Thursday, September 17, 2026

வ.ந.கிரிதரன் பாடல் : 'இரவு மழை பிடித்த இயற்கை நிகழ்வு'


வ.ந.கிரிதரன் பாடல் : 'இரவு மழை பிடித்த இயற்கை நிகழ்வு'
வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. AI   டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி 

இரவு வானும் மழையும் என்றால்
இன்பத்தில் ஆழ்த்தும் இயற்கை நிகழ்வே.

இரவு மழையென்றால் இரசித்தபடி இருப்பேன்.
இரவு மழைநேரம் மகிழ்ச்சியில் மிதப்பேன்.
இயற்கை நிகழ்வுகளில் பிடித்த நிகழ்வு
இரவு மழைதான் என்றே கூறுவேன்.

ஓட்டுக் கூரையில் சட்டச்சட என்றே
ஒளிர்ந்து முழங்கப் பொழியும் மழை!
வயற்புறத் தவளைகளின் வாய்ப்பாட்டுக் கச்சேரியோ
விடிய விடிய நடக்கும் மகிழ்ந்திருப்பேன்.

இரவு வானும் மழையும் என்றால்
இன்பத்தில் ஆழ்த்தும் இயற்கை நிகழ்வே.

கணப்பொழுதில் ஒளிரும் மின்னல் போல் 
ககனத்தில்  வாழ்ந்து மறைய வேண்டும்
முற்போக்குக் கவிஞன் அன்று பாடினான்.
நற்போக்கு அதுவென்றே மனது கூத்தாடும்.

இயற்கை நிகழ்வும் கருத்தைக் கூறும்.
இந்த வாழ்வுக்கு நல்லவழி இயம்பும்.
அயர்ச்சி நீங்கும் .ஆனந்தம் பொங்கும்.
ஆகாவென்றே மனதும் ஆர்ப்பரித்துக் கிடக்கும்.

இரவு வானும் மழையும் என்றால்
இன்பத்தில் ஆழ்த்தும் இயற்கை நிகழ்வே.






No comments:

வ.ந.கிரிதரன் பாடல் : 'இரவு மழை பிடித்த இயற்கை நிகழ்வு'

வ.ந.கிரிதரன் பாடல் : 'இரவு மழை பிடித்த இயற்கை நிகழ்வு' இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. AI   டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வ...