Thursday, September 24, 2026

கனடாவில் தமிழ் முதியவர்கள்!


கனடாவில் வசிக்கும் முதியவர்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா நண்பர்களே! அவ்வப்போது முதியவர்கள் மாடியிலிருந்து பாய்ந்து தம்முயிரைப் போக்கும் செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். பிள்ளைகள் முதியவர்களின் ஓய்வூதியங்கள், சமூக உதவிக் கொடுப்பனவுகளைக் கையாடல் செய்வதாக அவ்வப்போது செய்திகளைக் கேள்விப்படுகின்றோம். முதியவர்கள் உழைத்து வாங்கிய வீடுகளிலிருந்து முதியவர்கள் இல்லங்களுக்கு வலிந்து அனுப்பப்படுவதாகம் கேள்விப்பட்டிருக்கின்றோம். முதியவர்கள் பலர் ஓய்வூதியம் பெற்ற நிலையிலும் தொடர்ந்தும் வேலை செய்து கொண்டிருப்பதையும் அறிந்திருக்கின்றோம்.  முதியவர்களைக் குழந்தைகள் தம் குழந்தைகளைப் பராமரிக்கும் வேலையைச் செய்யுமாறு வறுபுறுத்துவது பற்றியும் அறிந்திருக்கின்றோம்.

கனடிய அரசிடமிருந்து, டிரில்லியம் அறக்கட்டளையிலிருந்து இலட்சக்கணக்கில் நிதியுதவி பெறும் முதியவர்கள் நலன்களை மையமாக வைத்து இயங்கும் அமைப்புகள் இவ்விடயங்களிலும் கவனம் எடுத்து முதியவர்களுக்கு உதவியிருக்கின்றனவா?

முதியவர்கள் நலன்களுக்கு முதலுரிமை கொடுப்பதன் அவசியத்தை, குழந்தைகளுக்கு எடுத்துரைக்கும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்படுகின்றனவா? அல்லது சுற்றுலாக்களுடன், சிற்றுண்டிகளுடன் நின்று விடுகின்றனவா?

முதியவர்களின் ஆர்வத்தை அபிவிருத்து செய்யும் செயற்பாடுகளை, அவர்கள்தம் போழுது போக்குகளுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்னான செயற்பாடுகளை இவ்வமைப்புகள் செய்கின்றனவா?
இம்முதியவர் அமைப்புகள் ஆற்றும் முதியவர் நலத்திட்டங்கள் எவை? அவை  பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்தால் அறியத்தாருங்கள் நண்பர்களே.

No comments:

கனடாவில் தமிழ் முதியவர்கள்!

கனடாவில் வசிக்கும் முதியவர்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா நண்பர்களே! அவ்வப்போது முதியவர்கள் மாடியிலிருந்து பாய்ந்து தம...