Wednesday, September 23, 2026

நூல் பெயர்: குற்றமும் தண்டனையும் (பெங்குயின் கிளாசிக்ஸ் டீலக்ஸ் பதிப்பு) ஆசிரியர்: ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி


[Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.]

[செயற்கை நுண்ணறிவு தயாரித்தது] ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' (Crime and Punishment) நூலின் பெங்குயின் கிளாசிக்ஸ் டீலக்ஸ் பதிப்பு விவரங்களும் அறிமுகமும் 

புத்தகத் தகவல்கள்

நூலை வாங்க  - https://amzn.to/4xJrzR7

நூல் பெயர்: குற்றமும் தண்டனையும் (பெங்குயின் கிளாசிக்ஸ் டீலக்ஸ் பதிப்பு)
ஆசிரியர்: ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி
மொழிபெயர்ப்பாளர், அறிமுகம் மற்றும் ஆசிரியர்: ஆலிவர் ரெடி மற்றும் ஒருவர்
வடிவம்: பேப்பர்பேக் (Paperback)

மதிப்பீடுகள்: 5க்கு 4.6 நட்சத்திரங்கள் (635 பேர்), குட்ரீட்ஸ் (Goodreads) தளத்தில் 4.3 (1,160,185 மதிப்பீடுகள்).  விலை: $23.00 (அமேசான் சலுகை விவரங்களுக்கு உட்பட்டது)

விமர்சனமும் கதைக் களமும்

மதிப்புரை: "உண்மையிலேயே ஒரு சிறந்த மொழிபெயர்ப்பு... இந்த ஆங்கிலப் பதிப்பு உண்மையில் மிகச் சிறந்தது." — ஏ. என். வில்சன், தி ஸ்பெக்டேட்டர்.
கதை நாயகன்: ரஸ்கோல்னிகோவ் என்ற ஏழை மற்றும் விரக்தியான முன்னாள் மாணவன்.

களப் பின்னணி: செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் சேריப் பகுதிகளில் அவன் அலைகிறான்.தண்டனை: அவன் ஒரு கொலையைச் செய்கிறான். அவனுடைய சொந்தக் குற்ற உணர்ச்சி அவனைக் கருக்குழியில் தள்ளுகிறது.

மீட்பு: சோனியா என்ற எளிய பெண் மட்டுமே அவனுக்கு மீட்புக்கான வழியைக் காட்டுகிறாள்.

பெங்குயின் கிளாசிக்ஸ் சிறப்பு
65 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறந்த இலக்கியங்களை வழங்கி வருகிறது.
1,500 க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டுள்ளது. புகழ்பெற்ற அறிஞர்களின் முன்னுரைகள் மற்றும் குறிப்புகளுடன் நம்பகமான நூல்களை வாசகர்களுக்கு அளிக்கிறது.

நூலை வாங்க  - https://amzn.to/4xJrzR7

(என் ஆரம்பகாலச் சிறுகதைகளில் ஒன்று) சிறுகதை: போரே! நீ போய் விடு! - வ.ந.கிரிதரன் -


[- வீரகேசரி நிறுவனம் ஒருமுறை இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவாகக்குறுநாவல் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் 87/88 காலகட்டமென்று  நினைக்கின்றேன். என்னிடம் அது பற்றியுள்ள போட்டோ பிரதியில் திகதி விடுபட்டுப்போயுள்ளதால் அது பற்றி உடனடியாக நிச்சயமாகக்கூற முடியாதுள்ளது. அந்தபோட்டிக்கு அனுப்பப்பட்ட கதையிது. சிறுகதையாகக்கணிக்கப்பட்டு பிரசுரத்திற்குரியதாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையிது. நடுவர்களாக சிற்பி சரவணபவன் ,செங்கை ஆழியான் மற்றும் செம்பியன் செல்வன் ஆகியோரிருந்தனர். அக்காலகட்டத்து மனநிலையினைப் பிரதிபலிக்கும் எழுத்தென்பதால் ஒரு பதிவுக்காக இச்சிறுகதை பிரசுரமாகின்றது.  இச்சிறுகதை வீரகேசரியில் பிரசுரமானதா இல்லையா என்பது தெரிய்வில்லை. - ]


1.

