Monday, March 2, 2026

வ.ந.கிரிதரனின் முகநூல் உரைகள்! (1)


கலை, இலக்கியக்கோட்பாடுகள் பற்றிய என் எண்ணங்களை அவ்வப்போது காணொளிகளாகத் தருவதற்கு முடிவு செய்திருக்கின்றேன். அவ்வகையில் முகநூலில் பகிர்ந்துள்ள காணொளிகள் இவை.  இவை பற்றிய உங்கள் கருத்துகள் எவையாயினும் அறியத் தாருங்கள். இவை பற்றிய ஆரோக்கியமான தர்க்கங்களுக்கு அவை வழி வகுக்கும். காணொளிகள் என் 'ஐபோன்' மூலம் எடுக்கப்பட்டவை. 

நவீனம், நவீனத்துவம் பற்றி... https://www.facebook.com/reel/1254157106063345

இக்காணொளியில் இயற்பண்புவாதம், யதார்த்தவாதம் ஆகியவற்றுகிடையிலான வித்தியாசம், இவை பற்றிய பேராசிரியர்களின் தடுமாற்றங்கள் போன்ற விடயங்களைச் சுருக்கமாக விபரித்திருக்கின்றேன்.  நான் அறிந்த, புரிந்த எண்ணங்கள் இவை.
https://www.facebook.com/reel/3181466418702424

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான கலை, இலக்கியப் போக்குகளில் ஒன்று 'மிகையதார்த்தவாதம்' (Surrealism) . இது பற்றிய என் எண்ணங்களை இக்காணொளியில் பகிர்ந்திருக்கின்றேன். காணொளியை முழுமையாகப் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  - https://www.facebook.com/reel/1623966155280685

நவீனத்துவக் கலை,இலக்கியப் போக்குகளில் முக்கியமான போக்குகளில் ஒன்று கியூபிசம் அல்லது கனவடிவ வாதம். முப்பரிமாண வடிவவாதம் என்றும் கூறலாம். இக்கனவடிவவாதம் பற்றிய எனது புரிதல்களை இக்காணொளியில் பகிர்ந்திருக்கின்றேன். முழுமையாகப்பாருங்கள். உங்கள் ஆக்கபூர்வமான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
கலை, இலக்கியப் போக்குகள் பற்றி இயலுமானவரை அறிந்திருப்பது எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல வாசகர்களுக்கும் நன்மை பயக்குமென்பது என் நம்பிக்கை. 
கனவடிவவாதம் பற்றிய வ.ந.கிரிதரனின் உரை - https://www.facebook.com/reel/1242056628105292 
 

கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து புகலிடம் நாடிப புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் அமெரிக்கத்  தடுப்பு முகாம் அனுபவங்களை விபரிக்கும் சிறு நாவல் வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'. கனடாவிலிருந்து  வெளியான 'தாயகம்' பத்திரிகையில்  தொடராக வெளியான நாவல். இந்நாவல் பற்றிய வ.ந.கிரிதரனின் சிற்றுரை. - https://www.facebook.com/reel/1136622061838318
 



No comments:

மகாகவி பாரதியார் பாடல் - கண்ணன் என் காதலன்!

இசை & குரல்: SUNO AI  ஓவியம்: கூகுள் நனோ பனானா  வழி வநகி ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்  ஆசை முகம் மறந்து போச்சே -இதை யாரிடம் சொல்வேனடி தோழி ந...