Saturday, June 14, 2025

'தக் லைஃப்' 'முத்தமழைப் பாடலின் பாடகி சின்மயி பாடும் காணொளி!


இப்பொழுது 'தக் லைஃப்' 'முத்தமழை' பாடலைப் பாடகி சின்மயி பாடுவதாக அமைந்துள்ள காணொளியை வெளியிட்டிருக்கின்றார்கள் படக்குழுவினர். நடிகை திரிஷா கிருஷ்ணனை நினைவில் வைத்திருக்கும் முதலிரு வேடங்கள் 'பொன்னியின் செல்வன்' குந்தவைப் பிராட்டியார். அடுதத்து 'தக் லைஃப்' இந்திராணி. இரு படங்களையும் இயக்கியிருப்பவர் மணிரத்தினம். இது போல் நடிகை ஐஸ்வர்யா ராயை நினைவில் நிறுத்தி வைத்திருக்கும் வேடம் 'பொன்னியின் செல்வன்' பழுவூர் ராணி நந்தினி. 
 
என்றும் பதினாறு மார்க்கண்டேயரைப்போல் திரிஷாவும் என்றும் இருபது மார்க்கண்டேயணிதான். இன்னும் பல வருடங்களுக்குத் தமிழ்த்திரையுலகில் கொடி கட்டிப் பறக்கும் சாத்தியங்கள் உள்ள நடிகை. 
 
நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட காலம் நாயகியாக நிலைத்திருந்தார். ஆனாலும் அவரது இரண்டாவது வருகையின்போது அவர் உடல் பருத்திருந்தார். ஆனால் இரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். திரிஷாவோ இன்னும் அதே உடல் வாகுடன் இருக்கின்றார். இது அவரது எதிர்கால வெற்றிக்கு வழி வகுக்கும்.
 
இயக்குநர் மணிரத்தினம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 
 

No comments:

பதிவுகள் இணைய இதழின் ஜூலை 2026 ,மாதப் புள்ளி விபரம்! பாவித்த மென்பொருள் - (cPanel) Awstats

cPanel - Awstats அறிக்கை காட்டும் இந்த புள்ளிவிவரங்கள்,  பதிவுகள் இணைய் இதழ் மிகப் பெரிய அளவில் வாசகர்களைக் கொண்ட ஒரு முன்னணி ஊடகமாக இயங்கி...