வெளியிலோ இலேசாகத்தூறிக்கொண்டிருந்த மழை பெருக்கத்தொடங்கிவிட்டிருந்தது. புழுதி படர்ந்த செம்மண் சாலைகளிலிருந்து மழைத்தூறல் பட்டதால் செம்பாட்டுமண்ணின் மணம் பரவத்தொடங்கிவிட்டிருந்தது. கோவைப்பழங்களைப்போட்டி போட்டு தின்றபடியிருந்த கிளிகள் மழை பெருப்பதைக்கண்டவுடன் நனைந்த இறகுகளை ஒருமுறை சிலிர்த்துவிட்டு , விண்ணில் வட்டமடித்துவிட்டு, உறைவிடங்களை நாடிப்பறக்கத்தொடங்கின. எங்கோ தொலைவில் பயணிகள் பஸ்ஸொன்று  குலுக்கலுடன் இரைந்து செல்லுமோசை காற்றில் மெல்லவந்து காதில் நுழைந்தது.  திடீரென அமைதியாகவிருந்த வானம் ஒருமுறை மின்னிவிட்டுப் பயங்கரமாக அதிர்ந்தது.  மழை பொத்துக்கொண்டு வரப்போகின்றது. மழைக்காலம் தொடங்கி விட்டது. மழை தொடங்கி விட்டாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். வயிரமென நிற்கும் பாலைகள், கருங்காலிகள், முதிரைகள் கூட ஒருவித நெகிழ்வுடன் நெகிழ்ந்து நிற்கையில் , மர அணில்களோ ஒருவித எக்களிப்புடன் மாரியை வரவேற்று, கொப்புகளில் தாவித்திரியும். மணிப்புறாக்கள், சிட்டுகள், குக்குறுபான்கள்,மாம்பழத்திகள், காடைகள், கவுதாரிகள், காட்டுக்கோழிகள், ஆலாக்கள், ஊருலாத்திகள், கொண்டை விரிச்சான்கள், மயில்கள், கொக்குகள்,நாரைகள்.. பறவைகள் யாவுமே புத்துணர்வுடன் மாரியை வரவேற்றுப்பாடித்திரிகையில் ... கட்டுமீறிப்பாய்ந்து பொங்கித்ததும்பும் குளங்கள், விரால் பிடிப்பதற்காக மீனவர்களுடன் போட்டிபோடும் வெங்கணாந்திப்பாம்புகள் உண்ட அசதியில் தவிக்கும் காட்சிகள்.. மரக்கொப்புகளில் வானரங்களுக்குப் போட்டியாகத்தாவிக்குளங்களில் பாயும் சிறுவர்கள்... மாரி என்றாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். சொதசொதவென்று சகதியும், இலைகளுமாகக் கிடக்கும் காட்டுப்பிரதேசங்களில் மெல்லப்பதுங்கிப்பாயும் முயல்கள், அசைவற்று நிற்கும் உடும்புகள், கொப்புகளோடு கொப்புகளாக ஆடும் கண்ணாடி விரியன்கள்... இம்மண்ணினழகே தனிதான்.

மழையுடன் போட்டி போட்டபடி 'ஓ..வ்..வ்..'வென்று காற்று வேறு பெரிதாக அடிக்கத்தொடங்கிவிட்டிருந்தது. வானம் இருண்டுபோய் கன்னங்கரேலென்று பெரும் பிரளயமே வந்து விடுவது போன்றதொரு தோற்றத்தில் அந்தப்பிரதேசம் மூழ்கிக்கிடக்கின்றது.ஆன்லைன் வலைப்பூ உருவாக்கு

முள்ளியவளைக்கும், மாங்குளத்துக்கும் இடையில், நெடுங்கேணியிலிருந்து சிறிது தொலைவில் அமைந்திருந்த அந்தச்சிறு கிராமத்தில் இருந்த ஒரேயொரு பாடசாலைக்குத் தமிழ் வாத்தியாராகக் கருணாகரன் வந்து ஒருவருடம்  என்ன மாதிரி போனதென்றே தெரியவில்லை. நேரம் எவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Tuesday, September 22, 2026

