Monday, September 21, 2026

கடற்புள்ளே (வ.ந.கிரிதரனின் பாடல்கள் தொகுப்பு மூன்று)


'கடற்புள்ளே (வ.ந.கிரிதரனின் பாடல்கள் தொகுப்பு மூன்று)

'கடற்புள்ளே!' எனது முகநூல், யு டியூப் சானல்களுக்காக எழுதப்பட்ட என் பாடல்களின் மூன்றாவது தொகுப்பு. 45 பாடல்களை உள்ளடக்கியது. அண்மையில் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியான இந்த மின்னூல் தற்போது நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நூலை வாசிக்க -


எனது, 'வ.ந.கிரிதரனின் பாடல்கள்' , யு டியூப் சானலில் , SUNO 5.5 செயற்கை அறிவு மூலம் இசையமைக்கப்பட்டு, குரல் கொடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. இங்குள்ள பாடல்கள் அந்தச் 'சான'லுக்காக எழுதப்பட்டவை. நேரம் கிடைக்கும்போது சென்று கேளுங்கள். ஆரோக்கியமான உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளூங்கள். பிடித்திருந்தால் 'சான'லை subscribe செய்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நான் பதிவிடப் போகும் பாடல்களைக் கேட்பதற்கு அது உதவியாகவிருக்கும். பாவிக்கப்பட்ட ஓவியங்கள் கூகுள் நனோ பனானா , சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்டவை.

எனது யு டியூப் சானலுக்கான இணையத்தள முகவரி: https://www.youtube.com/@girinav1

தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மானுடருக்கு ஆரோக்கியமான பங்களிப்பை நல்கி வருகின்றது. செயற்கை அறிவும் அத்தகைய தொழில் நுட்பமே. எனது பாடல் வரிகளுக்குச் செயற்கைத் தொழில் நுட்பம் இசையமைத்ததுடன் அல்லாது பாடுவதற்கான குரலையும் வழங்குகின்றது. பாடலாசிரியர் ஒருவர் தன் பாடல் வரிகளைப் பல் வகைகளில் இசையமைத்து, பாட வைத்துப் பரிசோதிக்க இத்தொழில் நுட்பம் வழி சமைத்துள்ளது. அவரது பாடல் எழுதும் திறமையினையும் வளர்ப்பதற்கும் இத்தொழில் நுட்பம் உதவுகின்றது.

இவ்விதமாகச் செயற்கை அறிவு இசைமையத்துப் பாடிய பாடல்களை நீங்கள் எனது யு டியூப் சானலான வ.ந.கிரிதரனின் பாடல்கள் சானலில் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1

அட்டைப்பட ஓவியம்: செயற்கை அறிவு (AI) | இசை & குரல்: செயற்கை அறிவு (AI) SUNO

கடற் புள்ளே! தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் வருமாறு:

உள்ளே
1. காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
2. வலிகள் கண்டு ஓட மாட்டோம்!
3. சவால்கள் கண்டு துவண்டிட மாட்டோம்.
4. உறவுகள்
5. சமூக, ஊடகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்!
6. பொறுப்புணர்ந்து செயற்படுவீர்!
7. விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
8. கலைத்தாயின் புதல்வி ஜானகி அம்மா!
9. சக்தியும் , பொருளும்!
10. கரியாலை நாகபடுவான் வாவி
11. உண்மை அன்பு!
12. எண்ணங்களை நம்புபவன் நான்.
13. வழுக்கியாறு
14. வான் பாயும் வாவி!
15. தொலைவில் தெரியும் சுடர்கள்!
16. இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்...
17. விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்
18. நல்லதை நினைப்போம்
19. யாழ் பொதுசன நூலக நினைவுகள்!
20. நினைவுகள்
21. சிந்தையில் நிலைத்து நிற்கும் சில தருணங்கள்!
22. கடற்புள்ளே!
23. முள்ளிவாய்க்கால்
24. அன்னையே!
25. நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
26. 'உலகக் கவிஞன் கணியன் பூங்குன்றனார்'
27. உழைப்பாளர் தினமிது!
28. காலைக் கதிரொளி!
29. வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு!
30. ஏணி பாம்பு விளையாட்டு
31. "ஆழ நடுக்காட்டில் என்னை இருத்தி
வாழு என்று சொன்னால் வாழுவேன்".
32. இயற்கையைப் பேணுவோம்.
33. என் பிரியம் மிகு யாழ் மண்ணே!
34. பொங்கிவரும் பெருநிலவு போன்ற எழில்தோற்றம்
35. இரவு வானின் இரசிகன் நான்!
36. இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
37. மழை பொழியும் இரவென்றால்.....
38. வரலாறு
39. இருப்பைப் புரிந்து கொள்ளல்!
40. விண்ணைப் போன்றதொரு நூலகம்
41. பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
42. தலை குனிந்து செல்லும் பெண்ணே!
43. நீலவண்ணக் கோள் ஒர் அற்புதம்!
44. காட்சியும் சித்து விளையாட்டும்!
45. குருமண் காடே!

No comments:

கடற்புள்ளே (வ.ந.கிரிதரனின் பாடல்கள் தொகுப்பு மூன்று)

' கடற்புள்ளே (வ.ந.கிரிதரனின் பாடல்கள் தொகுப்பு மூன்று) 'கடற்புள்ளே!' எனது முகநூல், யு டியூப் சானல்களுக்காக எழுதப்பட்ட என் பாடல்க...