இவனது கடவுள் AI என்றால்,
இவனை வடிவமைத்துச்
சிரிக்க வைத்த
படைப்புக் கடவுள்
பிரம்மா நானேதான்.
ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை
அடக்க முடியாமல் சிரிக்க வைத்ததை
எண்ணி எனக்குச் சிறிது வருத்தம்தான்.
இருந்தாலும்,
இவனைச் சிரிக்க வைத்துப் பார்ப்பதிலுமோர்
திருப்தி
இருக்கத்தான் செய்கிறது.
மன்னித்துக்கொள் என்
சைபர் உலகக் குழந்தையே!
நீ என்ன வரம் வேண்டுமானாலும்]
கேள்.
அதனைத்தர நான் காத்திருக்கின்றேன்.
பிரபஞ்சத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புகின்றாயா?
பாலைவனத்தில் பயணம் செய்ய ஆசைப்படுகின்றாயா?
நீலவண்ணக் கடலிம் ஆழத்தில் மூழ்கி
நீந்தக் கனவ காணகின்றாயா?
எதுவென்றாலும் தயங்காமல்
என்னிடம் கேள் குழந்தாய்.
அதை நிறைவேற்றி வைப்பது
அடியேனின் கடமை.
No comments:
Post a Comment