Sunday, February 8, 2026

வ.ந.கிரிதரன் பாடல்கள் யு டியூப் சானல்! வரவேற்கின்றோம்!


நண்பர்களே! 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' என்னும் எனது  'யு டியூப் சானலு'க்கு உங்களை வரவேற்கிறேன். செயற்கை நுண்ணறிவை (AI) நாம் அனைவரும் ,பல் துறையில் இருப்பவர்களும், பொது மக்களும் ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் இந்தச் 'சானல்'.  

எனக்கு என் பாடல்களை இசையமைத்துப் பாடுவதைப் பார்க்க விருப்பமாகவிருந்தது.  அதைச் சாத்தியமாக்கியுள்ளது செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவின் துணை இல்லாவிட்டால் என்ன  நடந்திருக்கும்?  நான் ஓர் இசைக்குழுவின் உதவியை, பாடகர் உட்பட,  நாடியிருக்க வேண்டும். அது மிகவும் இலகுவானதொன்றல்ல. அது பெரும்பொருட்செலவை வேண்டி நிற்பது.  இவ்விதமானதொரு சூழலில்தான் எனக்கு செயற்கை நுண்ணறிவு உதவிக்கு வந்தது.SUNO என்னும் செயற்கை நுண்ணறிவு உங்கள் பாடல் வரிகளுக்கு , நீங்கள் விரும்பியவாறு இசையமைத்து , விரும்பிய குரலில் பாடித்தரும். இது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது.  உவப்பைத்  தருகின்றது. பாடல்களுக்குப் பாவித்துள்ள ஓவியங்களையும் உருவாக்கித்  தந்தது கூகுளின் செயற்கை நுண்ணறிவான நனோ பனானா  தொழில் நுட்பமே.

நீங்களும் இவ்விதம் செயற்கை நுண்ணறிவை உங்களுக்குப் பயன்படும் வகையில் பாவித்துப் பயனடையுங்கள். வாழ்த்துகள்.

உங்கள் அனைவரையும் இச்சானலுக்குச் சென்று இவ்வாறு இசைய்மைத்துப் பாடப்பட்ட பாடல்களைக் கேட்டுப் பாருங்கள்.  உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் சப்ஸ்கிரைப் (Subscribe)  செய்து ஆதரவை  வழங்குங்கள். உங்கள் ஆதரவு மேலும் பல என் பாடல்களை உருவாக்கிப் பகிர்ந்துகொள்ள வழி வகுக்கும். 'Subscribe' செய்வதற்கு நீங்கள் பண்ம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. உங்களிடம் கூகுள் ஜி மெயில் கணக்கு இருந்தால் போதுமானது, கூகுள் கணக்கில் நுழைந்து பின்னர் சப்ஸ்கிரைப் பட்டனை அழுத்துங்கள்.  

உங்கள் கருத்துகளில் பாடல்களில் உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் எவை, பிடிக்காதவை எவை போன்ற விடயங்களை அறியத்தாருங்கள்.  என் சானலுக்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1 

1. பாடல் ஒன்று: காலவெளி நானன்றோ கண்ணா - https://www.youtube.com/watch?v=k_wjTLQ4-Kg
2. இயற்கையைப் பேணுவோம் - https://www.youtube.com/watch?v=--s_We6LiGg
3. நீலவண்ணக் கோள் ஓர் அற்புதம் - https://www.youtube.com/watch?v=W4t0pKTiD00
4. அன்பின் வலிமை - https://www.youtube.com/watch?v=rjuCsPqCjLY
5. மனத்தை மயக்கும் நிலா - https://www.youtube.com/watch?v=ScfWI_dVoyw

உங்கள் ஆதரவுக்கு நன்றி.  

No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...