எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதல்பிரதி தமிழகத்தில் ஸ்நேகா (தமிழகம்) & மங்கை (கனடா) வெளியீடாக 1996இல் வெளியானது. அண்மையில் திருத்தப்பட்ட இரண்டாவது பிரதி அமேசன் - கின்டில் மின்னூலாக வெளியானது.
நூலின் முதற் பிரதி நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதனை வாசிக்க - https://noolaham.net/project/20/1928/1928.pdf
கணையாழி நூல் மதிப்புரை!
எஸ். இராமச்சந்திரன் தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாற்றாய்வாளர். கல்வெட்டறிஞர். தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவர்.
இவரை நான் மறக்க முடியாது. எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூல் 1996இல் தமிழகத்தில் வெளியானபோது அது பற்றியதொரு மதிப்புரையினைக் கணையாழி சஞ்சிகையில் எழுதியிருந்தார். அந்த மதிப்புரைக்கான கணையாழி சஞ்சிகையின் பக்கத்தை இங்கு காண்கின்றீர்கள்.
தமிழகத்தில் எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூல் வெளியீட்டுக் காட்சி (1996)
தொல்லியல் அறிஞர் , அமரர் நடன காசிநாதன் - இவரை நான் எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன். எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஸ்நேகா பதிப்பக வெளியீடாக, 1996இல் தமிழகத்தில் வெளிவந்தபோது , ஸ்நேகா பதிப்பக அதன் நூல்களுக்கான வெளியீட்டு நிகழ்வொன்றினை நடத்தியது. அப்போது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலினை வெளியிட்டு வைத்தவர் தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன். அதனைப் பெற்றுக்கொண்டவர் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்கள். அக்காட்சியை வெளிப்படுத்தும் புகைப்படமிது. புகைப்படத்தில் இடப்புறத்தில் இருப்பவதான் தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன். வலப்புறத்தில் நிற்பவர்,உயரமானவர் எழுத்தாளர் செ.கணேசலிங்கன்.
நடன காசிநாதன் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர். தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர். தமிழர்களின் வரலாற்று ஆராய்ச்சி நூல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment