Friday, March 20, 2026

மகாகவி பாரதியார் பாடல் - புதிய கோணங்கி! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்


மகாகவி பாரதியார்  பாடல் - புதிய கோணங்கி

இசை & குரல்: SUNO AI  ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன் 


குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது.
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது.
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு. 

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது.

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது.
படிப்பு வளருது;பாவம் தொலையுது.
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்.
போவான்,போவான்,ஐயோவென்று போவான்.

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது. வேத புரத்திலே வியாபாரம் பெருகுது.
தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்.
சாத்திரம் வளருது;சூத்திரம் தெரியுது.
யந்திரம் பெருகுது;தந்திரம் வளருது.

மந்திர மெல்லாம் வளருது,வளருது.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
சொல்லடி,சொல்லடி,மலையாள பகவதீ.
அந்தரி,வீரி,சண்டிகை,சூலி.
குடுகுடு குடுகுடு .

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.

சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது.
தொப்பை சுருங்குது,சுறுசுறுப்பு விளையுது.
எட்டு லச்சுமியும் ஏறி வளருது.
சாத்திரம் வளருது,சாதி குறையுது.
நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது.

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது.

பழைய பயித்தியம் படீலென்று தெளியுது.
வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது.
சொல்லடி சக்தி,மலையாள  பகவதி.
தர்மம் பெருகுது,தர்மம் பெருகுது. 

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.

No comments:

கருந்துளை (Black Hole) குறும்படம் பார்த்தேன்! என்னையும் அதற்குள் இழந்தேன்!

[ "THE BLACK HOLE" Short Film Pick Featured by NineJunctions Written & Directed by Philip Sansom & Olly Williams (Phil and...