Thursday, September 3, 2026

வரலாறு பற்றி....


வரலாறு எவ்விதம் எழுதப்பட வேண்டும். பலர் கடந்த கால வரலாறுகளைத் தம் பார்வையில் , தாம் சார்ந்த அமைப்புகளின் அடிப்படையில், உணர்ச்சிகளின் அடிப்படையில் கூட்டிக்குறைத்து எழுதுகின்றார்கள். இது சரியா? வரலாறு உண்மைகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட வேண்டும், உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல.
வரலாறு என்பது கடந்த காலக்கண்ணாடி. அது உண்மையை உள்ளவாறு பிரதிபலிக்க வேண்டும். ஆனால் நாம் காண்பதென்ன? தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் பதியப்படும் நனவிடை தோய்தல்கள் வரலாறு என்னும் பெயரில் உலா வருகின்றன.
உணர்ச்சிகளின் அடிப்படையில் கூட்டிக் குறைத்து எழுதப்படும் வரலாற்றுப் பதிவுகள் வரலாற்றுப் பதிவுகளே அல்ல, வெறும் நனவிடை தோய்தல்களே. உண்மைகள், ஊகங்கள், அவை பற்றிய உணர்ச்சி மிக்க நனவிடை தோய்தல்களே.
அவை தவிர்க்கப்பட முடியாதவை. அவற்றினூடு , மறைந்திருக்கும் உண்மைகளைச் சீரான ஆய்வுகள் மூலம் அறிய வேண்டும். இல்லாவிட்டால் வரலாறு என்னும் பெயரில் பதிவு செய்யப்படுபவை எல்லாம் உண்மை வரலாற்றைத் திரித்து விடும் அபாயமுண்டு. ஆதாரங்களற்றவை எவையும் வரலாற்று உண்மைகளாகக் கருதப்படக் கூடாது.
வரலாறு புனைவு அல்ல. அதில் கற்பனைக்கும், மிகைப்படுத்தல்களுக்கும் இடமில்லை. காய்தல் உவத்தல் இன்றி எழுதப்பட வேண்டும்.
"காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றாதது ஆகும் உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும்” - (முனைப்பாடியார், அற நெறிச்சாரம்:

No comments:

எழுத்தாளர் சோ.பத்மநாதன் அவர்களுக்குச் 'சாகித்திய ரத்னா' விருது!

இலங்கை அரசால் வழங்கப்படும்  அதியுயர் இலக்கிய விருது  'சாகித்திய ரத்னா' .  இம்முறை  அவ்விருது கவிதை, ,மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பெ...