Thursday, September 3, 2026

எழுத்தாளர் சோ.பத்மநாதன் அவர்களுக்குச் 'சாகித்திய ரத்னா' விருது!



இலங்கை அரசால் வழங்கப்படும்  அதியுயர் இலக்கிய விருது  'சாகித்திய ரத்னா' .  இம்முறை  அவ்விருது கவிதை, ,மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புச் செய்த எழுத்தாளரான    சோ.பத்மநாதன்  அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இவ்விருதை ஏற்கனவே எழுத்தாளர்கள் செங்கை ஆழியான், தெணியான், அன்னலட்சுமி இராஜதுரை (யாழ்நங்கை)  உட்படப் பலர் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  


தென்னிலங்கை எழுத்தாளர்களின், சர்வதேச எழுத்தாளர்களின கவிதைகளைத்   தமிழுக்குக் கொண்டு வந்தவர். அதே சமயம் தமிழ்ப்படைப்புகளையும் ஆங்கில மொழிக்குக் கொண்டு சென்றவர். பன்னாட்டு மக்கள் மத்தியில் புரிந்துணர்வை வளர்க்கப் பங்காற்றுபவை இவ்வகையான மொழிபெயர்ப்புகளே. 


தனது இலக்கியப் பங்களிப்புகளுக்காக இவ்வருடச் 'சாகித்திய ரத்னா'  விருதினைப் பெறும்  எழுத்தாளர் சோ.பத்மநாதன அவர்களை வாழ்த்துவோம், வாழ்த்துகள்!

சோ.ப  அவர்களின் நூல்களில் சில:

மொழிபெயர்ப்பு
தென்னிலங்கைக் கவிதைகள் -  சோ.ப - https://noolaham.net/project/84/8378/8378.pdf
ஆபிரிக்கக்கவிதை - https://noolaham.net/project/668/66749/66749.pdf

கவிதைத்தொகுப்பு
வடக்கிருத்தல் - சோ.பத்மநாதன் - https://noolaham.net/project/83/8267/8267.pdf
நினைவுச் சுவடுகள் - https://noolaham.net/project/84/8369/8369.pdf




* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி 





No comments:

ஒரு டொரோண்டோ நகரவாசியின் 'கோல்டென் மைல் மீளமைப்பு' (ReNew Golden Mile) திட்டம் பற்றிய அக்கறை! - வ.ந.கிரிதரன் -

டொரோண்டோ மாநகரசபை அண்மையில் ReNew Golden Mile திட்டம் பற்றிய சுற்றுச் சூழல் மதிப்பீட்டை முடித்திருந்தது. அது பற்றிப் பொதுமக்களின் கருத்துகளை...