Thursday, February 26, 2026
அஞ்சலி: பொதுவுடமைக் கட்சியின் தலைவர் இரா. நல்லகண்ணு மறைந்தார்!
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் முன்னாள் செயலாளருமான இரா. நல்லகண்ணு அவர்கள் பெப்ருவரி 25, 2026 அன்று, தனது நூறாவது வயதில் மறைந்தார். தனது பதினெட்டாவது வயதிலிரிந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டவர். இந்தியாவில் ஆங்கிலேயருக்கெதிராகப் போராடிய சுதந்திர வீரர். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது நெல்லை சதி வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுச் சிறை வாசம் அனுபவித்தவர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீங்கியபோது விடுதலை செய்யப்பட்டார். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர்.
பல விடயங்களில் இவர் உதாரண மனிதராக விளங்கினார். இவரது எண்பதாவது பிறந்ததினத்தின் போது கட்சி இவருக்கு ஒரு கோடி ரூபா நிதி வசூலித்துக் கொடுத்தது. அதனை இவர் கட்சிக்கே கொடுத்து விட்டார். தமிழக அரசு அம்பேத்கார் விருதாக ஒரு இலட்சம் ரூபா வழங்கியபோது அதில் பாதியைக் கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் வழங்கினார். மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் ஜீவா விருது, தமிழக அரசின் அம்பேத்கார் விருது உட்படப் பல விருதுகளையும் பெற்றிருக்கின்றார். தீண்டாமைக்கொடுமைக்கெதிராக வாழ்நாள் முழுவதும் போராடியவர் இரா.நல்லகண்ணு அவர்கள். அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரில் 'பதிவுக'ளும் பங்குபற்றுகின்றது. ஆழ்ந்த இரங்கல்!
Subscribe to:
Post Comments (Atom)
செம்மீன் பற்றி எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் கருத்தும் , என் எதிர்வின்
தகழி சிவசங்கரப் பிள்ளை எனக்குப் பிடித்த 10 நாவல்கள் பற்றியொரு முகநூற் பதிவு இட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் Tamil Journa...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
No comments:
Post a Comment