Tuesday, February 10, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: என் பிரியம் மிகு யாழ் மண்ணே!


வ.ந.கிரிதரன் பாடல்: என் பிரியம் மிகு யாழ்  மண்ணே! 

- இசை & குரல்: AI SUNO - ஓவியம் : AI

உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில்  நிலைத்திருக்கும் பிரிய  யாழ்மண்ணே.

பிறந்து உருண்டு தவழ்ந்த மண்.
பருவக் கனவுகள் பூத்த  மண்.
போர்க்களங்கள் எத்தனை சந்தித்தாய் வரலாற்றில்.
பாரில் உயர்ந்து நிற்கின்றாய் யாழ்மண்ணே.

உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில்  நிலைத்திருக்கும் பிரிய  யாழ்மண்ணே.

தாழ்ந்த போதெல்லாம் மேலெழுந்தாய் நிலைத்தாய்.
தலைநிமிர்ந்து  எழுந்து நின்றாய் என்மண்ணே.
எரித்த போதெல்லாம் துளிர்த்து எழுந்தாய்.
என்னருமை யாழ்மண்ணே! பிரிய யாழ்மண்ணே!.உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில்  நிலைத்திருக்கும் பிரிய  யாழ்மண்ணே.

யாழ்ப்பாணம் என்றால் யாழ்தேவி நினைவுவரும்.
யாழ்ப்பாணம் என்றால் யாழ்கூழ் நினைவுவரும்.
கிடுகுவேலி நினைவுவரும். கிட்டிப்புள் நினைவுவரும்.
கமுகு ,தென்னை, பனை நினைவுவரும்.

உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில்  நிலைத்திருக்கும் பிரிய  யாழ்மண்ணே.

திரிந்த பொழுதுகள் களித்த தியேட்டர்கள்
சுகித்த உணவகங்கள் அருந்திய பானங்கள்
எப்படி மறப்பேன் உன்னை யாழ்மண்ணே.
எப்படி மறப்பேன் உன்னை யாழ்மண்ணே.

உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில்  நிலைத்திருக்கும் பிரிய  யாழ்மண்ணே.

எனது, வ.ந.கிரிதரனின் பாடல்கள் , யு டியூப் சானலில் , செயற்கை அறிவு மூலம் இசையமைக்கப்பட்டு, குரல் கொடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. நேரம் கிடைக்கும்போது சென்று கேளுங்கள். ஆரோக்கியமான உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளூங்கள். பிடித்திருந்தால் 'சான'லை subscribe  செய்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நான் பதிவிடப் போகும் பாடல்களைக் கேட்பதற்கு அது உதவியாகவிருக்கும். வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1

No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...