Thursday, February 19, 2026

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!



 

காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர்.  AI  அதிக அளவு மின்சாரத்தை எடுக்கின்றது.  நிலக்கரி போன்ற எரிபொருட்களை எரிப்பதன் மூலம் இம்மின்சாரம் உற்பத்தியாவதால் வளியில் காபனீரொட்சைட்டு அதிகமாகின்றது.  இவ்விதமாகப் பலரும் உரிமைக்குரல் எழுப்பத்தொடங்கி விடுகின்றார்கள். இவர்கள் உரிமைக்குரல் எழுப்புவது பாராட்டுக்குரியது. ஆனால் இவர்கள் இவற்றைப்பாவிப்பதைக் குறைத்து விடப்போகின்றேன் என்று கூறுவது போலித்தனமானது. இவர்கள் நிச்சயம் இதன் பயனைப் பாவிக்காமல் இருக்கப்போவதில்லை. அப்படிச் சூழலைப் பாதிப்பதைத் தடுப்பது இவர்களின் முக்கிய நோக்கமென்றால் இவர்கள் செய்ய வேண்டியவை  பின்வரும் தொழில் நுட்பங்களையெல்லாம் நிராகரித்து விடுவது. 

1. குளிர்சாதனப் பெட்டிகளைப் பாவிப்பதைத் தவிர்க்க வேண்டும்.   குளிர்சாதனப் பெட்டிகள் பாவிக்கப்படும்  குளோரோபுளோரோகார்பன்கள் (CFCs) , ஹைட்ரோபுளோரோகார்பன்கள் (HFCs)  ஓசோன் படலத்தைச் சிதைக்கின்றன.  அதிக வெப்பத்தை உருவாக்குகின்றன. இவையும் நில்லக்கரி போன்ற எரிபொருட்களிலிருந்து அதிக மின்சாரத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கார்பனை வளி மண்டலத்துக்கு அனுப்புகின்றன. மேலும் இவை முறையாக மறு சுழற்சி செய்யப்படாதபோது இவற்றிலுள்ள் நச்சுப்பொருட்கள் மண்ணிலும்,ம் காற்றிலும் கலந்து மாசு படுத்துகின்றன.

2. அலைபேசிக்கோபுரங்களிலிருந்ந்து வெளியாகும் மின்காந்த அலைவீச்சு (Electromagnetic radiation) பறவைகள் மற்றும் பூச்சிகளின் இருப்பை,  ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. குறிப்பாகச் சிட்டுக்குருவிகள் போன்ற பறவைகளின் நரம்பு மண்டலத்தையும், முட்டையிடும் திறனையும் பாதிப்பதாகக் கூறப்படுகிறது 

3. இவை போல் கணணிகள், மோட்டார் வாகனகள் என நாம் பாவிக்கும் தொழில் நுட்பங்கள் எல்லாமே நாம் வாழும் சூழலைப் பாதிக்கின்றன.  நாம் இருப்பதற்காகக் காடுகளை ஒவ்வொரு நாளும் அழித்து வருகின்றோம், கட்டடங்களால் நிறைத்து  வருகின்றன.

இவ்விதம்  கூறிக்கொண்டே போகலாம். இந்நிலையில் நாம் என்ன செய்யலாம்?

யாருமே அலைபேசிகளைப் பாவிக்காமல் இருக்கப்போவதில்லை. யாருமே கணனிகளை, குளிர்சாதனப்பெட்டிகளை, AI  தொழில் நுட்பத்தைப்பாவிக்காமல் இருக்கபோவதில்லை. இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நாம் பாவிக்காமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவற்றால் ஏற்படும் சூழல் பாதிப்புகளைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைக்கண்டறிய வேண்டும்.  புதிய தொழில் நுட்பங்கள் மானுட் வாழ்க்கைக்கு முக்கியமானவை. தவிர்க்க முடியாத வகையில் அவற்றின் எதிர்விளைவுகள் நாம் வாழும் சூழலைப் பாதிக்கின்றன, சமூக, வாழ்க்கையைப் பாதிக்கின்றன.   எதிர்மறை விளைவுகளைக் குறைப்பதற்கு வழிகள் கண்டறியப்பட வேண்டுமே தவிர. இத்தொழில் நுட்பங்களை நிராகரிக்க வேண்டுமென்று கோர முடியாது. 

"Digital Art using Google AI  by VNG.



No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...