Sunday, June 15, 2025

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.


இன்று தந்தையர் தினம். அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள். (ஓவியம் - AI )

எந்தையின் நினைவுகள் கூடவே
அன்னையின்  நினைவுகள்!
அன்னையின் நினைவுகள் கூடவே
அன்னை மண்ணின் நினைவுகள்!
இந்நாளில் எந்தையரை ,
இந்நாளில் அன்னையரை,
இந்நாளில் அன்னை மண்ணை 
நினைவில் வைப்போம்.
நினைவில் வைப்போம்.

எந்தையும் தாயும்... மகாகவி பாரதியார் - பாடகர் டி.என்.சேசகோபாலன்
https://www.youtube.com/watch?v=yiMVXlvVa8k

கவிதை;  எந்தையும் தாயும்... மகாகவி பாரதியார்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்
போந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

மங்கையராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்
தழுவியதிந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடல் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

ஓவியம் - AI

No comments:

மறக்க முடியாத எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர்  இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறந்த நாள் ஜூலை 10.  என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் இ.பா. தனது மனைவி இந்...

பிரபலமான பதிவுகள்