Sunday, June 7, 2026

''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' - எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஷ்!


''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' என்று குறிப்பிட்டு,  என் பால்யப் பருவத்து நண்பரும், ஶ்ரீராம் விக்னேஷ் என்னும் பெயரில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்டவருமான நண்பர் வவுனியா விக்கி இவ்வழகிய மேகங்களில் தாலாட்டில் மெய்ம்மறந்திருக்கும் மேற்குத்  தொடர்ச்சி மலையினை தன் அலைபேசிக் கமராவுக்குள் அகப்படுத்தி  அனுப்பியிருந்தார்.

நெஞ்சைக் கொள்ளும் இயற்கையின் வனப்பில் நானும் மெய்ம்மறந்தேன். விக்கி சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட.  அதனை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் இவை. 

எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஷ் (வவுனியா விக்கி) -


இன்று நண்பருக்குப் பிறந்தநாளும் கூட. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விக்கி. இயற்கையின் தாலாட்டில் , மேகங்களின் அரவணைப்பில் தன்னை மெய்ம்மறந்து கிடக்கும் மலைத்தொடரின் அழகில் எம்மையும் மெய்ம்மறக்க வைத்ததற்கு நன்றியும் கூட.

மேற்குத்தொடர் மலையின் ஒரு பகுதியான கொடைக்கானல் எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் 'பொன் விலங்கு' நாவலை நினைவூட்டுகின்றது. உண்மையில் நாவலில் அவர் கொடைக்கானல் என்னும் பெயரைப் பாவித்திருக்க மாட்டார், மல்லிக்கைப்பந்தல் என்றே குறிப்பிட்டிருப்பார். ஆனால் அதனை அவர் கொடைக்கானலுக்காகவே பாவித்திருக்க வேண்டுமென்று உணர்வதுண்டு. ஏனென்றால் மல்லிக்கைப்பந்தலும் மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள நகரம். 

 மேற்குத்  தொடர் மலைத் தொடர் பற்றி விக்கிபீடியா:

இந்தியாவின் தீபகற்பப் பகுதியில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats), உலகின் தலைசிறந்த எட்டு பல்லுயிர் வலயங்களில் (Biodiversity Hotspots) ஒன்றாகும். இது இமாலய மலைகளை விடப் பழமையானது.

 

 அமைவிடம் மற்றும் பரப்பளவு:தொடக்கம்: குஜராத் - மகாராஷ்டிரா எல்லையிலுள்ள தபதி ஆற்றுக்குத் தெற்கில் தொடங்கி, கோவா, கர்நாடகா, கேரளா, மற்றும் தமிழ்நாடு வழியாக கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது.

நீளம் மற்றும் உயரம்: இதன் மொத்த நீளம் சுமார் 1,600 கி.மீ ஆகும். சராசரி உயரம் சுமார் 900 மீட்டர்கள்.

சுற்றுச்சூழல் சிறப்பு:யுனெஸ்கோ அங்கீகாரம்: இந்த மலைத்தொடர் அதன் தனித்துவமான இயற்கைச் சூழலுக்காக யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லுயிர் வளம்: தாவரங்கள், பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன வகைகளில் அரிய மற்றும் ஆபத்தான உயிரினங்கள் பல இம்மலைகளில் வாழ்கின்றன.

வானிலை கட்டுப்பாடு: இந்திய பருவமழை முறையை வடிவமைப்பதிலும், தட்பவெப்ப நிலையை சமநிலைப்படுத்துவதிலும் இந்த மலைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

ஆற்றின் பிறப்பிடம்: இந்தியாவின் மிக முக்கிய ஆறுகளான கோதாவரி, கிருஷ்ணா, மற்றும் காவேரி போன்ற ஜீவநதிகள் இம்மலையில்தான் உற்பத்தியாகின்றன.

முக்கிய சிகரங்கள் மற்றும் மலைவாழிடங்கள்: தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலை மற்றும் பழனி மலைகள், மற்றும் கேரளாவில் அமைந்துள்ள ஆனைமுடி (தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்) ஆகியவை இதன் முக்கிய பகுதிகளாகும்.ஊட்டி, கொடைக்கானல், மூணாறு போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன.மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த முழுமையான விவரங்களை UNESCO உலக பாரம்பரிய மையம் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தளங்களில் நீங்கள் காணலாம். 

 மேற்குத்தொடர் மலை 

 

 



 

No comments:

''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' - எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஷ்!

''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' என்று குறிப்பிட்டு,  என் பால்யப் பருவத்து நண்பரும், ஶ்ரீராம...