வ.ந.கிரிதரன் பாடல்: சவால்கள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி சவால்கள் கண்டு துவண்டிட மாட்டோம். சவால்கள் கண்டு மருண்டிட மாட்டோம். சவால்கள் இல்லாத இருப்பும் உண்டோ? சவால்கள் எல்லாம் புதிர்களே எமக்கு. புதிர்களை அவிழ்ப்போம். பெருமிதம் அடைவோம். பெருமிதம் அடைந்தே இருப்பினை வெல்வோம். சூழல்கள் கணமும் சவால்களைத் தருமே. சூழும் சவால்களை எதிர்த்தே நிற்போம். உறுதி மிக்கது தப்பிப் பிழைக்குமாம். உணர்ந்து கொள்வோம். உறுதியை வளர்ப்போம்.
சவால்கள் கண்டு துவண்டிட மாட்டோம்.
சவால்கள் கண்டு மருண்டிட மாட்டோம்.
உதிப்பதில் இருந்து இருப்பது வரையில்
உள்ள தெல்லாம் சவால்களே. சவால்களே.
ஒவ்வொரு விநாடியும் கலங்கள் பிறக்கும்.
ஒவ்வொரு விநாடியும் கலங்கள் இறக்கும்.
முடிவில் உண்டு விடிவு அறிவோம்.
முயற்சி செய்வதை ஒருபோதும் நிறுத்தோம்.
கடுகிச் செல்லுமே காலம் உணர்வோம்.
காலம் உணர்ந்தே ஞாலத்தில் களிப்போம்.
சவால்கள் கண்டு துவண்டிட மாட்டோம்.
சவால்கள் கண்டு மருண்டிட மாட்டோம்.
No comments:
Post a Comment