'வெண்னிற ஆடை' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'என்ன என்ன வார்த்தைகளோ' பாடற் காணொளியை முன்பு பகிர்ந்திருந்தேன். அதற்குக் கருத்துத் தெரிவித்திருந்த முகநூல் நண்பர் அருள்குமார் எஸ்பி (Arul Kumar SP) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: " வெண்ணிற ஆடை படத்தில் வரும் முதல் பாடல் தான் ஜெயலலிதா அவர்கள் திரையில் முதன்முதலில் தோன்றி நடித்த காட்சி. கேட்கும் எவரையும் கலங்கடிக்கச் செய்யும் அந்த பாடலின் முதல் அடி : " நான் என்பதென்ன . நீ என்பதென்ன.. ஒரு நினைவு என்பதென்ன ...? நிலையில்லாத உலக மேடையில் நாமும் வந்ததென்ன ...? - மன சிதைவு என்றால் என்ன என்பதை எளிமையாகச் சொன்ன வரிகள் !! நன்றி தோழர் ."
அவர் கூறியது உண்மைதான் . இதுதான் அந்தப் பாடல் . அவர் சுட்டிக்காட்டியதால் மீண்டும் பார்த்தேன்.
கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள், மெல்லிசை மன்னர்களின் இசை , நடிகர் ஶ்ரீகாந்தின் சிறப்பான நடிப்பு, பாடகர் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஜெயலலிதாவுக்குப் பொருத்தமான குரல், இவற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கும் இயக்குநர் ஶ்ரீதர் இவை இப்பாடலின் சிறப்புக்கு ஏனைய காரணங்கள்.
பாடல் வரிகளில் கவிஞர் கண்ணதாசன் மானுட வாழ்க்கையை தனக்கேயுரிய பாணியில் அள்ளித்தந்திருக்கின்றார். கேட்பதற்குச் சுவைக்கின்றது. கூடவே சிந்திக்கவும் வைக்கின்றது. கீழே பாடலின் வரிகளைத் தந்துள்ளேன். என்ன வரிகள் என்று பிரமிக்க வைக்கும் வரிகள் இவை. எளிமையான ஆனால் ஆழமான வரிகள்.
பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=8sQSaxn8sI0
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனான வழி வநகி
கவிஞர் கண்ணதாசனின் 'நீ எனப்தென்ன? நான் என்பதென்ன?"
நீ என்பதென்ன நான் என்பதென்ன
நீ என்பதென்ன நான் என்பதென்ன
ஒரு நினைவு என்பதென்ன ஹோ… ஹோ…
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
நாம் யாரும் யாரும் சொந்தம் ஹொஹோ…
நாம் யாரை எண்ணி வந்தோம் ஹோ…
ஒரு மேனி கொண்டு வந்தோம்
பிரியாமல் கொண்டு செல்வோம்
இந்த சோக நாடகம் உன்னோடும் என்னோடும்
இன்றோடு நில்லாதப்பா
ஓ ஹொஹொஹொஹொ ஹொஹொஹோ
இது பின்னாலும் எந்நாளும் நில்லாமல் செல்லாதப்பா
அந்தக் கடவுளைக் கேட்டேன் தெரியவில்லை
ஒரு கவிஞனைக் கேட்டேன் விழிக்கின்றான்
உன்னிடம் கேட்டேன் நீ சொன்னாய்……
இளம் பருவம் என்பதென்ன
அதில் பார்வை சொல்வதென்ன
ஓர் இன்பம் என்பதென்ன
அதில் இருவர் காண்பதென்ன
இந்த ஆசை நாடகம் இல்லாமல்
உன்னாலும் என்னாலும் ஆகாதையா
அதைக் கொள்ளாமல் சொல்லாலே
சொன்னாலே தீராதையா

.png)
No comments:
Post a Comment