Saturday, September 12, 2026

தமிழரான கலைஞர் கருணாநிதியைத் தெலுங்கர் என்பது ஏன்?


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒரு வந்ததில் திமுக நன்மை அடைந்திருக்கின்றதே என்றுதான் கூற வேண்டும்.  இதுவரை காலமும் திமுக மேல் குறிப்பாகக் கலைஞர் மேல் புனையப்பட்டிருந்த பொய்களை ஒவ்வொன்றாக மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றார்கள்.  

முக்கியமான பொய் - தமிழர் தெலுங்கர் என்பது. அது எம்ஜிஆர் காலத்தில் அரசியல் காரணங்களால் முன் வைக்கப்பட்ட பொய். எம்ஜிஆரை மலையாளி என்று திமுகவினர் பிரச்சாரம் செய்ததால் எம்ஜிஆர் கையாண்ட எதிர் நடவடிக்கை. தமிழகத்தில் திமுகவை அழிக்காமல் எதுவும் செய்ய முடியாது என்றுணர்ந்த ஆரியத்தின் சூழ்ச்சிக்குப் பலியாகிய தமிழர்களில் சிலர் அதனைத் தம் அரசியல் நலன்களுக்காகப் பாவிக்கத்தொடங்கினார்கள். போலி சமுக., ஊடக ஆய்வாளர்கள் அதை உண்மைபோல் புதிய பொய்களைப் புனைந்தார்கள். 

உண்மையில் கலைஞர் தெலுங்கரா?  கலைஞர் தமிழர். அவர் குடும்பத்தினர் தமிழர்கள்.  திருக்குவளையில் பிறந்தவர்கள். அய்யாத்துரை - தாத்தா. பெரிய நாயகத்தம்மாள் - பாட்டி. தாய் - அஞ்சுகம்,. தந்தையார் - முத்துவேலர். குழந்தைகள் அழகிரி, முத்து, செல்வி, தமிழரசு, கனிமொழி , ஸ்டாலின் ( ஸ்டாலின் மீதுள்ள பற்றினால் வைத்தது) .இவர்களில் ஸ்டாலின் தவிர அனைத்தும் தமிழ்ப்பெயர்கள். எந்தத்தெலுங்கராவது இவ்விதம் தமிழ்ப்பெயர்களை வைப்பார்களா? (உடனடியாக இந்தப்போலி ஆய்வாளர்கள் வந்து விடுவார்கள் - இவர்கள் தெலுங்கர்கள். திட்டமிட்டே தமிழ்ப்பெயர்களை வைத்தார்கள் என்று)

இன்னுமொரு பிரிவு  ஆந்திராவிலுள்ள ஓங்கோலில் இருந்து  வந்த தெலுங்கர்கள் கலைஞர் குடும்பத்தினர் என்பார்கள். இப்படிக்கூறுபவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள் - ஆந்திரா மாகாணம் மொழிவாரியாகப் பிரிவு படுவதற்கு முன்னர் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதுதான் அது. இவ்விதம் கூறுபவர்கள் உண்மையில் தாம் கூறுவதற்கு ஆதாரங்களைக் காட்ட மாட்டார்கள். ஏனென்றால் ஆதாரங்கள் அவர்களிடம் இல்லை.  அவர்கள் கூறுவது அரசியல்ரீதியான அவதூறுகள்.

கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி' பல பாகங்ளைக்கொண்டது. இணையத்தில் தேடினால் கிடைக்கும். வாசித்துப் பாருங்கள்.  இதில் கலைஞர் தன் தாத்தா காலத்திலிருந்து தன் வரலாற்றைக் கூறியிருக்கின்றார். அவருக்கேயுரிய சுவையான மொழி நடையில் சுயசரிதை எழுதப்பட்டிருக்கின்றது. 'நெஞ்சுக்கு நீதி'யின் முதல் பகுதிக்கான இணைப்பு - 

https://archive.org/details/nenjuku-needhi-1/page/19/mode/2up


No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...