லண்டனில் எஸ். அகஸ்தியர் நூற்றாண்டு விழா! - நவஜோதி ஜோகரட்னம் -


எழுத்தாளர் அகஸ்தியரின் நூற்றாண்டு விழா அண்மையில் இலண்டனில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சி பற்றிய  குறிப்பினை அவர்தம் மகளும், எழுத்தாளருமான நவஜோதி ஜோகரட்னம் பதிவுகள் இணைய இதழில் எழுதியிருந்தார். அதனை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

லண்டனில் எஸ். அகஸ்தியர் நூற்றாண்டு விழா!  - நவஜோதி ஜோகரட்னம்  -

   அகஸ்தியரின் 100ஆவது நூற்றாண்டு விழாவும் அவர்பற்றிய நினைவுகள் குறித்த ‘இலங்கையின் குறுமுனி தரிசனங்கள் (1926-2026) என்ற நூல் வெளியீடும் லண்டன் சென் அன்ருஸ் கோயில் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இலக்கிய ஆர்வலர்கள்;, ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உறவினர்கள் மத்தியில், அகஸ்தியருக்குப்; பக்க துணையாகச் செயற்பட்ட அவரது மனைவி நவமணி அவர்களை அங்கு கௌரவித்தமை மிகுந்த கவனிப்புக்குரியதாகியது.

வ.ந.கிரிதரன் கட்டுரைகள் (தொகுப்பு மூன்று) அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது!


எனது கட்டுரைகளின் மூன்றாவது தொகுப்பான 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள் (தொகுப்பு மூன்று)' தற்போது அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகியுள்ளது.
முதலாவது தொகுப்பு (14 கட்டுரைகள்) இலங்கையில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளியானது.
இரண்டாவது தொகுப்பு (52 கட்டுரைகள்) பதிவுகள்.பதிப்பக வெளியீடாக .அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளியானது.
தற்போது இந்த மூன்றாவது தொகுப்பு (52 கட்டுரைகள்) பதிவுகள்.காம் வெளியீடாக , அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது.
முதலாவது, இரண்டாவது தொகுப்புகள் நூலகம் தளத்திலும், இணையக் காப்பகத்திலும் (archive.org) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை அங்கிருந்து தரவிறக்கி அல்லது அங்கேயே வாசிக்கலாம்.
அமேசன் - கிண்டில் மின்னூலுக்கான இணைப்பு - https://www.amazon.com/dp/B0HKQ2VLJW

Monday, September 21, 2026

வ.ந.கிரிதரன் பாடல் : குருமண் காடே!


வ.ந.கிரிதரன் பாடல் : குருமண் காடே!
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5. AI.
ஓவியம் - கூகுள் நனோ பனானா  வழி வநகி 

என் 'குருமண்காட்டு நினைவுகள்' என்னும் நெடுங் கவிதை  இப்பாடலாக உருவெடுத்துள்ளது.  வவுனியா -மன்னார் பிரதான வீதியிலிருந்து (பட்டாணிச்சுப் புளியங்குளத்தினருகில்) வடக்காகச் செல்லும் வீதியிலுள்ள பிரதேசம் குருமண்காடு என்றழைக்கப்படுகின்றது. அதில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. அறுபதுகளில் அதுவோர் ஒற்றையடிப்பாதை. இன்றோ ஒரு நகரம். அந்த நாள் குருமண்காடு இன்று என் நினைவில் மட்டும். 


நனவிடை தோய்கின்றேன். . நான்
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோய்கின்றேன்.

என் குருமண்காடு இன்றில்லை. அங்கு
என் குருமண்காடு இன்றில்லை

இயற்கையின் வனப்பில்
இலங்கிய குருமண்காடு.
நடை பயின்றேன்.

