Tuesday, August 18, 2026

தமிழகமும் , ஊழலும்!


தமிழக வெற்றிக்கழகம் தமிழ் நாட்டில் ஊழலை ஒழித்து விட்டதாகக் கதைக்கின்றார்களே, அது உண்மையா?  ஆராய்ந்து பார்த்தால் ஓரளவு உண்மை உண்டு.ஓரளவு பொய் உணடு.அதெப்படி வடிவேலு பாணியில் பதிலளிக்கின்றேன் என்று பார்க்கின்றீர்களா? இதோ என் விளக்கத்தைத் தெளிவாகக் கூறுகின்றேன். புரிந்து கொள்வீர்கள். இதற்கு உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிலவும் ஊழல் பற்றிய  அறிவைப்பெற்றிருப்பது அவசியம்.

ஊழலை இரு விதங்களாகப் பிரித்துபார்க்கலாம்: ஒன்று அரச அலுவலங்களில் ,அதிகாரிகள் மட்டத்தில் நிலவும் ஊழல்,  இதனை கீழ்மட்ட ஊழல் அல்லது Petty Corruption என்று குறிப்பிடலாம். அடுத்தது மேல் மட்டங்களில் நடைபெறும் ஊழல். இதனை  Grand Corruption என்பர். பெருந்திட்டங்களை அமுல்படுத்துகையில் அமைச்சர்கள் போன்ற மேலமட்ட அரசியல்வாதிகள் குறிப்பாக அமைச்சர்கள் மத்தியில்  நிலவும் ஊழல். 

தற்போது தமிழகத்தில் முதல்வர் விஜய் ஊழலை ஒழித்து விட்டதாகப் பெருமை பேசுவது கீழ்மட்ட ஊழலைத்தான். ஏனென்றால் இவ்வகையான ஊழலைத்தான் சாதாரணப் பொதுமக்கள் அன்றாடம் உணர்ந்து கொள்கின்றார்கள்.

இந்த ஊழலை விட மிகவும் அதிகமாக நாட்டைப் பாதிப்பது  மேல்மட்ட ஊழல்தாம். இந்த ஊழலை உடனடியாக மக்கள் உணர்ந்து கொள்ள முடியாது. அன்றாட அனுபவங்களில் உணர்ந்து கொள்ளப் பல வருடங்கள் பிடிக்கும்.இதற்கு உதாரணமாக இலங்கையில் ராஜப்க்ச் குடும்பத்தினர் புரிந்ததாகக் கருதப்படும் ஊழலைக் குறிப்பிடலாம். பல வருடங்களாக அவர்கள் இவ்வகையான ஊழல்களைப் புரிந்தும் , தொடர்ந்தும் ஆட்சியிலிருந்து வந்தார்கள். இறுதியில் என்ன நடந்த்து?

தற்போது தமிழக முதல்வரின் ஆட்சியில் கீழ் மட்ட ஊழலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியிருக்கின்றார்கள். மேல் மட்ட ஊழலைக் கட்டுப்படுத்தியிருக்கின்றார்களா?  முதல்வர் விஜய்யின் அரசின் கீழ் ஊழலே புரிய முடியாது என்றால் , ஏன் இவ்வளவு தூரம் ஏனைய கட்சிகளிலிருந்து அவரது அரசில் வந்து இணைகின்றார்கள்? ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் கீழ்மட்ட ஊழலைக்கட்டுபடுத்தியவாறு ஊழல் ஒழிந்து விட்டதாகப்  பிரச்சாரம் செய்துகொண்டே, மேல் மட்ட ஊழல் மூலம் உழைக்கலாம் என்பது. 

தமிழக பாஜக வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை இப்போதே அமைச்சர்கள் சிலர் புரியும் ஊழலைத் தன்னால் நிரூபிக்க முடியும் என்று அண்மைக்காலமாகக் கூறி வருகின்றாரே!  கவனித்தீர்களா? அவரது கூற்று தமிழகத்தில் ஊழல்  ஒழியவில்லை என்பதைத்தான்.

அரசின் மேல் மட்ட ஊழலைத்தடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். பெருந்திட்டங்களை அமுல்படுத்துகையில் எவ்விதம் அவை கைச்சாத்திடப்பட்டன, டெண்டர் கோரியதில் ஏதாவது முறை கேடுகள் நடந்துள்ளனவா போன்ற விடயங்களை எதிர்கக்ட்சிகளும், சமூக அமைப்புகளும், புலனாய்வு ஊடகவியலாளர்களும் கவனிக்க வேண்டும்.

No comments:

தமிழகமும் , ஊழலும்!

தமிழக வெற்றிக்கழகம் தமிழ் நாட்டில் ஊழலை ஒழித்து விட்டதாகக் கதைக்கின்றார்களே, அது உண்மையா?  ஆராய்ந்து பார்த்தால் ஓரளவு உண்மை உண்டு.ஓரளவு பொய்...