Friday, June 6, 2025
மருத்துவர் கதிரவேலு சந்தரின் (Kathiraveloo Santher) வெளிவரவுள்ள மனநல நூல் பற்றிய சிந்தனைகள்! -
நயகரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் கடந்த ஐம்பதாண்டுகளாக மனநல மருத்துவராகப் பணியாற்றி வருபவர் மனநல் மருத்துவர் கதிரவேலு சந்தர் (Kathiraveloo Santher). மருத்துவர் கென் சந்தர் (ken Santher) என்று அறியப்பட்டவர். இவர் 2015ஆம் ஆண்டில் 'நம்பிக்கை விருது ( Hope Award) குழந்தைகளுக்கான மனநலச்சேவைக்காக இவ்விருதினைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இவரை இவரது இல்லத்தில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது. அந்தச்சந்திப்பின்போது அவர் தன் மகள் கல்யாணி சந்தருடன் இணைந்து எழுதிக்கொண்டிருக்கும் மனநலத்தைப் பற்றிய ஆங்கிலப் புத்தகம் குறித்து அறியும் சந்தர்ப்பம் கிட்டியது. கல்யாணி சந்தரும் உடல நலத்துறையில் பணியாற்றுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகிழ்ச்சியின் மீதான அழுக்குகள் , அவை யாவை?, அவற்றை எவ்வாறு நீக்கி வாழ்வில் மகிழ்ச்சியை அடைவது ? சிந்தனைகள் என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன? போன்ற தலைப்புகளில் நூல் அமைந்திருப்பதை மேற்படி உரையாடலின்வாயிலாக அறிந்துகொண்டேன். தனது இதுவரை கால மனநல மருத்துவத்துறை அனுபவங்களின் அடிப்படையில் அவரது எண்ணங்களைப் பிரதிபலிக்கும் நூலாக இந்நூல் அமையவிருப்பதைப் புரிந்து கொண்டேன். உரையாடலின்போது உரையாடுபவரின் உரையினை முழுமையாக உள் வாங்கித் தன் கருத்துகளை அவர் வெளிப்படுத்தும் பாங்கினை இரசித்தேன். நம்மில் பலரும் உரையாடலை முழுமையாக உள் வாங்காமல் முண்டியடிப்பதைப் பார்த்திருந்த எனக்கு இவரது கூறப்படுபவற்றை உள் வாங்கி உரையாடும் பாங்கு மகிழ்ச்சியைத்தந்தது.இப்புத்தகம் தற்போது அதன் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் அதன் முழுமையான உள்ளடக்கத்தினை இத்தருணத்தில் விரிவாகப் பகிர்ந்து கொள்வது உசிதமல்ல என்பதால் பகிர்ந்துகொள்ளவில்லை. இருந்தாலும் அவருடனான மேற்படி உரையாடல் மேற்படி நூலினை முழுமையாக வாசிக்கும் ஆர்வத்தினைத்தூண்டி விட்டதெனலாம். இப்புத்தகத்தின் வெளியீட்டை இப்போது நானும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.
எண்பது வயதினைக் கடந்த நிலையிலும் மருத்துவர் கதிரவேலு சந்தர் தன் மருத்துவச் சேவையினை மேற்கொண்டு வருகின்றார் என்பது அவரது அர்ப்பணிப்பு மிக்க சேவையினை வெளிப்படுத்தும். அவரது இந்த இலக்கிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துகின்றேன். இந்நூல் உரிய அங்கீகாரத்தையும் , கவனிப்பையும் பெறுமென்று நம்புகின்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
ஆகஸ்ட் 2026இல் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள்!
ஆகஸ்ட் மாதம் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள், அவர்கள் பார்த்த பக்கங்கள் பற்றிய விபரங்கள் இவை! வருகை தந்தவர்கள் (Unique Visitors) - 5...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
No comments:
Post a Comment