கடற்புள்ளே (வ.ந.கிரிதரனின் பாடல்கள் தொகுப்பு மூன்று)


'கடற்புள்ளே (வ.ந.கிரிதரனின் பாடல்கள் தொகுப்பு மூன்று)

'கடற்புள்ளே!' எனது முகநூல், யு டியூப் சானல்களுக்காக எழுதப்பட்ட என் பாடல்களின் மூன்றாவது தொகுப்பு. 45 பாடல்களை உள்ளடக்கியது. அண்மையில் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியான இந்த மின்னூல் தற்போது நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நூலை வாசிக்க -


எனது, 'வ.ந.கிரிதரனின் பாடல்கள்' , யு டியூப் சானலில் , SUNO 5.5 செயற்கை அறிவு மூலம் இசையமைக்கப்பட்டு, குரல் கொடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. இங்குள்ள பாடல்கள் அந்தச் 'சான'லுக்காக எழுதப்பட்டவை. நேரம் கிடைக்கும்போது சென்று கேளுங்கள். ஆரோக்கியமான உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளூங்கள். பிடித்திருந்தால் 'சான'லை subscribe செய்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நான் பதிவிடப் போகும் பாடல்களைக் கேட்பதற்கு அது உதவியாகவிருக்கும். பாவிக்கப்பட்ட ஓவியங்கள் கூகுள் நனோ பனானா , சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்டவை.

எனது யு டியூப் சானலுக்கான இணையத்தள முகவரி: https://www.youtube.com/@girinav1

Thursday, September 17, 2026

கவிஞர் கந்தவனத்தின் 'ஹைக்கூக் கவிதைகள்' பற்றிய கட்டுரை பற்றி....


கவிஞர் கந்தவனம் அவர்கள்  10.2.1995 வெளியான 'தாயகம்' சஞ்சிகையில்  'ஹைக்கூக் கவிதைகள்' என்றொரு கட்டுரை எழுதியிருக்கின்றார். முனைவர் நிர்மலா சுரேஷ் முனைவர் பட்டத்திற்காக , சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு 'ஹைக்கூக் கவிதைகள்' என்னும் பொருளில் அளித்த ஆய்வுக்கட்டுரையைத் தழுவி, கட்டுரையின் பெரும்பகுதி  எழுதப்பட்டதாகக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருக்கின்றார் கவிஞர்.)

ஹைக்கூக் கவிதைகள் பற்றிக் கவிஞர் கூறியுள்ள முக்கிய கருத்துகள் வருமாறு:

கவிஞர் கந்தவனம்
"ஹைக்கூ என்பது ஒருவகை யப்பானியக் கவிதை.  யப்பானிய மொழிப் பன்மையில் 'ஹைக்கூ'  'கவிதைகள்' பொருளில் வழங்குகின்றது.  ஒருமையில் அது ஹைக்கூக் கவிஞர்களைக்  குறிக்கும். ஆயின்  சொல்லின் அடிப்பொருளை ஆராயின் 'கருப்போன்றும் உயிரணுப்போன்றும் உருவானதொரு கவிதை' என்னும் பொருள் வெளிப்படுவதைக் காணலாம்.

அளவால் ஹைக்கூ  5 - 7 - 5 அசைகளைக் கொண்ட மூன்று வரிக் கவிதை.  ஆயின் அதன் பொருள் தோண்டத் தோண்டத் தூண்டும் தங்கச் சுரங்கத்தைப் போன்றது... இவ்வித விளக்கப்பாட்டுக்குக் ஹைக்கூக் கவிதையை வளர்த்தெடுத்த பெருமை பாஷோ, பூசன் , ஐசா, ஷிகி போன்ற கவிஞர்களுக்குரியது.

