன்றியும் கூட.

மேற்குத்தொடர் மலையின் ஒரு பகுதியான கொடைக்கானல் எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் 'பொன் விலங்கு' நாவலை நினைவூட்டுகின்றது. உண்மையில் நாவலில் அவர் கொடைக்கானல் என்னும் பெயரைப் பாவித்திருக்க மாட்டார், மல்லிக்கைப்பந்தல் என்றே குறிப்பிட்டிருப்பார். ஆனால் அதனை அவர் கொடைக்கானலுக்காகவே பாவித்திருக்க வேண்டுமென்று உணர்வதுண்டு. ஏனென்றால் மல்லிக்கைப்பந்தலும் மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள நகரம். 

விசுவநாதன் டீச்சர் (திருமதி தவமணி விசுவநாதன்) மறைவு!


யாழ்  இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் ஆசிரியையும், முன்னாள் யாழ் மேயர் திரு.இராசா விசுவநாதனின் மனைவியுமான விசுவநாதன் டீச்சர் மறைந்ததாக வாட்ஸ் அப்பில் என் சகோதரிகளில் ஒருவர் தகவல் அனுப்பியிருந்தார்.

விசுவநாதன் டீச்சர் அம்மாவின் (நவரத்தினம் டீச்சர்) சிநேகிதிகளில் என் நினைவுக்கு உடனடியாக வரும் இருவரில் ஒருவர். மற்றவர் முன்னாள் யாழ்  இந்த மகளிர் கல்லூரி அதிபரான   இராமநாதன் டீச்சர்.

என் அப்பாவின் மறைவின்போது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வந்திருந்தார். அம்மாவுடன் அழுதபடி நின்ற தோற்றம் மனக்கண்ணில் தெரிகிறது. 

அம்மாவின் பால்யப் பருவத்திலிருந்து பின்னர் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையாக எனத்  தொடர்ந்த நட்பு தொடர்ந்து நீடித்தது. 

Thursday, June 4, 2026

கட்டடக்கலைஞர் மயூரநாதன் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! (பகுதி2 - தொடர்ச்சி) - வ.ந.கிரிதரன் -

 

 [ அண்மையில்  'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற முடியாது போயிற்று. அதனை முழுமையாகத் தருவது முக்கியம் என்பதால் அது இங்கு முழுமையாக இடம் பெறுகின்றது.]

பகுதி இரண்டு: கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு (தொடர்ச்சி)

'சங்கிலித்தோப்பு' வாயில்  அல்லது கல்தோரண வாயில் பற்றி....

சங்கித்தோப்பு வாயில் என்று இது அழைக்கப்பட்டாலும், உண்மையான சங்கிலித்தோப்பு மந்திரிமனையை அண்டிய பகுதியே. அக்காணிப்பெயர்தான் சங்கிலித்தோப்பு என அழைக்கப்படுகின்றது. இவ்வாசல் உள்ள பகுதி பாண்டியமாளிகை வளவு என்றழைக்கப்படுகின்றது.  

இந்த வாயில் பற்றியும் மயூரநாதனின் இந்நூலில்  விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை யாரும் சுட்டிக்காட்டாத முக்கிய விடயமொன்றையும் மயூரநாதன் இவ்வாயில் பற்றிக் குறிப்பிடுகின்றார். அது முக்கியமானது. இவ்வாயிலானது ஒரு மாளிகையின் முகப்பு வாசலாக இருப்பதற்குச் சாத்தியமில்லை என்கின்றார்.   இதன் குறைந்த பருமன் இதனுடன் அகலமான மாளிகைச் சுவர்கள் பொருந்தி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை அவர் முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டுகின்றார். இது பற்றிய நுணுக்கமான ஆய்வு அவசியம் என்றும் கூறுகின்றார்.  இது மாளிகையின் முகப்பாக அல்ல , .அங்கிருந்த மாளிகையொன்றின் வளவை அல்லது வீட்டுத் தோற்றத்தைச் சுற்றி அமைந்துள்ள மதிலில் இருந்த நுழை வாயிலாக இம்முகப்பு இருந்திருக்கலாம்  என்பதை ஊகிக்கலாம் என்கின்றார்.(பக்கம் 222).

Wednesday, June 3, 2026

தமிழக முதலவருக்கு ஓர் ஆலோசனை!


சமூக ஊடகங்களால்
வென்றார்.
சமூக ஊடகங்களால்
தோற்றார்
என்னும் நிலையினைத்
தவிர்க்க
இன்னும் விஜய் செய்ய
வேண்டியது
நடப்புலகில்
நடிப்பதைத் தவிர்ப்பதுவே!
'ஸ்கிரிப்ட்'தேவை நடிகனுக்கு
மாநில முதல்வருக்கு
அல்ல.
இருக்கும் அறிவைப் பாவித்து
எடுத்துரைத்தாலே போதும்
எல்லாரும் கலைஞர் ஆக வேண்டியதில்லை.
எதிர்வரும் காலம்
எடுத்துக்காட்டும் விஜய்
முதல்வரா அல்லது
முன்னாள் முதல்வரா
என்பதை!
ஆளுமையை மாற்றுவது
அவரை அரசியலில்
நிலை நிறுத்தும். தொடர்ந்தும்
அரிதார அரசியலை முன்னெடுத்தால்
அவர் காணாமலே போவார்.
சமூக ஊடகங்களால் வந்தவர்
சமூக ஊடகங்களால் செல்வார்!
வீழ்வார்!
 
* டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி வழி வநகி

Tuesday, June 2, 2026

விஞ்ஞான அறிவு நூல்களை வெளியிட்ட ஹிக்கின்பாதம்ஸ் பதிப்பகம்!


 

என் பதின்ம வயதுகளில் நான் யாழ் பொதுசன நூலகத்தில் விரும்பி வாசித்த நூல்களில் அறிவியல் நூல்களுக்கும் முக்கிய இடமுண்டு. இது பற்றி எனது பல முகநூற் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். நூலகம் பற்றிய பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்:

"நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இந்த நூலகத்தில் எத்தனையோ அறிவியல் நூல்களைப் படித்திருக்கின்றேன். மிகவும் அழகாக விஞ்ஞானத்தின் பல்வேறு பிரிவுகளிலும் நூல்களை அக்காலகட்டத்தில் சென்னையிலுள்ள பதிப்பகமொன்று வெளியிட்டுக்கொண்டிருந்தது. 'பெளதிகத்தின் வரலாறு', 'கடலின் வரலாறு', 'உயிரினங்களின் வரலாறு',.. என்பது போன்ற தலைப்புகளிருக்கும். 

'பெளதிகத்தின் வரலாறு' என்னுமந்த நூலில் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற சக்திக்கும், பொருளுக்குமிடையிலான தொடர்பினை வெளிப்படுத்தும் சூத்திரத்தை, ஒளித்துகளுக்கு உந்தம் மற்றும் இயக்கச்சக்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய சூத்திரங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நிறுவியிருந்தது இன்னும் பசுமையாக மனதிலுள்ளது. '... இவ்வகையான அறிவியல் நூல்கள் எங்கள் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. மேற்படி விஞ்ஞான நூல்களில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் பிரசுரமான அறிவியல் நூல்களின் தரமான மொழிபெயர்ப்புகளே. "

எஸ்.ஜானகி - தன் கூவலை நிறுத்திய இசைக்குயில்!

அடுத்தடுத்துத் தமிழ்த்திரையுலகின் ஆளுமைகளை இழந்து கொண்டிருக்கின்றோம். இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜா என்று இன்று தென்னிந்தியாவின் இசையர...