Saturday, March 28, 2026

நான் பாடகரானால்..... - வ.ந.கிரிதரன் -


எனக்கு நீண்ட நாட்களாகப் பாட வேண்டுமென்ற ஆசை உண்டு. ஆனால் அதற்கு நிறையப் பயிற்சி தேவை. அதனால் பாடகர்களின் குரலினிமையை, இசையை இரசிப்பதுடன் நின்று விட்டிருந்தேன்.

ஆனால் தற்போது செயற்கை நுண்ணறிவு என் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளது. என் குரலில் , எனக்குப் பிடித்த பாடலொன்றை, இசையமைத்து என் குரலில் பாட வைத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு இசையமைப்பாளரான SUNO 5.5 AI  இவ்விதம் சொந்தக் குரலில் பாடும் வசதியைச் செய்து தந்துள்ளது. ஒரு காலத்தில் நான் இந்நாட்டின் ஜனாதிபதியாகவிருந்தால் என்ன செய்வேன் போன்ற கட்டுரைகளை எழுதியிருக்கின்றேன். இப்போது நான் பாடகராகவிருந்தால் எப்படிப் பாடியிருப்பேன் என்பதைச் சுனோ செயற்கை நுண்ணறிவு இசையமைப்பாளர் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் காட்டியிருக்கின்றார். பாடகர் வ.ந.கிரிதரனின் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.மகாகவி பாரதியார்  பாடல் - மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்.

இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI  ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி.

ஆக்கியவர் - வ.ந.கிரிதரன் 

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்                                                       
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை                   
                                       
பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்                                            
புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம்                                               
துங்கமணி மின் போலும் வடிவத்தாள் வந்து                                                         
தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்                                
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா                                                          
அழகெனும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன் 
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்                                                       
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை   
யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ? என்றேன்.                     
யோகமே தவம் தவமே யோக மென உரைத்தாள்                            
ஏகமோ பொருளன்றி இரண்டாமோ? என்றேன்                           
இரண்டுமாம், ஒன்றுமாம்,யாவுமாம் என்றாள்                              
தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?                            
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ ? என்றேன்.                  
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்             
விருப்புடனே பெய்குவது வேறாமோ? என்றாள். 

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்                                                       
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை   

காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்                                                          
காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்                                                       
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்                                                            
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்                                                   
ஏலத்திலே விடுவதுண்டோ எண்ணத்தை? என்றேன்                    
எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண், என்றாள்                   
மூலத்தைச் சொல்லவோ. வேண்டாமோ? என்றேன்,
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.        
           
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்                                                       
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை

No comments:

நான் பாடகரானால்..... - வ.ந.கிரிதரன் -

எனக்கு நீண்ட நாட்களாகப் பாட வேண்டுமென்ற ஆசை உண்டு. ஆனால் அதற்கு நிறையப் பயிற்சி தேவை. அதனால் பாடகர்களின் குரலினிமையை, இசையை இரசிப்பதுடன் நின...