இரண்டாவது ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 2026


இரண்டாவது ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு வரும் செப்டம்பர் 19, 20 ஆம் திகதிகளில் மார்க்கம் (கனடா) நகரில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி சிறப்பாக நடந்திட வாழ்த்துகள். [(https://www.tolkappiyam.ca/ ]

இரண்டாவது ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 2026

நாள்: 19, 20 செப்டம்பர், 2026 | இடம்: Bill Hogarth Secondary School, 100 Donald Sim Avenue, Markham, ON L6B 0R4
மாநாட்டிற்கான நோக்கம் - தொல்காப்பியத்தின் பெருமையைத் தமிழினத்தோடு பிற சமூகத்தினரும் அறியும்படிச் செய்தல். தொல்காப்பியத்தின் அனைத்துச் சிறப்புகளையும் ஒருங்கே தொகுத்தல். இளைஞர்கள் மத்தியில் “தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க வேண்டும்” என்று எழும் வினாவிற்குப் பரந்த விளக்கம் கொடுத்தல். தொல்காப்பியத்தைக் கற்க-கற்பிக்க, கொண்டாட-பரவலாக்கம் செய்வதற்கான காரணங்களை முழுமையகாகத் தொகுத்தல். தொல்காப்பியத்தையும் உலகளாவியத் தொல்காப்பிய ஆய்வறிஞர்களையும் ஆய்வுகளையும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துதல்.

வ.ந.கிரிதரன் பாடல் : 'இரவு மழை பிடித்த இயற்கை நிகழ்வு'


வ.ந.கிரிதரன் பாடல் : 'இரவு மழை பிடித்த இயற்கை நிகழ்வு'
இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. AI   டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி 

இரவு வானும் மழையும் என்றால்
இன்பத்தில் ஆழ்த்தும் இயற்கை நிகழ்வே.

இரவு மழையென்றால் இரசித்தபடி இருப்பேன்.
இரவு மழைநேரம் மகிழ்ச்சியில் மிதப்பேன்.
இயற்கை நிகழ்வுகளில் பிடித்த நிகழ்வு
இரவு மழைதான் என்றே கூறுவேன்.

வ.ந.கிரிதரன் பாடல் : 'இரவு மழை பிடித்த இயற்கை நிகழ்வு'


வ.ந.கிரிதரன் பாடல் : 'இரவு மழை பிடித்த இயற்கை நிகழ்வு'
வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. AI   டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி 

இரவு வானும் மழையும் என்றால்
இன்பத்தில் ஆழ்த்தும் இயற்கை நிகழ்வே.

இரவு மழையென்றால் இரசித்தபடி இருப்பேன்.
இரவு மழைநேரம் மகிழ்ச்சியில் மிதப்பேன்.
இயற்கை நிகழ்வுகளில் பிடித்த நிகழ்வு
இரவு மழைதான் என்றே கூறுவேன்.

Wednesday, September 16, 2026

என்னைக்கவர்ந்த எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை'! - வ.ந.கிரிதரன் -



என்னைக் கவர்ந்த இன்னுமொரு முக்கியமான நாவல் எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை'.  சி.ஏ.பாலனின் சிறப்பான மொழிபெயர்ப்பில் , இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதெமி வெளியிட்ட நாவல்.  எஸ்.கே.பொற்றேகாட்டிற்கு சாகித்திய, ஞானபீட விருதுகளைப் பெற்றுக்கொடுத்த நாவல்.

'ஒரு கிராமத்தின் கதை' நாயகனான சீதரனோ சமூக, பொருளியற் சூழல் காரணமாக நீங்கினான். வடக்கு இந்தியா தொடக்கம் ஐரோப்பா வரையில் அலைந்து திரிந்து முதியவனாக மீண்டும்  தன் கிராமத்துக்கு வருகின்றான். அவன் மீண்டும் ஊர் திரும்பியபோது அவன் கண்ட அவனது கிராமமான 'அதிராணிப்பாடம்' முற்றிலும் மாறிப்போயிருந்தது. அவன் பால்யப் பருவத்து நினைவுகளைத் தாங்கி நின்ற பகுதிகள் எல்லாம் காணாமல் போயிருந்தன. அவ்வூரின் உயிர்த்துடிப்பாக விளங்கிய மனிதர்கள், அவன் வாழ்வின் பால்ய, பதின்மப் பருவத்தில் இடம் பெற்றிருந்த மனிதர்கள்  பலரும் காணாமல் போயிருந்தார்கள். அவனது நினைவெல்லாம் நிறைந்திருந்த மண்ணைக் காண அவன் எத்துணை ஆர்வத்துடன் மீண்டும் திரும்பி வந்தான். வந்தபோதுதான் உணர்ந்தான் அவன் நினைவில் நிற்கும் அவனது அதிராணிப்பாடம் அங்கில்லை. அங்கிருந்தது உலகமயமாக்கலின் விளைவாக உருவான கால மாறுதல்களைத்  தாங்கி நிற்கும் அவனுக்கு அந்நியமான அதிராணிப்பாடம். 

