Tuesday, June 2, 2026

விஞ்ஞான அறிவு நூல்களை வெளியிட்ட ஹிக்கின்பாதம்ஸ் பதிப்பகம்!


 

என் பதின்ம வயதுகளில் நான் யாழ் பொதுசன நூலகத்தில் விரும்பி வாசித்த நூல்களில் அறிவியல் நூல்களுக்கும் முக்கிய இடமுண்டு. இது பற்றி எனது பல முகநூற் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். நூலகம் பற்றிய பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்:

"நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இந்த நூலகத்தில் எத்தனையோ அறிவியல் நூல்களைப் படித்திருக்கின்றேன். மிகவும் அழகாக விஞ்ஞானத்தின் பல்வேறு பிரிவுகளிலும் நூல்களை அக்காலகட்டத்தில் சென்னையிலுள்ள பதிப்பகமொன்று வெளியிட்டுக்கொண்டிருந்தது. 'பெளதிகத்தின் வரலாறு', 'கடலின் வரலாறு', 'உயிரினங்களின் வரலாறு',.. என்பது போன்ற தலைப்புகளிருக்கும். 

'பெளதிகத்தின் வரலாறு' என்னுமந்த நூலில் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற சக்திக்கும், பொருளுக்குமிடையிலான தொடர்பினை வெளிப்படுத்தும் சூத்திரத்தை, ஒளித்துகளுக்கு உந்தம் மற்றும் இயக்கச்சக்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய சூத்திரங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நிறுவியிருந்தது இன்னும் பசுமையாக மனதிலுள்ளது. '... இவ்வகையான அறிவியல் நூல்கள் எங்கள் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. மேற்படி விஞ்ஞான நூல்களில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் பிரசுரமான அறிவியல் நூல்களின் தரமான மொழிபெயர்ப்புகளே. "



இவ்விதம் அதிக அளவில் அறிவியல் நூல்களை வெளியிட்ட , இதுவரை ஞாபகம் வராமலிருந்த அந்தப்  பதிப்பகத்தின் பெயரை இப்போது அறிந்து கொண்டேன். அண்மையில் என் முகநூல் நண்பர்களில் ஒருவரான , பழைய புத்தகங்களை விற்கும் 'veryrarebook' பக்கத்தை வைத்திருப்பவர் இரசாயனம் பற்றிய விஞ்ஞான நூலொன்று பற்றி பதிவொன்றினை இட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த அந்த நூல் அவ்விதம் நான் வாசித்த விஞ்ஞான நூல்களில் ஒன்று. 

விஞ்ஞான அறிவு நூல் என்னும் வரிசையில் தொடராக அப்பதிப்பகம் விஞ்ஞான நூல்களை வெளியிட்டது. அப்பதிப்பகத்தின் பெயர் - ஹிக்கின்பாதம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்'.

அந்தப்பதிப்பகம் செய்த பணி மிக முக்கியமானது. அது வெளியிட்ட நூல்களைப் போன்ற நூல்கள் ஏன் தற்போது அதிகம் வெளிவருவதில்லை? அப்பதிப்பகத்தின் பெயரை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்த veryrarebook நணபருக்கு நன்றி.


 



No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...