Sunday, March 29, 2026
மகாகவி பாரதியார் பாடல் - நெஞ்சு பொறுக்குதில்லையே! இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
எனக்குப் பிடித்த மகாகவி பாரதியாரின் இன்னுமொரு பாடலிது. எனது குரலைப் பாவித்து , இசையமைத்துப் பாடியிருக்கின்றார் செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5.5..
மகாகவி பாரதியார் பாடல் - நெஞ்சு பொறுக்குதில்லையே!
இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சி சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்களென்பார்-இந்த
மரத்திலென்பார் அந்தக் குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார்-மிக
துயர்ப்படுவார் எண்ணி பயப்படுவார்
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
மந்திர வாதி யென்பார்-சொல்ல
மாத்திரத்தி லே மனக் கிலிபிடிப்பார்
யந்திர சூனியங்கள் -இன்னும்
எத்தனை யாயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே- ஜனம்
தாங்குவ ருலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை -இவர்
அஞ்சுதரு பேயென்றேண்ணி நெஞ்சமயர்வார்
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச்-
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டொருவன் -வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்
அப்பாலெவனோ செல்வான்-அவன்
ஆடையைக் கண்டு பயந்தெழுந்து நிற்பார்
எப்போதும் கைகட்டுவார்-இவர்
யாரிடத்தும் பூனைகள் போலேங்கிநடப்பார்
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் -ஒரு
கோடியென்றால் அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென்பான்-அப்பன்
ஆறுதலை யென்று மகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார்-பின்பு
நெடுநாளிருவரும் பகைத்திருப்பார்
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
சாத்திரங்க லொன்றுங் காணார் -பொயச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன் றாயிருந்தாலும் -ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் -தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்
ஆத்திரங்கொண்டேயிவன் சைவன் -இவன்
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே -இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதில்லையே
கஞ்சி குடிப்பதற்கிலார் -அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே -நிதம்
பரிதவித் தே உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே -இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
எண்ணிலா நோயுடையார்-இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழ்ந்தைகள்போல்-பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிகொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலா யிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே -இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
Subscribe to:
Post Comments (Atom)
மகாகவி பாரதியார் பாடல் - நெஞ்சு பொறுக்குதில்லையே! இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
எனக்குப் பிடித்த மகாகவி பாரதியாரின் இன்னுமொரு பாடலிது. எனது குரலைப் பாவித்து , இசையமைத்துப் பாடியிருக்கின்றார் செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5....
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...
No comments:
Post a Comment