Sunday, September 13, 2026

செம்மீன் பற்றி எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் கருத்தும் , என் எதிர்வினையும்!


தகழி சிவசங்கரப் பிள்ளை

எனக்குப் பிடித்த 10 நாவல்கள் பற்றியொரு முகநூற் பதிவு இட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் Tamil Journalist நான் குறிப்பிடாத தகழியின் செம்மீன் நாவல் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதைக்கையிலெடுத்த எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி பின்வருமாறு ஒரு கருத்தினை இட்டிருந்தார்:

"Karunaharamoorthy Ponniah - தகழியாருக்குப் போதிய கடலனுபவங்கள் இல்லையென்று நினைக்கிறேன், இருந்தால் செம்மீன் (இறால்) ஆழ்கடலில் அதிகம் இருப்பதாக எழுதியிருக்கமாட்டார். இறால் ஆழங்குறைவான Lagoons / காயல்கள்/ கடலேரிகள்/ பரவைக்கடல்களில்த்தானே அதிகமாகக் கிடைக்கும்."

இதற்கு என் எதிர்வினை இதுதான்:

"நண்பரே, மிகவும் அவசரப்படுகின்றீர்கள். முட்டையில் மயிர் பிடுங்குதல் போல் ஏதாவது சிறு பிழையாவது தென்படாதா என்று பார்த்துக்கொண்டு நாவலைப் படித்தால், நாவலை உங்களால் சுவைக்க முடியாது போய்விடும். கடல் அனுபவம் தகழிக்கல்ல உங்களுக்குத்தான் இல்லையென்பதை இக்கூற்று எடுத்துக்காட்டுகிறது.

செம்மீன் நாவலில் அதிகம் பேசப்பட்டிருப்பது ஆழ்கடல் மீன் பிடித்தல் பற்றியே. சுறா மீன் பிடிப்பது பற்றிப் பல இடங்களில் வருகிறது. இறுதியில் கருத்தம்மாவின் கணவன் பழனியும் சுறா மீனைப் பிடிக்கின்றான். அதுவும் தூண்டிலை விழுங்கி இறந்த நிலையில்கரையொதுங்குகிறது.

நாவலில் சாகரப் பருவம் பற்றிப்பேசப்படுகின்றது. தென் மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலம். அக்காலகட்டத்தில் நிறைய சத்துள்ள பொருட்களை உள்ளடக்கிய நீர் கடலின் கடற்கரைப் பகுதிகளில் அதிகமாகும், அச்சமயங்களில் அப்பகுதியில் செம்மீன்கள் அதிகமாகும். அவை உண்ணும் சத்துள்ள உணவான கடற்தாவரங்களில் செழிக்கும் காலம் அது. சாகரப்பருவம் பற்றியும் ,செம்மீன் பிடித்தல் பற்றியும் அதிக இடங்களில் நாவல் விபரிக்கவில்லை. ஆழ்கடல் மீன் பிடிப்பு பற்றித்தான் அதிகம் விபரிக்கின்றது."

இது பற்றி உங்கள் புரிதல் என்ன? கருணாகரமூர்த்தியின் கருத்து , அது பற்றிய என் கருத்து பற்றிய உங்கள் கருத்தென்ன? பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!"





Saturday, September 12, 2026

எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் முதற் பத்து நாவல்கள்!




