Tuesday, February 10, 2026

காலத்தால் அழியாத கானம்: 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி'


காலத்தால் அழியாத கானங்களில் ஒன்றான  இது போன்ற உயிர்த்துடிப்புள்ள பாடல்களை, வரிகளையெல்லாம் மறக்கத்தான் முடியுமா? .  பாடகி பி. சுசீலா அவர்களின் சிறந்த பாடல்களில் நிச்சயம் இடம் பெறும் பாடல் 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி' .   கவியரசர் கண்ணதாசனின் சிறந்த பாடல்களில் ஒன்று.  கவிஞர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி , பி.சுசீலா கூட்டணியில் உருவான சிறந்த  பாடல்களிலும் இடம் பிடிக்கும் பாடல்.

விதவைப்பெண் ஒருத்தியின் உணர்வுகளை அற்புதமாக இதைவிட யாழ் எழுத்தில்  எழுத்தில் வடிப்பார்?   கவிஞரின்  வரிகளுக்கு உயிரூட்டி நடித்திருக்கின்றார் செளகார் ஜானகி.  அவரை நினைத்தால் நினைவுக்கு வரும் பாடல்களில் ஒன்றாகவும் இப்பாடலைக் கூறலாம். நினைவில் நிலைத்து வரிகள் பல.  எளிமையான  சொற்களைப் பாவித்து , ஆழமான அக உணர்வுகளை , மனித  அனுபவங்களை வெளிப்படுத்துவதில் கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே.

தெளிவான வண்ணத்தில் 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி' பாடலைக் கேட்டு , இரசிப்பதிலும் சுகமுண்டு. 

https://www.youtube.com/watch?v=Ph5Z-vPxFEs

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி

No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...