Wednesday, March 18, 2026

மகாகவி பாரதியார் பாடல் - ஜய பேரிகை கொட்டடா! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்



இசை & குரல்: SUNO AI  ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன் 



ஜய பேரிகை கொட்டடா -- கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா! 
           
பயமெனும் பேய்தனை யடித்தோம் -- பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்.

ஜய பேரிகை கொட்டடா -- கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா! 

இரவியி னொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்.     

ஜய பேரிகை கொட்டடா -- கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா! 

காக்கை, குருவி எங்கள் ஜாதி -- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.     

ஜய பேரிகை கொட்டடா -- கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா! 

No comments:

அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய குறிப்புகள்! - வ.ந,கிரிதரன் -

[காலம்' செல்வத்தின் ஏற்பாட்டில் இன்று டொரோண்டோ, கனடாவில் நடந்த 'வாழும் தமிழ் நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் ' ...