அவ்வப்போது சிந்திக்கும்போது உடனடியாக நினைவுக்கு வரும் 10 நாவல்களைக் கீழே தந்துள்ளேன். உங்களுக்குப் பிடித்த நாவல்களைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1.Crime and Punishment (குற்றமும் தண்டனையும்) - ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
2. Resurrection (புத்துயிர்ப்பு) - லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
3. கரமஷாவ் சகோதரர்கள் - ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
4. காலம் - எம்.டி.வாசுதேவன் நாயர்
5. மோகமுள் - தி.ஜானகிராமன்
6. The Old Man and The Sea (கடலும் கிழவனும்) - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே (Earnest Hemingway)
7. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
8. ஏணிப்படிகள் - தகழி சிவசங்கரன்பிள்ளை
9. நீலகண்ட பறவையைத்  தேடி - அதீன் பந்த்யோபாத்யாய 
10. The Metamorphosis (உருமாற்றம்) - ஃப்ரான்ஸ் காஃப்கா  (Franz Kafka)

தமிழரான கலைஞர் கருணாநிதியைத் தெலுங்கர் என்பது ஏன்?


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒரு வந்ததில் திமுக நன்மை அடைந்திருக்கின்றதே என்றுதான் கூற வேண்டும்.  இதுவரை காலமும் திமுக மேல் குறிப்பாகக் கலைஞர் மேல் புனையப்பட்டிருந்த பொய்களை ஒவ்வொன்றாக மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றார்கள்.  

முக்கியமான பொய் - தமிழர் தெலுங்கர் என்பது. அது எம்ஜிஆர் காலத்தில் அரசியல் காரணங்களால் முன் வைக்கப்பட்ட பொய். எம்ஜிஆரை மலையாளி என்று திமுகவினர் பிரச்சாரம் செய்ததால் எம்ஜிஆர் கையாண்ட எதிர் நடவடிக்கை. தமிழகத்தில் திமுகவை அழிக்காமல் எதுவும் செய்ய முடியாது என்றுணர்ந்த ஆரியத்தின் சூழ்ச்சிக்குப் பலியாகிய தமிழர்களில் சிலர் அதனைத் தம் அரசியல் நலன்களுக்காகப் பாவிக்கத்தொடங்கினார்கள். போலி சமுக., ஊடக ஆய்வாளர்கள் அதை உண்மைபோல் புதிய பொய்களைப் புனைந்தார்கள். 

Thursday, September 10, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்கள் - 'கடற்புள்ளே' (மூன்றாவது தொகுப்பு)


எனது 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில் வெளியான பாடல்களின் மூன்றாத் தொகுதி 'கடற்புள்ளே!' என்னும் தலைப்பில் கிண்டில் / அமேசன் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது.  அதற்கான இணைய இணைப்பு - https://www.amazon.com/dp/B0HJF1NLWB 

அமரர் கல்கி நினைவாக...

எழுத்தாளர் கல்கி 

தமிழின் காத்திரமான படைப்பாளிகள் பலரின் வாழ்க்கையில் நிச்சயம் கல்கியின் எழுத்துகளுக்கும் ஓரிடமுண்டு. அவற்றினூடு வளர்ந்தவர்கள் அவர்கள்.

கல்கியின் தெளிந்த ஆற்றொழுக்கு நடையும், கலந்திருக்கும் நகைச்சுவையும் நெஞ்சை வருடிச் செல்பவை. எங்களுக்கு முந்திய தலைமுறையைக் கவர்ந்த நாவல் எங்களைக் கவர்ந்தது. அதற்குப் பின் அடுத்தடுத்த தலைமுறையினரையும் கவர்ந்தது. என் குழந்தைகள் கூட மிகவும் விரும்பிப்பார்த்த திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 & பொன்னியின் செல்வன் 2. 

Sunday, September 6, 2026

ஆகஸ்ட் 2026இல் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள்!

ஆகஸ்ட் மாதம் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள், அவர்கள் பார்த்த பக்கங்கள் பற்றிய விபரங்கள் இவை!

