Showing posts with label உடல் நலம். Show all posts
Showing posts with label உடல் நலம். Show all posts

Friday, June 6, 2025

மருத்துவர் கதிரவேலு சந்தரின் (Kathiraveloo Santher) வெளிவரவுள்ள மனநல நூல் பற்றிய சிந்தனைகள்! -


நயகரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் கடந்த ஐம்பதாண்டுகளாக மனநல மருத்துவராகப் பணியாற்றி வருபவர் மனநல் மருத்துவர் கதிரவேலு சந்தர் (Kathiraveloo Santher). மருத்துவர் கென் சந்தர் (ken Santher) என்று அறியப்பட்டவர்.  இவர் 2015ஆம் ஆண்டில் 'நம்பிக்கை விருது ( Hope Award) குழந்தைகளுக்கான மனநலச்சேவைக்காக இவ்விருதினைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் இவரை இவரது இல்லத்தில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது.  அந்தச்சந்திப்பின்போது அவர் தன் மகள் கல்யாணி சந்தருடன் இணைந்து எழுதிக்கொண்டிருக்கும் மனநலத்தைப் பற்றிய ஆங்கிலப் புத்தகம் குறித்து அறியும் சந்தர்ப்பம் கிட்டியது. கல்யாணி சந்தரும் உடல நலத்துறையில் பணியாற்றுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மகிழ்ச்சியின் மீதான அழுக்குகள் , அவை யாவை?, அவற்றை எவ்வாறு நீக்கி வாழ்வில் மகிழ்ச்சியை அடைவது ? சிந்தனைகள் என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன? போன்ற தலைப்புகளில் நூல் அமைந்திருப்பதை மேற்படி உரையாடலின்வாயிலாக அறிந்துகொண்டேன். தனது இதுவரை கால மனநல மருத்துவத்துறை அனுபவங்களின் அடிப்படையில் அவரது எண்ணங்களைப் பிரதிபலிக்கும் நூலாக இந்நூல் அமையவிருப்பதைப் புரிந்து கொண்டேன். உரையாடலின்போது உரையாடுபவரின் உரையினை முழுமையாக உள் வாங்கித் தன் கருத்துகளை அவர் வெளிப்படுத்தும் பாங்கினை இரசித்தேன். நம்மில் பலரும்  உரையாடலை முழுமையாக உள் வாங்காமல் முண்டியடிப்பதைப் பார்த்திருந்த எனக்கு இவரது கூறப்படுபவற்றை உள் வாங்கி உரையாடும் பாங்கு மகிழ்ச்சியைத்தந்தது.

Thursday, May 22, 2025

இதய மருத்துவர் இராமசாமியின் ஆரோக்கியமான ஆலோசனைகள்!


இது என் மருத்துவ ஆலோசனை அல்ல. என் கருத்து மட்டுமே. 

மருத்துவர் இராமசாமியின் ((Dr. ramasamy) அறிவுரைகளை உள்ளடக்கிய காணொளிகளை நான் பார்ப்பவன். இவரது இதய நோய் சம்பந்தமான அறிவுரைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. மிகவும் ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்கும் மருத்துவர்களில் ஒருவராக இவரை நான் அடையாளம் காண்கின்றேன். 

இருதய மருத்துவர்கள் பலர் கண்ணை மூடிக்கொண்டு பைபாஸ் சர்ஜரி, ஸ்டெண்ட் பொருத்துவதைப் பரிந்துரை செய்கின்றார்கள். இதயம் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு, இரத்த ஓட்டம் நன்கு ஓடும் நிலையிலுள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் பலர் ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுப்பதற்காக பை பாஸ், ஸ்டென்ட்டைப் பரிந்துரை செய்வது தவறானது என்பதை இக்காணொளி மூலம் அறிய முடிந்தது. 

Thursday, May 8, 2025

பயனுள்ள மருத்துவக் காணொளிகள் இரண்டு: இருதய மருத்துவ நிபுணர் எஸ். இராமசாமியுடனான (Dr. S Ramasamy) ஒரு நேர்காணல் மற்றும் Dr. Pradip Jamnadas, MD இன் காணொளி!


இக்காணொளியை அண்மையில் பார்த்தேன். இதில் இருதய மருத்துவ நிபுணர் இராமசாமி அவர்கள் மாரடைப்பு, அதற்கான சிகிச்சை முறைகளான 'ஆஞ்சியோ பிளாஸ்டி', 'ஸ்டென்ற்', 'பைபாஸ்' சத்திர சிகிச்சை , இரத்த அடைப்புகள் & அவற்றால் உருவாகும் இரத்தக் கட்டிகள் போன்றவற்றைப்பற்றித் தெளிவான விளக்கங்களைப் பகிர்ந்துகொள்கின்றார். இருதயத்த்யின் இரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவற்றுக்கான மருத்துவர்களின் ஆலோசனைகளை எவ்விதம் அணுக வேண்டும் என்பது பற்றிய அவரது கருத்துகளும் முக்கியமானவை. இப் பதிவு என் ஆலோசனை அல்ல. தகவலைப் பகிர்ந்து கொள்ளல் மட்டுமே. அவ்வப்போது என் கருத்துகளையும் கூறியிருக்கின்றேன். அவை மருத்துவ ஆலோசனைகள் அல்ல. என் கருத்துகள் மட்டுமே.


பொதுவாக இருதய மருத்துவர்கள் ஒருவருக்கு மூன்று இரத்தக் குழாய்களில் அடைப்புகள் 70% வீதத்திற்கு மேல் இருந்தால் , கண்ணை மூடிக்கொண்டு பைபாஸ் சத்திரசிகிச்சை க்குப் பரிந்துரை செய்வார்கள். இல்லாவிட்டால் ஆஞ்சியோபிளாஸ்டிக் முறை மூலம் ஸ்டென்ற் வைப்பதற்குப் பரிந்துரை செய்வார்கள்.

மறக்க முடியாத எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர்  இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறந்த நாள் ஜூலை 10.  என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் இ.பா. தனது மனைவி இந்...

பிரபலமான பதிவுகள்