வருகை தந்தவர்கள் (Unique Visitors) - 528, 457
பார்த்த பக்கங்கள் - 1, 630, 623
ஹிட்ஸ் (Hits) - 2. 453, 389
Bandwidth - 105 .56 GB

பதிவுகள் இணைய இதழ் - www.pathivukal.com www.geotamil.com www.pathivugal.com


தெளிவாகப் பார்க்க, மேலுள்ள தகவல் படத்தை  ஒரு தடவை அழுத்தவும்.


கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'எழுத்தாளர் அரங்கம்' மெய்நிகர் வழி நிகழ்ச்சியில் எழுத்தாளர் தமிழ்நதி! - வ.ந.கி -


எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) 

எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) பங்கு பற்றிய  , கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நடந்த 'எழுத்தாளர் அரங்கம்' மெய்நிகர் வழி நிகழ்ச்சி!

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் இம்மாத எழுத்தாளர் அரங்கம் நிகழ்ச்சியில்  எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) பங்குபற்றினார்.  எழுத்தாளர் அகணி சுரேஷ் நெறிப்படுத்தினார்.  நிகழ்ச்சி முழுவதையும் உள்ளடக்கிய காணொளியை அகணி சுரேஷ் தன் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.  நான் சந்தர்ப்ப, சூழ்நிலை காரணமாக மேற்படி மெய்நிகர் வழி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபற்ற முடியவில்லை. அதை நிவர்த்தி செய்தது மேற்படி காணொளி.

Thursday, September 3, 2026

எழுத்தாளர் சோ.பத்மநாதன் அவர்களுக்குச் 'சாகித்திய ரத்னா' விருது!



இலங்கை அரசால் வழங்கப்படும்  அதியுயர் இலக்கிய விருது  'சாகித்திய ரத்னா' .  இம்முறை  அவ்விருது கவிதை, ,மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புச் செய்த எழுத்தாளரான    சோ.பத்மநாதன்  அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இவ்விருதை ஏற்கனவே எழுத்தாளர்கள் செங்கை ஆழியான், தெணியான், அன்னலட்சுமி இராஜதுரை (யாழ்நங்கை)  உட்படப் பலர் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  


தென்னிலங்கை எழுத்தாளர்களின், சர்வதேச எழுத்தாளர்களின கவிதைகளைத்   தமிழுக்குக் கொண்டு வந்தவர். அதே சமயம் தமிழ்ப்படைப்புகளையும் ஆங்கில மொழிக்குக் கொண்டு சென்றவர். பன்னாட்டு மக்கள் மத்தியில் புரிந்துணர்வை வளர்க்கப் பங்காற்றுபவை இவ்வகையான மொழிபெயர்ப்புகளே. 

வரலாறு பற்றி....


வரலாறு எவ்விதம் எழுதப்பட வேண்டும். பலர் கடந்த கால வரலாறுகளைத் தம் பார்வையில் , தாம் சார்ந்த அமைப்புகளின் அடிப்படையில், உணர்ச்சிகளின் அடிப்படையில் கூட்டிக்குறைத்து எழுதுகின்றார்கள். இது சரியா? வரலாறு உண்மைகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட வேண்டும், உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல.
வரலாறு என்பது கடந்த காலக்கண்ணாடி. அது உண்மையை உள்ளவாறு பிரதிபலிக்க வேண்டும். ஆனால் நாம் காண்பதென்ன? தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் பதியப்படும் நனவிடை தோய்தல்கள் வரலாறு என்னும் பெயரில் உலா வருகின்றன.
உணர்ச்சிகளின் அடிப்படையில் கூட்டிக் குறைத்து எழுதப்படும் வரலாற்றுப் பதிவுகள் வரலாற்றுப் பதிவுகளே அல்ல, வெறும் நனவிடை தோய்தல்களே. உண்மைகள், ஊகங்கள், அவை பற்றிய உணர்ச்சி மிக்க நனவிடை தோய்தல்களே.

நூல் பெயர்: குற்றமும் தண்டனையும் (பெங்குயின் கிளாசிக்ஸ் டீலக்ஸ் பதிப்பு) ஆசிரியர்: ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி

[Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.] [செயற்கை நுண்ணறிவு தயாரித...